ஆண்மாவுக்கும், உடம்புக்கும் மத்தியில் காணப்பட்ட பல சங்கடங்களுக்கான தெளிவான பதில்களை இஸ்லாத்தில் காண முடிகின்றது ஆண்மாவுக்கும், உடம்புக்கும் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி இஸ்லாம் தெளிவாகக் கூறுகின்றது இஸ்லாத்தைப் பொறுத்த மட்டில் உடலின் முக்கியத் தேவையாக பாலியல் உணர்வுகளை வைத்துள்ளது அதற்குத் தீணி போடும் வகையிலே திருமணத்தை ஏற்படுத்தியுள்ளது இதன் போது தான் மனிதன் தன் பிற செயற்பாடுகளில் நிதானமாகவும், பலமாகவும் செயற்பட முடியும் அவ்வாறே ஆண்மாவுக்குத் தீணி போடும் வகையில் தொழுகை, நோன்பு, இதர வணக்க வழிபாடுகளை இஸ்லாம் கடமையாக்கியிருக்கின்றது இவற்றின் மூலம் மனதுக்குத் தேவையான நிம்மதியையும், சந்தோசத்தையும் பெற்றுக்கொண்டு, அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு செவி சாய்த்துக்கொண்டு, மனித நேயத்தை மதித்து செயற்பட அவனால் முடிகின்றது”