பண்பாட்டுத்திரை

 பண்பாட்டுத்திரை

பண்பாட்டுத்திரை

பண்பாட்டுத்திரை

றாஷித், மைக்கல் இருவரும் குறிப்பிட்ட தினத்தன்று பெரிஸ் நகரின் மனிஸ் கடலோரத்தை நோக்கி புறப்பட இருந்த புகையிரத நிலைய நடைபாதையில் சந்தித்துக்கொண்டனர். பொருத்தமான இருக்கையை தேடியவர்களாக புகையிரதம் நகர ஆரம்பிக்கும் நேரத்தை எதிர்பாத்திருந்தனர்.

மைக்கல்: பெண்களுடைய ஆடை தொடர்பாக இஸ்லாமிய கருத்துக்கள் சிலதை பரிமாரிக்கொள்ள நேரம் எமக்கு இடமளிக்குமென எண்ணுகிறேன். ஆம், அந்த ஹிஜாபை பற்றிதான்... அப்படித்தானே?!

றாஷித்: பெரும் பாலானோர் ஹிஜாப் என்றால் வேறுமனே தலையை மறைக்கும் ஒரு திரையாகவே எண்ணுகிறார்கள். ஆனால், ஹஜாப் ஒருசமூக ஒழுங்குமுறை என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அந்த அடிப்படையில் ஓர் விடயத்தை பார்ப்போம்:

மைக்கல்: நான் எதிர்பாத்ததற்கு மாற்றமாக ஒரு தலைப்பையே எடுத்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்!

றாஷித்: மனிதர்களை, மேனியை மறைத்துக்கொள்ள வேண்டிய வரையறைகளில் பலதரப்பட்டவர்களாக காண்கிறோம்; ஒவ்வொருவரும் தங்களுடைய வரையறைகளையே நாகரீகம் என வாதிடுகின்றனர் . இதனால் ஒரு பிரிவினர் மற்றவர்களை பின்தங்கியவர்களாகவும், மற்றவர்கள் இவர்களை தவறிழைப்பவர்களாகவும் பார்க்கின்றனர். இதனடிப்படையில் ஒவ்வொரு பிரிவினரினதும் பார்வை குறிப்பட்ட ஓர் சிந்தனையை அடிப்படையாகக்கொண்டிருப்பதால், இவ்விடயத்தில் பொதுவான ஒரு அம்சத்தில் ஒன்றுபடுவது அவசியமாகும்.

விடயம்... சற்று விரிவானதுதான். ஆகவே எனக்கு அனுமதியளித்தால் இவ்விடயத்தில் முஸ்லீம்களாகிய எமது கண்ணோட்டங்கள் சிலவற்றை தெளிவு படுத்துவேன்

மைக்கல்: தயவுசெய்து.

றாஷித்: மனிதனைப்பற்றி பூரனமாக அறியாமல் அவனுடைய வாழ்க்கையில் எழும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதில் இருவறும் உடன்படுகிறோம் என நினைக்கிறேன்.

மைக்கல்: அதில் சந்தேகமே இல்லை.

றாஷித்: நாம் பார்க்கக்கூடிய அறிவியலின் தொடர் முன்னேற்றம் மனித அறிவு மட்டுப்படுத்தப்பட்டது என்பதற்கான ஆதாரமென எண்ணுகிறேன்; நேற்று வரை அறியாமல் இருந்தவற்றை இன்று கண்டுபிடிக்கிறான்; நேற்று வரை சரியென எண்ணியவற்றை இன்று ஆய்வுசெய்து சரிகான்கிறான்; இன்றுவரை அறியாமல் இருந்தவற்றை நாளை கண்டுபிடிப்பான்;. இதைத்தான் திருக்குர்ஆனும் நுவலுகிறது: { (நபியே!) ரூஹை(ஆன்மாவை)ப்பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்; (அதற்கு) நீர், “ரூஹ் எனது இரட்சகனின் கட்டளையில் உள்ளதாகும்; (அதைப்பற்றிய) அறிவிலிருந்து வெகு சொற்பமே தவிர நீங்கள் கொடுக்கப்படவில்லை; (ஆதலால் அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது)” என்று கூறுவீராக!}[அல்இஸ்ரா :85]

மைக்கல்: ஆம். உடண்படுகிறேன். ஆனால் அதற்கும் எமது தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?!

றாஷித்: நன்பரே! சற்று பொறுங்கள் நான் இன்னும் கூறி முடிக்கவில்லை. இப்பிரச்சினைகளில் தீர்வு காண முடியாத சில பக்கங்கள் இருக்கின்றன. என்ற விடயத்தில் நாம் உடன்படுவோமேயானால், பாலியல் உணர்ச்சியை தூண்டும் சூழலிருந்து தவிர்ந்திருப்பது கடினம் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம் எனவே இதனடிப்படையில் சிக்கல்களுக்கு தீர்வு காண முற்படுவோமேயானால் தீர்வுகள் அணைத்தும் குறையானதாகவே அமையும்.

