முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஐரோப்பாவில் செரிந்து வாழும் இத்தருணத்தில் ஐரோப்பாவில் இஸ்லாத்தின் தாக்கம் பற்றி ஆய்வை மேற்கொள்வது பொருத்தமான ஒன்றாக இருக்கின்றது ஏனெனில் மத்திய நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ எழுத்தாளர்கள் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிராக பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் இஸ்லாத்தை விசமர்சித்து பல புத்தகங்களை எழுதினர் கடந்த சில தசாப்தங்களாக பலரும் இஸ்லாத்தின் அப்படி என்னதான் இருக்கின்றது என்னும் ஆவலில் அதைப் பற்றி ஆராய ஆரம்பித்துள்ளனர் இதன் முடிவுகள் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்திருந்தது முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான உறவை பலப்படுத்தியுள்ளது இவ்வாறிருந்தும் இன்னும் நாம் இஸ்லாத்தை எதிர்க்க ஆரம்பித்தால் எம்மைப் போன்ற ஏமாலிகள் வேறு எவரும் கிடையாது