நாகரீக நிஜங்கள்
ரஜீவ்: தான் எடுத்த புகைப்படங்களை நண்பர்களிடம் காண்பிப்பதற்காக சந்திப்பொன்றை மேற்கொன்டார். நண்பர்களை நோக்கி:
நான் இப்புகைபடங்களை துருக்கியிலுள்ள எனது நண்பர் ஒருவரை சந்திக்க சென்றிருந்த வேளை எடுத்தேன். பூர்வீகம்மிக்க அந்நாட்டிலுள்ள நாகரீக சின்னங்களை கண்டு நான் வியந்துவிட்டேன் அங்குள்ள இஸ்லாமிய நாகரீக சின்னங்கள் தொடர்பாக அவர்வழங்கிய தகவல்கள் என்னை திகிழடையசெய்தன இது தொடர்பாக இந்தியாவில் நான் கண்ட சில காட்சிகளை அவரோடு பகிர்ந்து கொன்டேன்.
மைக்கல்: ஆனால் என்னிமுள்ள தகவல்கள் இஸ்லாமிய நாகரீகத்தின் வேறுவிதமான தோற்றத்தை பிரதிபலிக்கின்றன.
றாஷித்: முதலில் நாகரீகமென்றால் என்னவென்று வரையறுத்து விட்டு, பின்னர் தேவை ஏற்படின் இஸ்லாமிய நாகரீகத்தை பற்றிப்பார்ப்போம் .
மைக்கல்: ம்.. இதற்கு நாம் அனைவரும் உடன்படுகிறோம். என்ன... சரிதானே?
றாஷித்: அதற்கென்ன முதலில் வறையறுப்போம். அதில் நாம் அனைவரும் உடன்பட்டால் தொடர்ந்து செல்வோம்.
மைக்கல்: நாகரீகமென்பது குறிப்பிட்ட காலத்தில் ஒரு சமூகம் அடைந்த முன்னேற்றம், கண்டுபிடிப்புகள் என சிந்தனை மற்றும் பொருளியல் ரீதியான மனித நடவடிக்கைகள்.
ரஜீவ்: மைக்கல் கூறியவற்றோடு மேலும் சில விளக்கங்களை சேர்த்து கொள்கிறேன்: நாகரீகமென்பது மனிதனுடைய கலாச்சார மட்டத்தை உயர்த்த துனை நிற்கும் ஓர் சமூக ஒழுங்கமைப்பாகும். ஒரு கலாச்சாரம் பொருளாதார வளங்கள், அரசியல் ஒழுங்கு, ஒழுக்க மரபுகள், மற்றும் அறிவியற் கலைகளின் தொடர்ச்சி ஆகிய நாண்கு கூறுகளால் தோற்றுவிக்கபடக்கூடிய ஒன்று.
ஒரு நாகரீகம் அறிவியல் ஆராய்ச்சி, உருவாக்ககலை முதலியவற்றுக்கு முதலிடம் வழங்ககூடியது. அதன் தொழிநுட்ப கண்டுபிடிப்புகள், சமூக்கல்வி முதலின அந்நாகரீகத்தின் அறிவியலை பிரதிபலிக்கின்றன. அதேவேளை கட்டிடக்கலை, சிற்பக்கலை, மற்றும் ஏனைய கலைகளையளும் அந்நாகரீகத்தின் கலைப்படைப்பை பிரதிபலிக்கின்றன. எனவே எந்த ஒரு நாகரீத்தினதும் முக்கிய கூறுகளாக அறிவியல் மற்றும் கலையம்சங்கள் மிளிர்வதைக்கானலாம் .
றாஷித்: நண்பர் மைக்கலுடைய. கூற்றை சற்று ஆராயலாம் என நினைக்கிறேன். அவர் கூறியதை போன்று நாகரீகம் மனித நடவடிக்கைகளின் விளைவால் உருவானது என எடுத்து கொள்வோமாயின், மனிதக் கூறுகளின் அனைத்து பக்கங்களையும் ஒன்று விடாமல் நோக்குவது அவசியம். அவ்வாறு இல்லையெனில் அதை நாகரீகமென்றே கூற முடியாது. இது முதல் விடயம்.