மைக்கல்: இதுவோர் தர்க்க ரீதியான முடிவு, எனினும இப்பிரச்சிளைகளை எவ்வித தீர்வுமற்ற நிலையில் விட்டுவிடுவதை விட அறிவு, அனுபவம் முதலியவற்றைக் கையாண்டு ஓரளவுக்காவது சீர்நிலைக்கு கொண்டுவர முயலவேண்டும்...

றாஷித்: அப்படியன்றால் குறைபாடோ மிதமிச்சமோகொண்ட ஒன்றினால் இதற்கான தீர்வுகள் அமையப்பெற்றிருக்க வேண்டும்யென்பதில் நிங்கள் உடண்படுகிறீர்கள். எனினும் அதைத்தவிர வேறெந்தக் தெரிவும் இல்லையென்று சொல்லும் அளவு அதன்பால் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறீர்...

மைக்கல்: ஆம் அவ்வாறுதான்.

றாஷித்: ஆனால் இப்பாதிப்புக்களை தவிர்பதற்கான வேறொரு தெரிவும் எங்களிடம் உண்டு

மைக்கல்: எங்களிடம் என்றால்?

றாஷித்: அதாவது முஸ்லீம்களாகிய எங்களிடத்தில் மனித சமூகத்தைப் பாதுகாப்பதற்கான தெரிவுண்டு. அத்தெரிவானது; மனிதனைப்படைத்தவன் அவனிலும் மிக அறிந்தவனே, என்பதை சொட்செட்டாக விளக்குகிறது. அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனில் கூறுகிறான்: {யாவற்றையும், படைத்தவன் நுற்பமான அறிவுடையவனும் யாவற்றையும் நன்குணர்பவனும் ஆவான், என்பதை அவன் அறியமாட்டானா} [அல் முல்க்: 14] அவனொருவனே மனிதனுக்கு தேவையான அனைத்தையும் நன்கு அறிந்தவன். அதேநேரம் மனிதனின் ஆசை, கோபம், அன்பு, ஆதரவு என யாவற்றையும் விட்டும் தேவையற்றவன். எனவே மனிதனுக்குப் பொருந்தும் சட்டங்களை இயற்ற ஆற்றல் படைத்தவன் அவன் ஒருவனே. இதையே குர்ஆன் சுட்டிக்காட்டியுள்ளது.

உடனே மைக்கல் குறிக்கிட்டவறாக: உங்களுடைய பேச்சு சற்று காத்திரமாக இருக்கிறது தலைவர் றாஷித்!.. உங்கள் மார்க்கத்தில் நான் மாட்டேன், என்ற விடயத்தை மட்டும் மறந்துவிட வேண்டாம். நான் நம்பாத ஓர் விடயத்தில் என்னை வற்புறுத்தவும் வேண்டாம். எனது நோக்கம் நாம் ஏற்கனவே கூறியதற்கமைய கருத்துத்பறிமாறல் மட்டுமே..

றாஷித்: இவ்வடிப்படையை முழு மனித சமுதாயமும் பின்பற்றுவது அவசியமென கருதுகிறேன். நீங்கள் விரும்பியதற்கினங்க எங்களுடைய உறையாடல் முழுமையடைய வேண்டுமென்பதால், நான் அதற்குத் தடையாக இருக்க விரும்பவில்லை. என்றாலும், ஹிஜாப் சமூக ஒழுங்கின் ஓர் அங்கம் என நான் ஏலவே குறிப்பிட்ட எனது சுய முடிவில் மிக உறுதியாக உள்ளேன்.

மைக்கல்: பரவாயில்லை.

றாஷித்: நான் சென்ற உரையாடலில் கூறியதைப்போன்று; மனித உடலில் சடவாதம் மாத்திரமன்றி மிலேச்சத்தனமும் உள்ளது; இதை யாவரும் அறிந்ததே. ஓர் ஆண் இயல்பிலேயே பெண்ணால் கவரப்படுகிறான். அவனைக் கவரும் முதல் அம்சம் அவளுடைய உடலமைப்பாகும். பெண்கள் அணியும் கவர்ச்சியான ஆடைகள் ஆண்களை ஓர் பிரதிபலிப்பை(REACTION) நோக்கி தூண்டுகிறது.

