- ஏமாற்றத்தின் அடையாளம்
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஐரோப்பாவில் செரிந்து வாழும் இத்தருணத்தில் ஐரோப்பாவில் இஸ்லாத்தின் தாக்கம் பற்றி ஆய்வை மேற்கொள்வது பொருத்தமான ஒன்றாக இருக்கின்றது ஏனெனில் மத்திய நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ எழுத்தாளர்கள் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிராக பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் இஸ்லாத்தை விசமர்சித்து பல புத்தகங்களை எழுதினர் கடந்த சில தசாப்தங்களாக பலரும் இஸ்லாத்தின் அப்படி என்னதான் இருக்கின்றது என்னும் ஆவலில் அதைப் பற்றி ஆராய ஆரம்பித்துள்ளனர் இதன் முடிவுகள் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்திருந்தது முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான உறவை பலப்படுத்தியுள்ளது இவ்வாறிருந்தும் இன்னும் நாம் இஸ்லாத்தை எதிர்க்க ஆரம்பித்தால் எம்மைப் போன்ற ஏமாலிகள் வேறு எவரும் கிடையாது
- தகுந்த தளபதி எங்கே
இஸ்லாத்தைப் பற்றி தெளாவகப் பேசக்கூடிய ஓர் தளபதி தோன்றினால், மீண்டும் ஒரு முறை தனது பலத்தால் உலகை ஆழும் தன்மை முஸ்லிம்களுக்கு ஏற்படும்”
- புத்திக் கூர்மையான தீர்வுகள்
அல்குர்ஆன் நவீன காலத்தில் ஏற்படும் பொருளாதார, சமூக, பண்பாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குச் சிறந்த, கூர்மையான தீர்வுகளை முன்வைக்கின்றது இதனால் தான் முஹம்மதின் தூதுத்துவம் வெகு விரைவிலே அக்காலத்தில் மக்கள் மத்தியில் வெற்றி கண்டது என் கருத்துப்படி, அல்குர்ஆனின் விழுமியங்களை எம்மாலும் பின்பற்றிப் பார்க்கலாம்”
- நீதம்
முஹம்மத் பல இன்னல்களையும், துன்பங்களையும் சுமக்கக் காரணம், அவரின் உறுதியான கொள்கைகளும், அதீத நற்பண்புகளும், அவரை விசுவாசம் கொண்டு, தலைவராக ஏற்றிருந்த மக்களுமே இவை அவரின் நீதத்திற்கும், நேர்மைக்கும் ஆதாரங்களாகும் முஹம்மத் சமூகத்தில் பல பிளவுகளை உண்டுபண்ணி, தீர்க்க முடியாத பல பிரச்சினைகளைத் தோற்றுவித்தார் என பலர் வாதிடுகின்றனர் அவர்கள் வரலாறுகளைக் கொஞ்சம் புறட்டிப் பார்க்கட்டும் அங்கு முஹம்மதின் ஆழுமைக்கு நிகரான ஒரு மனிதரையேனும் அவர்களால் கண்டுகொள்ள முடியுமா என்று”