இரண்டாவது: ஒரு சமூகம் தோற்றம் பெற்ற கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுக்கினங்க அதன் நாகரீகமும் வேறுபடும். எனவே அச்சமூக பண்பாடு மனித இயல்பிற்கும் ,சூழலுக்கும் ஒத்துபோகக்கூடியதா அல்லது வேறுபட்டதா என்பதை அடிப்படையாக வைத்தே அந்நாகரீகம் முறையானதா அல்லது முறைகேடானதா என்பதை தீர்மானிக்கலாம். அந்தடிப்படையில் பல்வேறுபட்ட நாகரீகங்கள் குறிப்பாக தற்காலத்தில் மனிதன் வாழ்ந்து கொன்டிருக்கும் மேற்கத்திய நாகரீகம் முதலியவற்றுக்கிடையிலான பரந்த வித்தியாசத்தை கண்டு கொள்ளலாம். அவற்றில் எது முறையானது முறையற்றது எனவும் அறிந்து கொள்ளலாம்.
மைக்கல்:தலைவர் ராஷித்! இஸ்லாமிய நாகரீகத்தின் இருள் சூழ்ந்த பக்கங்களை பற்றி கலந்துரையாடலாமா? என்ன... தூர விலகிச் செல்வதைப்போன்று தென்படுகிறது.
ரஜீவ்: நீங்கள் கூறுவதை பார்த்தால், றாஷித் இஸ்லாமிய நாகரீகத்தின் சிறப்பம்சங்களையும், ஏனைய நாகரீகங்களிடமிருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் விளக்கினால் நன்றாக இருக்கும்.
றாஷித்: நல்லது இஸ்லாமிய நாகரீகம் மனிதன்,பிரபஞ்சம்,வாழ்க்கை பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டத்தில் தங்கியுள்ளது. அதன் சிறப்பம்சங்களில் சிலவற்றையும், அவற்றுடன் தொடர்புபட்ட இன்றைய மேற்கத்திய நாகரீகத்திலுள்ள சில அம்சங்களையும் கூறுகிறேன்.
இஸ்லாமிய நாகரீகத்தை பிரதிபலிக்ககூடிய அம்சங்களில் ஒன்றான:
மனிதன் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டத்தை பார்க்கலாம்; இதில் மனிதன் ஒரு படைப்பினமாகவும், பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதியாகவும், அவனுடைய வழிகாட்டலில் தெரிவுச்சதந்திரம் உடையவனாகவும் சித்தரிக்கபடுகிறான். இவ்வழிகாட்டலின் அடிப்படையில் நற்செயலை புரியுமாறு ஏவப்படுகிறான். இம்மை, மறுமைக்கான அவனுடைய செயற்பாதுகள்பற்றி வினவப்படுவான்.
ஆனால் இன்றைய மேற்கத்திய கண்ணோட்டத்தில் மனிதன் இப்பிரபஞ்சத்தின் அதிபதியாகவும், ஏனைய விலங்குகளை போன்று அவனும் மனோஇச்சைகளுக்கும், ஆசைகளுக்கும் முதலிடம் வழங்குபவனாகவும், எல்லைகளற்ற சுதந்திரமுடையவனாகவும் சித்தறிக்கபடுகிறான். மேற்கத்திய நாகரீகம் அவனை எவ்வித நோக்கமுமற்ற வீனான படைப்பாக நோக்குகிறது. அதனடிப்படையில் அவன் செய்யும் செயலுக்காக இவ்வுலகிலேயன்றி வேறெங்கும் விசாரிக்கபடமாட்டான். அவனுடைய நோக்கங்களும் இவ்வற்ப உலகையே அடிப்படையாக கொண்டிருக்கும்.
