முஹம்மதுடைய நபித்துவத்தில் ஒருபோதும் நான் சந்தேகம் கொண்டதில்லை அவர் தான் இறுதித் தூதர் மனித இனம் அனைத்துக்கும் பொதுவாக அனுப்பப்பட்டவர் தவ்ராத், இன்ஜீல் முதலிய வேதங்களில் கூறப்பட்ட செய்திகளை திரிபுகளிலிருந்து தூய்மைப்படுத்த வந்தவர் அதற்கு உதாரணம் தான் இப்புனித அல்குர்ஆன் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் குரோதம் கொண்ட ஐரோப்பிய அறிஞர் பாஸ்கல் என்பவரின் ஒரு கருத்தைத் தவிர மற்ற அனைத்துக் கருத்துக்களையும் நான் மறுக்கின்றேன் அது தான், ‘அல்குர்ஆனை முஹம்மத் எழுதவில்லை’ என்னும் கருத்தாகும்”