இஸ்லாமும் பயங்கரவாதமும்

 இஸ்லாமும் பயங்கரவாதமும்
5
8343

இஸ்லாமும் பயங்கரவாதமும்

இஸ்லாமும் பயங்கரவாதமும்

குறிப்பிட்ட தினத்தில் நண்பர்கள் மூவரும் உரையாடல் பகுதி (தகவல் பரிமாற்ற அறை)யினூடாக சந்தித்து கொன்டனர் மைக்கல் வந்தனத்தை தெரிவித்தவராக நண்பர்களை நோக்கி.

மைக்கல்: கடந்த எங்களுடைய ஒன்று கூடலில் பெரியார் றாஷித் குறிப்பிட்ட சில அம்சங்கள் இஸ்லாம் பற்றிய கண்ணோட்டதிற்கு முற்றிலும் முரணானவை அவர்களுடைய மார்க்கத்தின் உன்னதமான பக்கங்களை மாத்திரம் எங்களுக்கு காண்பித்துவிட்டு மீதமான இருள் சூழ்ந்த பகுதிகளை விட்டுவிட்டார் அதாவது பயங்கரவாதமென்றால் அது இஸ்லாம் என கூறும் அளவு இன்றும் நாம் கண்ணூடாக கண்டுகொன்டிருக்கிறோம்.

ரஜிவ்: இவ்விடயத்தில் உங்களுடன் ஓரளவு உடன்படுகிறேன் ஆயினும் பயங்கரவாதம் மதத்தையோ அல்லது இனத்தையோ சார்ந்ததல்ல எனக்குத் தெரிந்த மட்டில் நான் வசிக்கும் இந்தியாவில் எவ்வளவோ படு மோசமான நிகழ்வுகள் அரங்கேறிவுள்ளன ஆனால் பல்வேறுபட்ட காரணங்களை அடிப்படையாக கொன்டவை அவற்றில் எதை நோக்காக கொன்டவை என நாம் ஆராய்வது நல்லது.

மைக்கல்: நான் ஏற்கனவே இதை கூறினேன் இஸ்லாத்தில் பயங்கரவாதம் மறைந்திருக்கிறது அது வாலால் பரப்பபட்டது என்ன றாசித் இதை மறுக்கிறீர்களா .

ராஷித்: ஆம் உறுதியாக மறுக்கிறேன் ஆதாரங்களும் மறுக்கின்றன.

மைக்கல்:எந்த ஆதாரங்கள்.

ராஷித்: சமய ஆதாரங்கள் வரலாற்று உண்மைகள் நடைமுறை சம்பவங்கள் என அனைத்தும் மறுக்கின்றன முதலில் ஊடங்களும் அவை சார்ந்த வெளியிடக்கூடிய பொய்யான பிரச்சாரங்களை உங்கள் சிந்தனையை விட்டும் அகற்றுங்கள்.

ரஜிவ்: நாங்கள் சுதந்திரமான சமூகம் எங்கள் சிந்தனையை யாராலும் கட்டுபடுத்த முடியாது.

ரஷித்: ம் சரி நங்கள் தெரிவுச் சுதந்திரம் உடையவர்கள் அனால் இருதியில் ஊடகதுறையை ஆள்பவர்கள் முன்வைப்பதே நாம் தேர்ந்ததெடுக்கிறோம் அரசியல் வாதிகளும் இன்றைய சீர்த்திருத்த வாதிகளும் அதற்கு எங்களை நிர்பந்திக்கின்றனர் இன்றுவரைக்கும் இஸ்லாத்தையும் பயங்கர வாதத்தையும் தொடர்பு படுத்தி மேற்கத்தய அரசியல் வாதிகள சிந்தனையாளர்கள் மட்டத்தில் வாக்குவாதங்கள் அரங்கேற்றி கொன்டுதான் உள்ளன மேற்கத்தய நாகரீகத்தை காட்டிகொடுப்பதாக கூறிக்கொன்டு பயங்கரவாத்துக்கெதிரான போர் என்ற பெயரில் மீண்டும் ஒரு சிலுவை யுத்ததிற்கு அழைப்பு விடுக்கிறது.