இஸ்லாமிய நாகரீகத்தை பிரதிபலிக்கும் மற்றுமொரு காரணி: பிரபஞ்சம்பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்; இதில் பிரபஞ்சம் மனிதனுக்காக வசப்படுத்தி கொடுக்கப்பட்ட, அவனை போன்ற ஒரு படைப்பினமாக சித்தரிக்கப்படுகிறது. இதனடிப்படையில் மனிதன் இப்பிரபஞ்சத்துடன் எவ்வாறு நடந்து கொள்ள வேன்டுமெனின் அல்லாஹ் காட்டிய வழியில் அதோடு பரிபூரண அமைப்பில் உறவாடுவான்.
ஆனால் பிரபஞ்சம் தொடர்பான மேற்கத்திய நாகரீகத்தை எடுத்துக்கொண்டால்; மனிதனுக்கும், பிரபஞ்சத்திற்கும் மத்தியில் ஒற்றுமைக்கு மாற்றமாக வேற்றுமையே காணப்படுகிறது. இதனால் மோசமான மோதல் உருவாகின்ற நிலையை காணலாம்.
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் வாழ்க்கை மனிதனையும், பிரபஞ்சத்தையும் படைத்த இறைவனுக்கே உரித்தான ஒன்று. இவ்வுலகில் நாம் காணக்கூடிய வாழ்க்கை யதார்தத்தின் ஒரு பகுதியே. மரணித்தின் பின்னரான மற்றுமொரு உண்மையான வாழ்க்கையுன்டு. அனைத்தையும் பிரதிபலிக்கும் அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை அடையும் வன்னம் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுமாறு ஏவப்பட்டுள்ளான். இவ்வுலகம் மறுமைக்கான விளைச்சல் நிலமாகும். எனவே இவ்வுலகில் அவன் மேற்கொள்ளும் காரியங்களுக்காக மறுமையில் விசாரிக்கப்பட்டு கூலி வழங்கபடுவான்.
ஆனால் மேற்கத்திய நாகரீகக்கண்ணோட்டத்தில் வாழ்க்கையென்பது இவ்வுலகில் மட்டுமே. எனவே இதைத் தவிர வேறு வாய்ப்பு மனிதனுக்கு இல்லை என்ற தொனிப்பொருளே நிலவுகிறது.
எனவே இவற்றிலிருந்து இஸ்லாம் மற்றும் மேற்கத்திய நாகரீகங்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
மைக்கல்: தலைவர் றாஷித்! உங்களுடைய கூற்றில் இரு முக்கிய விடயங்களை அவதானித்தேன். அவைகளாவன:
01. மேற்கத்திய நாகரீகத்தின் மிக முக்கியமான பகுதியான யூத மற்றும் கிறிஸ்தவ் மதங்களை பற்றி குறிப்பிட மறந்து விட்டீர்கள். எடுத்துகாட்டாக மேற்கத்திய நாகரீக கண்ணோட்டம் மறுமையையோ இவ்வுலகில் புரியும் காரியங்களுக்காக விசாரிக்கப்பட்டு கூலிகொடுக்கபடுவதையோ நம்புவதில்லை என குறிப்பிட்டீர்கள். அது முற்றிலும் பிழை. ஏனெனில் மேற்குறிப்பிட்ட மதங்கள் சில வித்தியாசங்கள் இருப்பினும் மறுமையை நம்புகின்றன.
02. இஸ்லாமிய நாகரீக அடிப்படை கட்டமைப்புகளை மேற்கத்திய நாகரீகத்துடன் ஒப்பீடு செய்து குறிப்பிட்டீர்கள். ஆனால் நண்பர் ரஜீவ் உங்களிடம் வேண்டிக்கொன்டதற்கினங்க இஸ்லாமிய நாகரீகத்தின் சிறப்பம்சங்களை பற்றி ஏதும் கூறவில்லை.
