குர்ஆனின் நற்குணம்
ரஜிவ் நன்பர்களான மைக்கல் றாசித் இருவரையிம் நோக்கி.
சென்ற கலந்துரையாடலில் சில முஸ்லீம்களுடைய நடத்தைகள் பற்றி கலந்துரையாடிய போது இஸ்லாமிய பண்பாடுகள் ,ஒழுக்கங்கள் சம்பந்தமாகவும் பேச வேண்டியேற்பட்டது அதை பற்றி கலந்துரையாடினால்.
மைக்கல்: ஆம் நல்லது நான் சில முஸ்லீம்களின் உன்னத பண்பாடுகளைகண்டு வியந்திருக்கிறேன் அதேநேரம் அவர்களின் நடத்தைகள் அதற்கு மாற்றமாகவும் உள்ளன.
ராஷித்: அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன ஒன்று நடத்தைகள் தொடர்பான உங்களுடைய பார்வை இரண்டு குறிப்பிட்ட நடத்தை ஒழுங்கு தொடர்பான அவ்ரகளுடைய உன்மையான நிலைப்பாடு ஒரு மனிதனுடை. குணங்களில் மரபுரீதியான காரணீகளின் தாக்கங்களோடு அவனது சூழல் மற்றும் வளர்ப்புமுறையின் தாக்கங்களும் செல்வாக்கு செலுகத்த்துகின்றன இதை நபி ஸல் அவர்கள் சுட்டிகாட்டினார்கள் அறிவியல் ஆராச்சிகளும் உன்மை படுத்தியுள்ளன.
ரஜிவ்: அதை சற்று தெளிவாகக் கூறமுடியிமா.
ராஷித்: நபி ஸல் அவர்களுடைய இரண்டு ஹதீஸ்கள் ஊடாக அதை விளக்கி கூறலாம் ஒரு முறை நபி ஸல் அவர்கள் தனது தோழர்களில் ஒருவரை பார்த்து –உங்களிடம் அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்ப கூடிய இரண்டு பண்புகள் உள்ளன சகிப்புதன்மையிம் பொருமையிம் மாகும் என கூறினார் அதற்கு அந்நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே அவையிரண்டும் நாணாக பெற்றுகொன்டவையா அல்லது அல்லாஹ்வால் எனக்கு நிர்பந்திக்க பட்டவையா என வினவினார் அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வால் உனக்கு நிர்பந்திக்க பட்டவை என தெரிவித்தார்கள் இந்த ஹதீஸில் இருந்து குறிப்பிட்ட நபித்தோழர் அவ்விரு குணங்களையிம் மறபனுரீதியாக அனந்தரமாக பெற்றுகொன்டுள்ளனர் என்பது உறுதி மற்றுமொரு ஹதீஸில் நபி ஸல் அவர்கள் –அறிவு கற்பதனால் ஏற்படும் சகிப்புதன்மை பொறுமையினால் ஏற்படும் சகிப்புதன்மை பொறுமையினால் ஏற்படும் எவரொருவர் நன்மையை அது அவருக்கு வழங்கபடும் எனக்கூறினார்கள் மேற்குறிப்பிட்ட நபித்தோழரிடம் மரபுவழியாக காணப்பட்ட சகிப்புதன்மை பெறமுடியிமான ஒன்றென நபியவர்கள் உறுதிபடுத்தியுள்ளார்கள் எனவே சிறந்த வளர்ப்பு முறையினூடாக பெற்றுகொள்ள முடியிமென்பது உறுதி.
மைக்கல்: இதற்கொரு ஆழமான தத்துவ தேவை பொதுவான கண்ணோட்டத்தில் மனிதனிடம் இயல்பிலே உள்ள பண்புகள் அவற்றை விரும்புவதற்கும் சிலவற்றை வெறுப்பதற்கும் தூண்டகின்றன தனிநபர்களிடையே இவற்றுல் வித்தியாசம் இருப்பினும் சில பன்புகள் குணங்கள் எல்லா காலத்திற்கும் சிறந்தவையாகவும் அவற்றுள் சில மோசமானதாகவும் கருதப்படுகின்றன உண்மை , அமானிதம் ,நீதம் ,உடன்படிக்கையை நிறைவேற்றல் முதலிய பண்புகள் எல்லாகாலத்திற்கும் சிறந்தவை பொய்,அநியாயம் ,ஏமாற்று பேர்வழி மோசடிபோன்றன மோசமானவை அவ்வாறே சகிப்புதன்மை திறந்த மனப்பானமை வசீகரம் ,இரக்கம் ,சமத்துவம் ,அரவனைப்பு முதலியன சிறந்த பண்புகளாகும்.
