(70)நோவா விவசாயம் செய்து வந்தார் மாதுளை, திராட்சை போன்ற கனிகளையும் நட்டினார் திராட்சைக் கனிகள் காய்த்த போது, அதிலிருந்து மதுவைத் தயாரித்து, அதைக் குடித்து, மதுபோதையில் வீழ்ந்தார் அப்போது அவரின் ஆடைகள் விலகி நிர்வாணமாக இருந்தார் காம், தன்னுடைய தகப்பனின் நிர்வாணத்தைக் கண்ட போது அது அவனுக்கு வேடிக்கையாகவும், விநோதமாகவும் இருக்க, தன்னுடைய சகோதரர்களுக்கும் அதை வேடிக்கையாக அறிவித்து, பரியாசம் பண்ணினான் அவர்களிருவரும் இவரை ஓர் ஆடையால் அவரின் நிர்வாணத்தை மறைத்தனர் ஆனால் திராட்சை ரச வெறி தெளிந்து எழுந்த நோவா காம் தனக்குச் செய்ததை அறிந்து காமின் இளைய மகனான கானானைச் சபிக்கிறார் இவன் தன் இரு சகோதரர்களின் அடிமையாகத் தான் இருக்கப்போகிறன் சேமும், யாபேத்தும் தேவ கிருபை பெற்றவர்கள் எனக் கூறினார்” (ஆதியாகமம்)பாபிலோனிய தல்மூதில் இதற்கு பின்வருமாறு விளக்கம் கூறப்பட்டுள்ளது, கானான் அல்லது காம் நோவாவுடன் ஓரினக்கச் செய்கையில் ஈடுபட்டிருக்கலாம் அதனால் தான் நோவா சபித்தார் ஓர் சங்கையான தீர்க்கதரிசிக்கு இவை எதுவும் ஏற்படாது” (ஸென்ஹிட்ரன், பக்கம் 70)