றாஷித்: நீங்கள் கூறிய முதற்குறிப்பை மறுக்கிறேன். ஏனெனில் ஒரு நாகரீகத்தின் அடிப்படை கட்டமைப்புகளுக்கும் அதன் மூலக்கூறுகளுக்கு மிடையில் பல வித்தியாசங்கள் உள்ளன. மேற்கத்திய நாகரீகத்தில் யூத, கிறிஸ்தவ மதங்களிடையே தாக்கங்கள் இருக்கின்றன. எனினும் பொதுவாக அவ்விரு மதங்களின அடிப்படையில்தான் எழுச்சிபெற்றது என கூறமுடியாது. அதற்கு முற்றிலும் மாற்றமாக, சமயங்களுக்கு புறம்பான, திருச்சபையின் அதிகாரத்தை முற்றிலும் எதிர்க்க்கூடிய மதச்சாற்பற்ற கொள்கையில் உருவானது என உறுதியாகக் கூறலாம். இதை நீங்கள் இருவரும் ஏற்றுகொள்வீர்கள் என நினைக்கிறேன்..
நீங்கள் கூரிய இரண்டாவது விடயத்தில் நான் உடன்படுகிறேன். என்றாலும் மேலும் ஒன்றை கூறிகொள்ள விரும்புவது யாதெனில்; நான் ஏலவே குறிப்பிட்ட அடிப்படை கட்டமைப்புகள் இஸ்லாமிய நாகரீக சிறப்பம்சங்களின் சாரங்கள் எனலாம். அவையாவன.
- மனிதனின் தொழிற்பாடுகள், கட்டமைப்புகளை கவனித்தல், அவனுடைய மனிதாபிமான ஆசைகளை நிறைவேற்றல், பிரபஞ்ச நியதிக்கு ஏற்புடையவனாக மாற்றுதல், ,அவன் படைக்கபட்ட நோக்கத்தை நிறைவேற்றல் முதலியவற்றை நோக்காகக் கொள்வதே இஸ்லாமிய நாதரீகத்தின் மிக பிரதானமான தொழிற்பாடாகும்.
- சமயத்திற்கும் உலகத்திற்குமிடையிலான, சமயத்திற்கும் சிந்தனைக்கும் இடையிலான பினைப்புகள்; அதனடிப்படையில் எழுச்சிபெற்ற நாகரீகம்.
- அறிவியல் மூலாதாரங்களுக்கிடையிலான ஒற்றுமை.
- ஏனைய கலாச்சார மற்றும் நாகரீகங்களுடனான திறந்தமனப்பான்மை: இஸ்லாமிய நாகரீக அடிப்படைகளுக்கு உடன்படக்கூடி.ய அம்சங்கள் எந்த நாகரீக மட்டத்தில் இருந்தாலும் சரி அவற்றை ஏற்கும் மனப்பாங்கையும், ஏனைய நாகரீகஙகளுக்கு தேவையான அம்சங்கள் இஸ்லாமிய நாகரீகத்தில் இருப்பினும் அவற்றை அவர்கள் எவ்வித தடையுமின்றி பெற்றுகொள்ளும் தாராள தன்மையை குறிக்கும்.
றாஷித்: பெரியார் றாஷித்! மன்னிக்கவும், மைக்கல் இஸ்லாமிய நாகரீகத்தின் மற்றைய பக்கம் பற்றிய தகவல்கள் அவரிடம் இருப்பதாக கூறினார். அவர் கூறுவதையும் சற்று கேட்கலாம்.
மைக்கல்: அதில் மிகமுக்கியமான விடயம்; இஸ்லாமிய நாகரீகத்தின் சாம்ராஜ்ஜீயம் வால்முனையில் உருவானது. கடும்போக்கு வாதத்துடன் பின்னிபினைந்தது.