இவற்றில் இஸ்லாம் முரண்படுகிறது என்று கூறமுடியுமா அல்லது இவையல்லாத தனித்தவமான மிகச்சிறந்த பண்பாட்டு ஒழுங்கு முறையினை இஸ்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது எனக் கூறமுடியிமா?.
ராஷித்: ம் நீங்கள் கூறுவது சரியே அத்தோடு இன்றுமொன்றை கூறுகிறேன் நீங்கள் குறிப்பிட்ட பண்பாட்டு ஒழுங்குமுறை வேறுபாடு இஸ்லாத்தில் மட்டுமல்ல அனைத்து மதங்களிலும் சமூக ஒழுங்குமுறைகளிலும் உள்ளது ஏனெனில் அவற்றிலுள்ள பண்பாடுகளில் நல்லது கெட்டதுகளை தீர்மானிக்கவும் அளவுகோல் நன்மை தீமைகளை கண்டறியும் கல்விச் சாதனம் முதலிய ஒன்றுகொன்று வேறுபட்டவை வேறுபாடுகளுக்கான காரணம் பிரபஞ்சம் மற்றும் மணிதன் படைக்கபட்ட நோக்கம் தொடர்பான கண்ணோட்டதிலுள்ள வித்தியாசமாகும்.
உதாரணமாக பண்பாடுகள் கோட்பாடுகள் பெரும்பாலானவை சுயநலத்தை அடிப்படையாக கொண்டன ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்திலும் தோமஸ் ஹொப்ஸ் எக்பினோஸா போன்றோர் தனியுடைமை முறையை மிக சிறந்தது என பல வழிகளிலும் வழியுறுத்தினர் அல்லது மேற்கத்தியர்கள் பின்பற்ற கூடிய ப்ரொட் இவனுடைய கண்ணோட்டம் சுய திருப்தி முறைமையினை அடிப்படையாக கொன்டதே அவ்வாறே பிறர் நலன் அர்பனிப்பு முதலியனவும் சுயநலத்தை அடிப்படையாக கொண்ட கண்ணோட்டத்திலிருந்து பெறப்பட்டதாகும்.
இதற்கு புறம்பான முற்றுமுழுதாக சமூக நலத்தை அடிப்படையாக்கொன்ட பண்பாட்டு விழுமியங்கள் தனிநபர் நலனில் போதிய கவனம் செலுத்தாது வெறுமனே சமூக நலன்களை வழியுறுத்தும்
மைக்கல்:இவற்றிக்கு முற்றிலும் வித்தியாசமான பண்பாட்டு விழுமிய முறையை இஸ்லாம் உடைமையாக்கியுள்ளதெனில் அதன் அடிப்படையையும் சிறப்பம்சங்களையும் கூற முடியிமா?
ராஷித்:நான் ஏழவே கூறியது போன்று இஸ்லாம் மனிதனின் அனைத்து கட்ட நடவடிக்கைகளிலும் உள்வாங்கும் வாழ்க்கை அறநெறி பிறபஞ்சத்தின் இயல்பு அதில் மனிதனின் அந்தஸ்து அவன் படைக்க பட்ட நோக்கம் முதலியவற்றை தெளிவுபடுத்தும் கொள்கைகை சார் என்னகருவை தெளிவு படுத்தும் ஒழுங்கு முறையை மட்டுமன்றி அவ்வொழுங்கு முறையினால் தோற்றம் பெற்ற விதி முறைகளையிம் பண்பாட்டு விழுமியம் அதன் ஊற்றுகள் அமையப்பெற்றுள்ள அடிப்படைகள் மற்றும் அதனால் பெறப்பட்ட அதிகாரங்கள் அரசியல் ஒழுங்கு முறைகள் அதன் தோற்றம் மற்றும பண்புகள் சமூக்கட்டமைப்பு அதண் அடிப்படை பொருளாதார கட்டமைப்பு அதன் தத்துவம் ஒழுங்கு முறை முதலியன மற்றும் சர்வதேச ஒழுங்குமுறை அதனுடனான தொடர்புகள் என மனித வாழ்க்கையில் அனைத்து கட்டங்களையிம் பிரதிபழிக்கும் என்ன கருவையிம் உள்ளடக்கிய ஒழுங்கு முரையாகவும் இஸ்லாம் திகழ்கிறது.
