கோஸ்டோவ் லுபோன்

quotes:
  • அரபி என்றோ, அரபி அல்லாதவன் என்றோ வேற்றுமைகள் கிடையாது
  • முஸ்லிம்கிளில் பலர் பல கோத்திரங்களாகவும், பல வர்க்கத்தினராகவும் சிதரிக்கிடந்தாலும் அவர்களை அந்நியர்களாக இஸ்லாம் பார்ப்பதில்லை இஸ்லாமிய மார்க்கத்தில் உரிமைகளைப் பெறுவதில் சீன முஸ்லிமிற்கும், அரேபிய முஸ்லிமிற்கும் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் கிடையாது இதன் மூலம் இஸ்லாமிய உரிமைச் சட்டங்கள் ஐரோப்பாவின் உரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் வேறுபட்டுத் திகழ்கின்றது”


  • இஸ்லாம் இலகுவான மார்க்கம்
  • இஸ்லாத்தின் இலகுவான தன்மை தூய ஓரிறைக் கோட்பாட்டிலிருந்தே தோற்றம் பெறுகின்றது ஏனைய மார்க்கங்களை விட இஸ்லாத்தில் இறைக் கோட்பாடு மிகவும் இலகுவாகவும், புரியும் படியும் அமையப்பெற்றுள்ளது ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டுவதற்கும், அல்லாஹ்வுக்கு முன்னால் அனைத்து மக்களையும் சமத்துவமாக நிறுத்துவதற்கும் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு ஒப்பான ஒன்றும் எங்கும் கிடையாது”


  • அறிவியல் நாகரீகம்
  • அரேபியர்களின் நாகரீகங்களையும், அவர்களின் அறிவியல் நூற்களையும், கண்டுபிடிப்புக்களையும் நாம் ஆராயும் போது பல உண்மைகள் தெளிவாகின்றன மத்திய நூற்றாண்டில் முஸ்லிம்கள் கல்வியில் சிறந்து விளங்கினர் மேற்கத்தேய பல்கலைக்கழகங்களில் கூட கிட்டத்தட்ட 5 நூற்றாண்டுகளாக இவர்கள் தொகுத்த அறியல் நூற்களையே பாடமாக நடாத்தினர் முஸ்லிம் அறிஞர்கள் தான் ஐரோப்பாவினுள் அறிவியல் நுழையக் காரணமாக இருந்தவர்கள்”


  • மத்தியகால நூற்றாண்டு
  • மூஸா இப்னு நஸீர் என்பவர் ஐரோப்பாவையும் கடந்து சென்றிருந்தால் இன்னேரம் ஐரோப்பாவும் முஸ்லிம் பிரதேசங்களாக மாறியிருக்கும் ஓரிறைக் கொள்கை அங்கும் நிலைபெற்றிருக்கும் ”


  • உள்ளங்களை பக்குவப்படுத்தும் மார்க்கம்
  • இஸ்லாம் ஏனைய மார்க்கங்களை விட சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களைக் கொடுத்த மார்க்கமாகும் அதில் மிகப்பெரும் அம்சமாக மனதை இங்கிதப்படுத்தி, அதனை பண்படுத்தும் அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளமையாகும்”


  • நற்குணங்களின் அடிப்படை
  • நற்பண்புகளின் அடிப்படை அல்குர்ஆனில் மேலோங்கிக் காணப்படுகின்றது இதைப் பின்பற்றும் சமுதாயம் காலத்திற்குக் காலம் சிறப்புற்றவர்களாய்த் தான் வரலாறு நெடுகிலும் காணப்படுகின்றனர் ஏனைய சமுதாயத்தவர்கள் கூட அல்குர்ஆனின் நற்பண்புகளைக் கண்டு, அதைத் தமது வாழ்வில் எடுத்து நடந்துள்ளனர் இதிலிருந்து விளங்குவது என்னவெனில் ஏனைய மார்க்கங்கள் போதித்த பண்பாடுகள் சில மக்களால் மாத்திரமே பின்பற்றப்படும் நிலையில் இஸ்லாத்தின் விழுமியங்கள் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கத்தக்க ஒன்றாகத் திகழ்கின்றது என்பதாகும்”