றாசஷித்: நண்பரே! வாலால் ஒரு நாகரீகத்தை கட்டியெழுப்ப முடியாது. ஏனெனில் ஒரு நாகரீகத்தின் இன்றியமையாதவொன்றான ஸ்தீரனதன்மை போர் முறைக்கு முற்றிலும் புறம்பானது. ஒரு சமூகம் இரானுவ ரீதியாக வெற்றியடைந்தால், அது நாகரீக, கலாச்சார, அறிவியல் ரீதியாக வெற்றியடைய வேண்டுமென்ற அவசியமில்லை. நீங்கள் மங்கோலியர்கள், ,தாத்தாரிகளுடைய வரலாற்றை அவதானித்தால்.. உங்களுக்கே புரியும் அவர்களிடம் இரானுவ பலம் இருந்ததை போன்று நாகரீகபலம் இருக்கவில்லை.
என்றாலும் இஸ்லாம் (ஜிஹாத்) புனிதப் போரினால் பரவியது என்ற என்னக்கருவை நீங்கள் நாடியிருக்கலாம். ஆயினும் இஸ்லாமிய படையணி சென்றிராத தூரத்தை இஸ்லாமிய நாகரீகம் எட்டியிருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இது தொடர்பாக அதிகமான தகவல்கள் உள்ளன. எனினும் அவற்றில் சிலவற்றை கூறுகிறேன்: “இன்றைய இஸ்லாமிய உலகு” என்ற புத்தக ஆசிரியர் ஸ்ரொட்டர் லொத்ரொப் குறிப்பிடுகையில்: ((அரேபியர்கள் அழிவையும், நாசத்தையும் விரும்பும் காட்டுமிராண்டிகளாக ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக குணத்தாலும், நடத்தையாலும் போற்றப்படகூடியவர்களாகவும், அறிவியலை நேசிப்பவர்களாகவும் இருந்தார்கள். இதனால் சீரான நாகரீகத்தை உருவாக்க அவர்களால் முடிந்தது. போர்களில் அவர்கள் வெற்றி கண்ட பிரதேசங்களில் திருமண உறவுகளால் ஏனைய இனத்தவர்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்தார்கள். இதனால் அரேபிய நாகரீகமெனும் புது நாகரீகம் எழுச்சிபெற்றது.))
ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரானுவ தளபதி அல்கவ்ன்ட் ஹென்றி டி கெஸ்ட்றீஸ் குறிப்பிடுகையில் ((இஸ்லாம் வாள்முனையில் பரவி.ய மார்க்கம் என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்ற கருத்துக் கணிப்பீட்டை நம்புகிறோம். முஹம்மத் நபி(ஸல்) அவர்களுடைய மார்க்கம் அடக்குமுறையால் பரவியிருக்குமாயின், முஸ்லீம்கள் வெற்றிப் பாதையில் சென்றிருக்க மாட்டார்கள்; அல்குர்ஆன் அனைத்திடங்கனிலும் சிறகடித்துப் பறந்திருக்காது.))
மனித வரலாற்றில் இஸ்லாமிய நாகரீகத்தின் தார்ப்பறியத்தை பற்றி அறிந்து கொள்ள ப்ரான்ஸிய வரலாற்று ஆசிரியர் “ Gustave lebon” கூறிய வார்த்தை யொன்றே போதும்:.
((வரலாற்றில் அரேபியர்களைப் போன்று செல்வாக்குமிக்க எந்தவோர் சமூகத்தையும் நாம் காணவில்லை. அவர்களுடன் உறவாடிய அனைத்து சமூகங்களும் எல்லாக்காலத்திலும் அவர்களுடைய நாகரீகத்தை அங்கீகரித்தே இருக்கின்றனர்.))
இறுதியாக உங்கள் இருவருக்குமாக: நாகரீகம் என்ற பெயரில் அழிவுகளால் சின்னாபின்னமாகியிருக்கும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக இஸ்லாமிய நாகரீகம் திகழும் என்பதில் சந்தேகமில்லை.