மைக்கல்: என்றாலும் இதை நான்.. ஆண், பெண் இருவருக்குமான ஓர் இழிவான கண்ணோட்டமாகவே கருதுகிறேன்; பெண்ணை உதாசீனம் செய்தல், அவளால் தன்னையே பாதுகாத்துக்கொள்ள முடியாத பலவீனமான படைப்பாக நோக்குதல் போன்றன அவளை இழிவு படுத்துகின்றன. அதேநேரம் ஆணை பாலியல் வேட்டையாடும் சிந்தனை கொண்ட ஓர் ஓநாயாக நோக்குவது, ஆணினத்திற்கே இழுக்கை ஏற்படுத்துகிறது.

றாஷித்: எனதருமை நன்பரே! ஒரு பெண் தன்னை அலங்கரித்துக்கொள்வதற்காக கண்ணாடி முன் நின்று அரைகுறை ஆடைகளை தெரிவு செய்கிற போது ஒரு ஆணுடைய நல்லென்னத்தை அடைந்துகொள்வதற்காக அதைச்செய்கிறாள் என கருதுகிறீர்களா? அதே போன்று ஓர் ஆண் அலங்காரமிட்ட ஓர் அழகிய பெண்ணை பார்க்கின்றபோது அவளுடைய சிறந்த பண்பாட்டினால் பிரமிப்படைகிறான் என கருதுகிறீர்களா? அல்லது அவளை பார்த்த முதல் பார்வையிலேயே (அவளுடைய கலாச்சார சீர்கேட்டினால்) காதல் வயப்படுகிறான் என கருதுகிறீர்களா?!

மனிதஇனம் உயர்வால், கண்ணியத்தால், ஒழுக்கத்தால் ஒருவரையொருவர் வேறுபடுவதைப்போன்றே உணர்வால், இச்சையால் ஒருவரையோருவர் வேறுபடுகின்றனர் என்பதை, நாம் அனைவரும் அறிந்ததே. ஹிஜாப், அதை அணியக்கூடிய பெண்ணை ஓர் பத்தினியாக எடுத்துக்காட்டுகிறது. தீய பண்பாடுகள், உளப்பலவீனங்கள் முதலியவற்றை அவளைவிட்டும் தூரப்படுத்துகிறது.. ஹிஜாப் பெண்களை தீயவர்களிடமிருந்து பாதுகாக்கும் ஓர் தடுப்பு என்பதை அல்குர்ஆன் துலாம்பரமாக விளக்கியுள்ளது.

மைக்கல்: ஆனாலும் தலைவர் றாஷித்! ஹிஜாப் அணிந்த சில பெண்களின் நடத்தைகள் சிறந்த பண்பாடுகளுக்கு பொருத்தமற்றதாக காண்கிறேன். எனவே சிறந்த பண்பாடு ,ஹிஜாப் அல்லாத சிறந்த வளர்ப்பு, கோட்பாடுகளை கடைபிடித்தல் போன்ற வேறு காரணிகளில் தங்கியிருக்கிறது என்பதை.. இது வலுப்படுத்துகிறது.

றாஷித: நீங்கள் கூறுவதும் ஒரு வகையில் சரிதான். ஒரு பெண் முந்தானைத்துண்டொன்றை மாட்டிக்கொள்வதால் அவள் சிறந்த பெண்னாக மாறிவிடுகிறாலென எவரும் வாதிடவில்லை; அதற்காக அவள் ஹிஜாப் அணியக்கூடாது என்ற அர்த்தமுமல்ல. ஓர் வைத்தியர் தவறிழைத்துவிட்டார் அல்லது அவருடைய துறையை தவறாக உபயோகித்துவிட்டார் என்பதற்காக, முழு வைத்தியத்துறையையும் குறை கூறுவதில் அர்த்தமில்லை; மாறாக அவர் அத்தவறை திருத்திக்கொள்ளவேண்டும் எனக் கூறலாம். இவ்வாறுதான் மனிதனென்ற அடிப்படையில் அனைவரும் தவறிழைக்கலாம்.

ஆனால், அதேநேரம் இஸ்லாம் பெண்ணிடம் தவறு நிகழாமல் பாதுகாப்பதற்காக ஹிஜாபை கடமையாக்கியுள்ளதோடு மாத்திரம் நின்றுவிடாமல் அவள் நடைமுறையில் மிகச்சிறந்த அந்தஸ்தை அடைய வேண்டுமென்பதற்காக பண்பாட்டு ரீதியான ஒழுங்கையும் அவளுக்கு விதித்துள்ளது. சுருங்கக் கூறின் ஒரு சிறந்த பெண் ஹிஜாபை அணியக்கூடியவள்; ஹிஜாப் அணியும் அணைத்துப் பெண்களும் சிறந்தவர்கள் அல்ல.