இங்கிலாந்தில் கிறிஸ்தவ தேவாளையமொன்றில் மிக நீண்ட நாள் பணியாற்றி.ய பாதிரியான H.M.Dr Durrani இதைபற்றி குறிப்பிடுகையில்..
இஸ்லாம் சட்டம் விதிமுறை ,பண்பாடு என அனைத்தையிம் கொண்டது மனிதன் மீது விதிக்கப்பட்டுள்ள மதச்சட்டங்களின் பண்பாட்டு ரீதியான இலக்குண்டு இஸ்லாம் மனிதனை ஆத்மா மற்றும் பண்பாட்டு ரீதியாக சீறைப்பதையிம் அவனுடைய சிந்தனையை தூய்மையாக்கி சூல உள்ளவர்களுடனான கடைமைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்காக அவனை தயார படுத்துவதையிம் நோக்காக கொண்டது கிறிஸ்தவ மதத்தைபோன்று மர்மமான இரகசியங்களையும் உயிரோட்டமற்ற அடிப்படைகளையிம் ஒரு மனிதனுக்கு நம்பச் சொல்லி பனிக்காத கோட்பாடு மற்றும் நடை முறைரீதியான ஒரே ஒரு மார்க்கம்.ஆகவே இஸ்லாமிய வாழ்க்கை பக்கங்களான ஆன்மீகம் மற்றும் சடவாதம் ஆகிய இரண்டையிம் சமநிலையில் நோக்குவதோடு அவை ஒவ்வொன்றிட்கும் பொருத்தமான நிலைபாட்டையிம் வழிவகுத்துள்ளது மனித நடத்தையின் அனைத்து பக்கங்களையிம் உள்வாங்கும் ஓர் அடிப்படையில் அதன் தத்துவம் அமையப்பெற்றுள்ளது.
ரஜிவ்:இல்லாமிய பண்பாட்டு ஒழுங்குமுறையிள் அடிப்படையைபற்றி பார்த்தோம் அந்த அடிப்படையில் அதன் விஷேட தன்மைகளையும் பற்றி குறிப்பிடுவது சாலபொறுத்தமென நினைக்கிறேன்.
ராஷித்:அவற்றை சுருக்கமாக குறிப்பிடலாம்.
கொள்கைக்கூறு:இதில் மனிதன் ஒரு படைப்பினமாவான்; இறைவன் அவனை முழுமையாக அறிந்தவன்; அவனை வெறுமையாக விட்டுவிடாமல் வழிநடத்துவதற்காக காலத்திற்கு காலம் இறைத்தூதர்களை அனுப்பிவைத்தான். மனிதன் மரணத்தின் பின் எழுப்பப்பட்டு இவ்வுலகில் அவன் மேற்கொண்ட நன்மை, தீமைகள் விசாரிக்கப்பட்டு கூலிவழங்கப்படுவான். இது.... இன்றைய மேற்குலகில் காணப்படும் மதச்சார்பற்ற பண்பாடுகளுக்கு முரணானது.
மாறாத்தன்மை: இஸ்லாமிய பண்பாடுகள் மனிதன், வாழ்க்கை, பிரபஞ்சம் பற்றிய உறுதியான கோட்பாடுகளால் எழுப்பப்பட்டவை.; வாழ்க்கையில் எந்தவொரு கட்டத்திலும் மாறாதவை. எனவே, உண்மை, அமானிதம், பொறுமை என்பன எப்போதும் சிறந்த பண்புகளாகவும், பொய், புறம், குறை கூரித்திரிதல் என்பன எப்போதும் தீய பண்புகளாகவும், அரிதானவை எப்போதும் அறிதாகவுமே காணப்படும். மனித வாழ்க்கைமுறை மாறினாலும் இவை காலத்தால் மாறாதவை.