மைக்கல்: நான் மீண்டும் ஒரு தடவை கூறுகிறேன் உண்மையை கண்டறிவதே எங்களுடைய நோக்கம்.

ராஷித்: மேற்கத்தயம் நினைப்பதை போன்று இஸ்லாம் தீவிரவாதத்தை தூன்டகூடியதாகவும் கிறிஸ்தவம் சமாதானத்தை போதிக்கும் மதமாக இருக்குமானால் நண்பரே வால் என்ற பதம் குர்ஆனில் எத்தனை தடவை பைபிளில் எத்தனை முறை கூறப்பட்டுள்ளது என தெரியிமா.

மைக்கல்: சரியாக தெரியாது ஆனால் பைபிளிலும் பார்க்க குர்ஆனில் அதிகமான தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது என உறுதியாக நம்புகிறேன்.

ராஷித்: உங்கள் இருவருக்கும் ஓர் திடுக்குடும் தகவல் அல்குர்ஆனில் 114 அத்தியாயங்களும் 62360 வசனங்களும் 77439 சொற்களும் உள்ளன ஆனால் ஒரு தடவையெனும் “வாள்” என்ற பதமோ அல்லது ஒத்தபதமோ அல்குர்ஆனில் குறிப்பிட படவில்லை வாள் என்ற பதத்திற்கு அரபுமொழியில் அன்னளவாக 60 சொற்கள் உள்ளன அதே நேரம் பரிசுத்த வேதாகமத்தில் 200 க்கும் மேற்பட்ட தடவைகள் கூறபட்டுள்ளன .

மைக்கல்: ஓஹ்ஹ்... உன்மையில் ஆச்சரியமாக இருக்கிறது இதையா நீங்கள் சமய ஆதாரங்கள் என்கிறீர்கள்.

ராஷித்: சம. ஆதாரங்களில் இது வெறும் ஒரேயொரு ஆதாரமே மேலதிகமாக கூறலாம் ஆனால் ஏனைய உன்மைகளை பற்றி அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.

ரஜிவ்: அந்த உண்மைகள் என்ன.

ராஷித்: அவற்றில் மிக முக்கிய வரலாற்று உண்மையை நண்பர் றாசித் நிச்சயம் நீங்கள் அறிந்து இருப்பீர்கள் முஸ்லீம்கள் உலகம் பூராகவும் பறந்து வாழ்கிறார்கள் குறிப்பாக இஸ்லாமிய படை சென்றிராத தெற்காசிய,கிழக்காசிய நாடுகள் அதேபோன்று ஆபிரிக்க கண்டத்தின் பெரும்பாலான பகுதிகள் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதிகளாகும் .

இஸ்லாமிய வரலாற்றில் எந்த ஒரு நிலையிலும் முஸ்லீம்கள் இஸ்லாத்தை ஏற்குமாறு ஏனையவர்கள வர்புறுத்தியதாக எந்த தகவலும் இல்லையென நேர்மையான வரலாற்றாசிர்யர்கள் குறிப்பிடுகின்றனர்.

மைக்கல்: ஆனால் சில வரலாற்றாசிரியர்களோ நீங்கள் கூறியதற்கு மாற்றமாக கூறுகிறார்கள் இவ்வாதாட்டத்தை எவ்வாறு நியாய படுத்துவீர்கள் .

ராஷித்: நண்பரே ஏராளமான சான்றுகள் உள்ளன.

முதலாவது: முஸ்லீம்கள் வெற்றி கொண்ட பிரதேசங்களில் வாழ்ந்த ஏனைய சமூகத்தினர் இஸ்லாமிய ஆட்சியிலும் ஏன் இன்னும் கூட அவர்களின் மார்க்கத்திலேயே இருக்கின்றனர் எகிப்து ,பலஸ்தீனம் ,லெபனான் ,கிரீஸ்-கிரேக்கம் – இந்தியா போன்ற நாடுகள் இதற்கு எடுத்துகாட்டாகும் ஆனால் அதே நேரம் கிறிஸ்தவ இரானுவத்தினர் கட்டுபாட்டில் இருந்த ஜெரூஸலம் ,அநிதுலூசியா ,பிலிப்பைன போன்ற நாடுகளை எடுத்து கொன்டால் மேற்கூறியதற்கு முற்றிலும் மாறாக இனப்படுகொலைகள அரங்கேறின கிறிஸ்தவ மதத்தை ஏற்றுகொள்ளுமாறு அப்பிரதேச வாழ் மக்களை வற்புறுத்தினர் அதற்கு உடன் படாதவர்களை கட்டாய இடப்பெயர்ச்சி தெய்தனர்.

