மத்திய கால நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் மனிதர்களுக்கு மத்தியில் இன வெறியை உண்டுபண்ணும் வகையில் தங்கள் வேத நூல்களில் நச்சுக் கருத்துக்களைச் சொருக ஆரம்பித்தனர் அதில் அவர்கள், மதகுருமார்களும், தூய்மையானவர்களும் சாமின் வழித்தோன்றலில் வந்தவர்கள் என்றும், குதிரை வீரர்கள் யாபேத்தின் வழித்தோன்றலில் வந்தவர்கள் என்றும், ஏழை எளியவர்கள் காமின் வழித்தோன்றலில் வந்தவர்கள் என்றும் வீண் புரளியைக் கிளப்பிவிட்டனர் 1964ஆம் ஆண்டு அமெரிக்க செனட்டராக இருந்த ரோபர்ட் பேய்ட் என்பவருக்கு மேற்கு வெஜினாவிலிருந்து ஓர் கட்டளை வந்தது தம் அரசியலை நீடிப்பதற்காக நோவாவின் வரலாற்றில் பயன்படுத்தப்பட்டு வரும் இனவேற்றுமைகளைக் களைந்து, நீதமாக ஆட்சிபுரியுமாறு கூறும் விதமாக அக்கட்டளை இருந்தது”