நடைமுறைக்கேற்ற முன்மாதிரி: இஸ்லாமிய நெறிமுறைகளைப்பற்றி சரிவர அறியாதவர்கள் அவற்றை சிறந்த முன்மாதிரிஎன்பார்கள். அனால் அதுமட்டுமல்ல, அவை மனித இயல்பிற்கு ஒத்துப்போகும் நடைமுறை முன்மாதிரியும்கூட. ஒவ்வொரு மனிதனும் உன்னத படைப்பு என்றடிப்படையில் அவனுடைய வாழ்க்கை தடங்கலின்றி செல்ல முற்றுமுழுதாக துணைபோகும் நெரிமுறைகளாகும். இஸ்லாமிய கோட்பாடு யூதர்கள் நேசிக்கும் சடவாதத்தையும், கிறிஸ்தவர்கள் பெரிதாக நினைக்கும் ஆன்மீகத்தையும் ஒருங்கிணைக்கவல்லது. இதைப்பற்றி இந்திய எழுத்தாளர் Raderik Pegg குறிப்பிடுகையில்:
((இஸ்லாமிய அரநெறிப்போதனைகள் சிறந்த முன்மாதிரிகளைக்கொண்டன; அதனூடாக ஒருவர் இறைவனை அறிந்து இறைபக்தனாக மாறலாம். அதே நேரம் அன்றாட வாழ்க்கையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளலாம்.))
இன்றியமையாதது: இவ்வுலகில் மனிதன் ஒரு பிரதிநிதி. ஆகவே அவனுக்கென பொறுப்பும் , நடவடிக்கைகளை நிருவகிக்கும் சுதந்திரமும் உள்ளன. இதனடிப்படையில் தனிநபர் பொறுப்புக்களில் பண்பாடுகளைக்கடைப்பிடித்தல் ஒரு முக்கிய அம்சமாகும்.
பொறுப்பு :ஒருவர் தன கடமையை உணரும்வரை அவர் சிறந்த குணமுடையவராகமாட்டார்.இங்கு பொறுப்பு என்பதின் அர்த்தம்; மனிதன் தான் புரியும் செயல்களுக்கான கூலியை எவ்வாறிருப்பினும் அதை அனைவர் முன்னிலையிலும் ஏற்கத்தயாராக இருக்கிறேன் என ஏற்றுக்கொள்வதாகும்.
பொறுப்புக்களுக்கென சில வரையறைகள் உள்ளன. இஸ்லாத்தின் தனி மனித பொறுப்புக்கள் அவனுடடைய தனிப்பட்ட தீர்மானம் அல்லது நடவடிக்கையோடு வரையறுக்கப்பட்டுள்ளன. தீர்மானத்தில் ஒன்றிட்கு மேற்பட்ட நபர் பங்குகொள்வார்களாயின் அதை கூட்டு அல்லது சமூகப்பொறுப்பு என்போம்.அதே நேரம் சமூகம் மற்றும் தனிநபார்களுக்கிடையிலான பரஸ்ப்பர பொறுப்பும் உண்டு. சுருங்கக்கூறின் ஒருவர் இன்னொருவருடைய தனிப்பட்ட தீர்மானம் அல்லது நடவடிக்கையில் தலையிட மாட்டார்.
சமூக ஒழுங்கு முறைக்கு ஏற்ற பண்பாடுகளை கடைப்பிடிப்பதனூடாக சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளல்; மனிதன் என்ற அடிப்படையில் அவனுடைய தனிப்பட்ட உணர்வுகளை சீர்செய்பவன் அவனே. பண்பாடுகளை கடைபிடிப்பதனூடாகவே பூரண அமைப்பில் சுய கட்டுப்பாட்டை அவனால் எற்படுத்திக்கொள்ள முடியும். மனிதனுடைய எண்ணத்தை சீர்செய்வதனூடாக இஸ்லாம் இக்கட்டுப்பாட்டு முறையை விருத்தியடையச்செய்ய பாடுபடுகிறது. மனிதன் தவறிலிருந்து பாதுகாக்கப்பட்டவன் அல்ல அவனால் நிகழக்கூடிய தவறுகளால் சூழ உள்ளவர்களும் பாதிக்கப்படலாம். எனவே இஸ்லாம் அவனுடைய மனசாட்சியையும் வெறுமையாக விட்டுவிடவில்லை.பண்பாட்டு விழுமியங்களை கடைப்பிடிக்குமாறு அவனை வலியுறுத்துகிறது அவற்றை மீறும் பட்சத்தில் சமூகரீதியான சில தண்டனைகளையும் விதித்துள்ளது.
ராஜீவ்: உண்மையிலேயே மிகச்சிறந்த ஒழுங்கு முறைதான்.