இரண்டாவது: இஸ்லாமியர்கள் வெற்றி கொன்ட நாடுகளை விட்டு இஸ்லாமிய இரானுவ படை சென்றதும் அங்கே முஸ்லீம்கள் கொடூரமாக நடந்து கொன்டார்கள் என்பதற்கோ அல்லது அச்சமூகம் இஸ்லாத்தை வெறுத்தார்கள் என்பதற்கோ எவ்வித தோற்றப்பாடும் கிடையாது ஆனால் முன்னால் சோவியத் ரஷ்யாவில் வாழ்ந்த முஸ்லீம்கள் கம்யூனிச ஆட்சியில் இஸ்லாத்தை சுதந்திரமாக பின்பற்ற முடியாமல் மறைத்தார்கள் இக்கொடூரமான ஆட்சிமுறை நீங்கி இஸ்லாத்தை சரிவர பின்பற்ற முடியிமான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து ஏங்கித் தவித்தார்கள் .

மூன்றாவது: இஸ்லாமிய நாடுகளுடன் போர் செய்து பெரும்பாலான பிரதேசங்களை கைப்பற்றிய தாத்தாரியர்கள் துருக்கியர்கள் போன்றோர் முஸ்லீம்களின் நடத்தையை கண்டு இஸ்லாத்தை ஏற்று அதை காப்பவர்களாக மாறிய வரலாறும் உண்டு.

மைக்கல்: இஸ்லாம் வாளால் பரப்பபடவில்லை என்பதை ஏற்று கொள்கிறேன் அதேபோனேறு வரலாற்றை ஒரு புரம் விட்டு விடுங்கள் தற்போதைய நிலைமையை பார்த்தால் பயங்கரவாதமெனின் அது இஸ்லாம் தான் என்று உலகமே கூறுமளவு மாறிவிட்டது என்ன இதை ஏற்று கொள்கிறீர்களா.

ராஷித்:முதலில் பயங்கரவாதம் என்றால் என்னவென்று வரையறை செய்து கொள்வேம்.பிறகு இவ்வுலகில் பயங்கரவாதிகள் எனப்பார்ப்போம்.

ரஜிவ்: உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு மத்தியில் பயங்கரவாதத்தை பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன என்றாலும் பொதுவான அமைப்பில் வரம்பு மீறிய தரப்பினர் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ அல்லது அரசாகவோ அல்லது பொருளாதார நோக்கங்களை அடைவதற்காக அப்பாவிகளை ஏதோ ஒரு விதத்தில் அச்சுறுத்தல் எனலாம்.

ராஷித்: இவ்வறையரை ஓரளவு ஏற்றுகொள்ளப்பட்டதாக இருப்பினும் சில குறைபாடுகளும் உள்ளன பரவாயில்லை அத்தோடு வரம்புமீறிய தரப்பினர் தனிநபராகவோ அல்லது குழுவினராகவோ அல்லது அரசாகவோ இருந்தாலும் சரி என்ற வசனத்தையிம் இனைத்து கொள்வோம்.

மைக்கல்: ம் அதில் எந்த பிரச்சினையிம் இல்லை சரி உலகலாவரீதியாக அரங்கேறிய பயங்கரவாத நிகழ்வுகளை பார்ப்போம் 2001ம் ஆன்டு செப்டம்பர் 11ல் நடைபெற்ற நிவ்யோர்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுர தாக்குதல் இந்துநேசியாவின் பாலியல் மேற்கத்தய உல்லாச பிரயானிகளுக்கெதிராக நடைபெற்ற தொடர் குண்டு தாக்குதல் ,யூதர்களுக்கு எதிராக பலஸ்தீனர்கள் மேற்கொள்ளும் அடாவடித்தனங்கள் இவையனைத்தும் முஸ்லீம்களால் மேற்கொள்ளபட்ட பயங்கரவாத நடவடிக்கைகளே.