மைக்கல்: என்றாலும்.. இது பெண்ணுடைய உடலை பூதாகரமாக பிரதிபலிக்கும் பாதகமான கண்ணோட்டமாகத் தெரியவில்லையா?! எங்களுடைய உடலை நாங்களே ஏன் வெறுத்தொதுக்கவேண்டும்?!

றாஷித்: இஸ்லாம் அவளின் உடல் மறைக்கப்பட வேண்டிய அங்கம் என்பதால் மாத்திரம் ஹிஜாபை கடமையாக்கவில்லை; மாறாக ஆண்களின் பாலியல் உணர்வுகளை தூண்டாமல் இருப்பதற்காகவும்தான். ஆண்களின் தீண்டலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான ஓர் கேடயமாக அதை ஆக்கியுள்ளது. மேலும் இவ்வாரான பாலியல் தூண்டல்களும், துலம்பல்களும் கணவன் மணைவியென்ற இல்லற வாழ்க்கையில் மாத்திரம் அமையப்பெற்றிருக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதுவே சிறந்த சமுதாயத்தையும் கட்டி எழுப்புகிறது.

மைக்கல்: தலைவர் றாஷித்! இவ்வாறு ஹிஜாப் ஆண்களைக்கவருவதிலிருந்து ஓர் தடுப்பாக இருக்குமெனின், பெண்களிடமிருந்து தடுப்பாக ஏன் ஆண்களும் ஹிஜாப் அணிவதில்லை? ஆண்கள்மீதும் பெண்ணிற்கும் இச்சையுண்டல்லவா?

றாஷித் (சற்று சிரித்தவராக): அருமையான கேள்வி... இஸ்லாம் ஆண்களுக்கு மறைக்குமாறு விதித்துள்ள பகுதிகள் பெண்களுக்கு விதித்துள்ளதை விட குறுகியவை. அதற்கான சில நோக்கங்களை பார்ப்போம்: ஜெர்மனிய பத்திரிகை “பெர்லின் மொர்ஜ் பொஸ்த்”இல் பிரசுரமான டியுக் பல்கலைக்கழக நரம்பியற்கலை பேராசிரியர் புன்யாமின் ஹெய்டனுக்குரிய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:: ((சுய இன்பத்தைத் தூண்டும் சில பகுதிகள் ஒரு ஆணின் மூலையில் இருப்பதால் ஒரு அழகிய பெண்ணைக் பார்த்தவுடனேயே அவனால் சுய இன்பமடைய முடியும். ஆனால் அதேநேரம் ஒரு பெண் வசீகரமான ஆணைப்பார்க்க கடும்முயற்சியில் ஈடுபடமாட்டாள்.))

இவ்வாய்வில் அதற்கான காரணங்கள் ஆராயப்பட்டன. ஆண்,பெண் இனங்களிட்கிடையிளன வித்தியாசம் மூலையில் இருந்து ஆரம்பிக்கின்றது; ஒரு ஆண் அழகிய பெண்ணைபார்க்கும் போது அவனைத்தூண்டக்கூடிய மூலையின் சில பகுதிகள் அவனை சிற்றின்பமடையச்செய்கின்ரன.ஆனால் ஒருபென்னைப்பொருத்தமட்டில் அவள் எந்த ஒரு வசீகரமான ஆணைப்பார்த்தாலும் தாக்கமடையா வண்ணம் அவளுடைய மூளையின் அமைப்பு காணப்படுகின்றது.

இவ்வாய்வின் பிரகாரம்; பெண்களின் உருப்புகளில் ஆண்களைக்கவரும் முதல் உறுப்பு அவர்களுடைய முகமே எனத்தெரியவந்தது.. குறிப்பிட்ட இடத்தை மாத்திரம் உற்று நோக்காது ஒரே பார்வையில் மொத்தமாக பார்க்கின்ற போதுதான் இக்கவர்ச்சியேற்றப்படுகின்றது.

மற்றொரு தகவல்: பெண்ணைவிட ஆணே அதிக துணிச்சலுடையவன். .ஆய்வுகளின் பிரகாரம்; ஆண்கள் புரியக்கூடிய குற்றம் பெண்களைவிட ஐந்து மடங்கு பெரியது. ஒரு பெண் கவர்ச்சிக்கான முதல் அடியை எப்பொழுது தவிர்ந்துகொள்கிறாளோ, அப்பொழுதே ஆணிற்கும் எல்லைமீற நினைக்கும் அவனுடைய துணிச்சலிற்கும் மத்தியில் திரையிடப்படுகிறது என தெரியவந்தது..

மைக்கல் (சற்று அவசரமாக): ஆம், புகையிரதத்திற்கு நேரமாகி விட்டதென நினைக்கிறேன்... .புறப்படலாம் தயாராகுங்கள்.




Tags: