இஸ்லாத்தில் சிறந்த அம்சம் யாதெனில் அது புத்திக்கு வேலையைக் கொடுக்கின்றது அவ்வாறே ஆய்வுக்கும் பாரிய இடத்தை வழங்குகின்றது தன்னைப் பின்பற்றுவோரை, தன்னைப் பற்றி ஆராய்ந்து விட்டு ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றது சிறந்த முறையில் ஆய்வு செய்து விட்டு, தெளிவான அறிவோடு இஸ்லாத்திற்குள் வருமாறு இஸ்லாம் மக்களைத் தூண்டுகின்றது இஸ்லாம் என்பது பகுத்தறிவும், தர்க்கவியலும் நிறைந்த மார்க்கமாகும் இதனால் தான் முஹம்மதுக்கு இறங்கிய முதல் வசனமே அறிவைப் போதிக்கும் வகையில் அமைந்திருந்தது அவ்வாறே தன்னைப் பின்பற்றுவோரை தன்னை ஆய்வுக்குட்படுத்தி நம்பிக்கை கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றது”