றாசித்: நண்பரே சற்று பொருங்கள் பலஸ்தீனர்கள் மேற்கொள்கின்ற தாக்குதல்கள் ஆக்கிரமிப்பு படைக்கெதிராக தற்பாதுகாப்பு நடவடிக்கைகளே அதற்கென வரலாற்றில் பயங்கரமான கருப்புபக்கங்களும் உள்ளன ஒரு பூமியை ஆக்கிரமித்து அதிலுள்ளவர்களை விரட்டி அவர்கள் பல வழிகளிலும் துன்புறுத்த படுவதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியிமா இதோ இந்த வன்முறைக்கு என்ன கூறுகிறீர்கள்.

1947.12.31 இல் அஷ்ஷெக் நகரில் அரேங்கேரிய படுகொலைகள் இதில் 600 அப்பாவி பொதுமக்கள் தங்களது வீட்டிலேயே அநியாயமாக கொள்ளபட்டார்கள்.

1948.04.10இல் தீர் யாஸின் கிராமத்தில் நடைபெற்ற படு கொலைகள் இதில் ஊர்வாசிகளில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பழி.கினர்.

1948.7.11 இல் நடைபெற்ற அல்லத் இனச்சுத்திகரிப்பு பள்ளியில் கூடியிருந்த 426 அப்பாவி பொதுமக்கள் மிக்கொடூரமாக மாய்ந்தார்கள் ஒரு வரையிம் அந்த யூதர்கள் விட்டுவைக்கவில்லை .

1965.ஒக்கோட்பர்களில் அரங்கேறி கப்ர்காஸிம் படுகொலை இதில் குழந்தைகள் சிறுவர்கள் என 94 பொதுமக்கள் கொல்ல பட்டனர்.

1982.9.18 இல் நடைபெற்ற சப்ரா,ஷாட்டிலா,படுகொலைகள் லெபனான் கிறிஸ்தவ போராளிகள் உதவியுடன் உலகபயங்கரவாதி ஏரியல் ஷெரோனால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது 72 மனித்தியாலங்கள் இத்தொடர்தாக்குதளில் பெண்கள் ,குழந்தைகள் ,வயோதிபர்கள் என 3500 பலஸ்தீனர்களும் ,லெபனானியர்களும் கொல்லபட்டார்கள் முஸ்லீமாக பிறந்தது அவர்கள் செய்த குற்றமா.

1994.4.25 இல் அறங்கேறிய இப்ராஹிமிய்யா பள்ளிவாசல் படுகொலை சில குழுக்களின் உதவியுடன் இஸ்ரேலியபடை மேற்கொன்ட இத்தாக்குதலில் 29 பேர் தொழுதுகொன்டிருக்கும் நிலையில் உயிரிளந்தார்கள் 50 பேர் பள்ளிவாசலுக்கு வெளியில் கொல்லப்பட்டார்கள் 350 தொழுகையாளிகள் படுகாயமடைந்தார்கள்.

இன்றுமொன்றை கூறுகிறேன் நன்றாகக் கவனியிங்கள் 1995 ஆம் ஆண்டு ஒல்ஹோமாவில் நடைபெற்ற fedarel கட்டிட குண்டுவெடிப்பு இதில் 168 பேர் கொல்லப்பட்டனர் 500 பேர் காயமுற்றனர் 2011 ஜூலைகளில் அரங்கேறிய otaya தீவு மற்றும் ஒஸ்லோ படுகொலைகள் இதில் 92 பேர் மான்டனர் 90 பேர் காய முற்றனர் இவ்விருதாக்குதல்களும் கிறிஸ்தவ தீவிரவாதிகளால் வேன்டுமென்ற மேற்கொள்ளப்பட்டனர்.

