முஹம்மத் என்பவர் அரேபிய தீபகற்பத்தின் தலைவராகத் திகழ்ந்தார் அவர் யாரையும் பட்டப்பெயர் கூறி அழைத்ததில்லை தான் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டுமென நினைத்ததில்லை மாறாக அல்லாஹ்வின் தூதர் என்னும் கண்ணியத்திலே முஸ்லிம்களுக்கு சேவை செய்த வண்ணம் இருந்தார் தன் வீட்டை தானே சுத்தம் செய்வார் தன் கையாலே தன் பாதணியை தைத்துக்கொள்வார் ஏழைகள், கஷ்டப்படுபவர்கள் போன்ற அனைவருக்கும் தன்னிடம் இருப்பவற்றை கொடுத்து உதவுவார் அதக சமயங்களில் தனக்குப் போதுமான அளவு பொருட்கள் கூட அவரிடம் இருப்பதில்லை”