அல்குர்ஆனில் அனைத்து விடயங்களும் கூறப்பட்டுள்ளன இது சட்டவிழுமியங்களையும், பண்பாட்டம்சங்களையும் தன்னகத்தே உள்ளடக்கியிருக்கின்றது இது தனிமனித, சமுதாய சட்டதிட்டங்களை தெளிவாக விபரிக்கின்றது மனிதர்களிடம் குடிகொண்டுள்ள கரடுமுரடான அம்சங்களை இல்லாதொழிக்கின்றது அவர்களுக்குத் தேவையான நாளாந்த செயற்பாடுகள், வாராந்த செயற்பாடுகள், மாதாந்த செயற்பாடுகள் என ஒவ்வொரு அம்சங்களையும் வகுத்துக்கொடுத்துள்ளது மனைவி மக்கள், பிள்ளை குட்டிகள் போன்றோருடனும், உறவினர்கள், நண்பர்கள் போன்றோருடனும், மனிதனல்லாத ஏனைய ஜீவராசிகளுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்ற அம்சங்களையும் தெளிவாக விளக்கியிருக்கின்றது”