தீவிரமாதம் மதம் அல்லது நாகரீகம் சார்ந்த என்ற கண்னோட்டத்தில் ஆராய் வோண்டுமானால் நவீன காலத்தில் நடைபெற்ற சம்பவங்களையும் கவனத்திற்கொள்ள வேண்டுமல்லவா.

எக்காலத்தில் இஸ்லாமிய அரசு மேற்கத்திய அரசை தாக்கியதாக வரலாற்றில் எங்குமே குறிப்பிடவில்லை ஆனால் அதற்கு மாற்றமாக நிகழ்ந்திருக்கிறது.

அமெரிக்காவில் வாழ்ந்த சுமார் 10 மில்லியன் சனத்தொகைகொன்ட செவ்விந்தியர்கள் 2இலட்சம் வேண்டுமென்பதற்காக மேற்கத்தய நாகரீக விரும்பிகளால் இனச்சுத்திகரிப்புக்குள்ளாக்கப்பட்டார்கள் அது மட்டு மன்றி அவர்களுடைய அமெரிக்கா கண்டனும் பரிக்கப்பட்டது.

மேற்குலகு இருபெரும் உலகமகாயுத்தங்களை தோற்றுவித்து –குறிப்பாக- ஐரோப்பிய நாடுகள் இரண்டாக பிரிந்து –முதலாம் உலக மகா யுத்தம் அதில் முதல் அனியினரில் பழியானவர்களின் என்னிக்கை 20 மில்லியனை தாண்டியது அதே என்னிக்கையிலானோர் காயம்மடைந்தனர் சிலர் ஊனமுற்றனர் இரண்டாம் அனியில் 55 மில்லியன் பேர் வரை பலியாகினர் காயமடைந்தவர் 55 மில்லியனையிம் ஊனமுற்றவர்களின் என்னிக்கை 3 மில்லியனையும் அடைந்தது பலியானவர்களில் பெரும்பாலானோர் காலநித்துவ வாதிகள் சிவில் சமூகமாக இருந்தனர் போர் புரிந்தோர் தங்களின் எதிரியை முறியடிப்பதற்காக சிவில் சமூகத்தையே இலக்காக கொன்டனர்.

அப்பாவி மக்களை துன்புறுத்துவது குற்றமெனின் மேற்சொன்ன அதே அப்பாவிகளை கொல்வது தாக்குதலுக்கான சூத்திரதாரிகளின் பிரதான நோக்காகவும் இருந்தது இவற்றையெல்லாம் குறிப்பாக பலஸ்தீனர்களுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட சியோனிஷ அடாவடித்தனங்களுக்கு துனைநிற்றல் மற்றும் ஈராக்கின் தொடர்முற்றுகையால் என அனைத்தையிம் மேற்குலகும் ,அமெரிக்காவும் தற்பாதுகாப்பு நடவடிக்கை என உளறுகின்றன.

ரஜிவ்: ம்.... எனவே பயங்கரவாதம் மதம்சார்ந்ததோ அல்லது நாகரீகம் சார்ந்ததோ அல்ல என்ற முடிவுக்கு வரலாம்.

ராஷித்: ஆம் மதஞ்சார்ந்ததல்ல ஆனால் மோதல் படைவலுப்படுத்தல் எதிர்ப்புநடவடிக்கைகளில் ஈடுபடல் முதலியவற்றை நோக்காக கொன்ட மேற்கத்தய நாகரீகங்களின் அனுமானங்களை பற்றி ஆராய கடமைபட்டுள்ளோம் ஏனெனில் கிரேக்க உரோம நாகரீகங்கள் முழுமூச்சாக கொன்ட அதே சிந்தனையை இன்றைய மேற்கத்தய நாகரீகம் உள்வாங்கியுள்ளது ஐரோப்பா உட்பட உலகம் முழுவதையிம் ஆற்கொன்டுள்ள பயங்கரவாத நடவடிக்கையின் தோற்றங்களை கிறிஸ்தவமத போதனைகளால் தடுக்கமுடியாதுள்ளனய.

மைக்கல்: அடுத்த உரையாடலில் சந்திப்போம்.




Tags: