இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் மனித சமுதாயத்தின் இன்றியமையாத ஒன்று

 இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் மனித சமுதாயத்தின் இன்றியமையாத ஒன்று

இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் மனித சமுதாயத்தின் இன்றியமையாத ஒன்று

இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் மனித சமுதாயத்தின் இன்றியமையாத ஒன்று

நண்பர்கள் மூவரும் உரையாடலை ஆரம்பித்த வேலை ராஜீவ், மைக்கல் இருவரும் ராஷிதுடைய சத்தத்தை மீறி வேறு சப்தங்கள் கேற்பதை உணர்ந்தனர். அவர்கள் இருவரும் ராஷிதிடம் அதைப்பற்றி வினவியபோது அவர் அவர்களிடம்தான் முக்கியமான செய்தி கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அதுமுடியும்வரை சற்று பொறுமையாக இருக்குமாறும் வேண்டிக்கொண்டார். சிறிது நேரத்தின்பின் ராஷித்: மன்னிக்கவும், இந்த நாட்களில் பரவக்கூடிய செய்திகளை அவசியம் நான் கேற்கவேண்டுமென்பதால் நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும். என்னுடைய நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியுமா?

ராஜீவ்: ஆம், தொடராக புரட்சிகள் வெடித்தவண்ணம் உள்ளன.

மைக்கல்: எனக்குத்தெரிந்தவரையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மேலோங்கி நாட்டின் ஒழுங்கை இஸ்லாமிய ஆட்சி முறைக்கு மாற்ற முயல்வதாக தெரிகிறது. இதுமிக ஆபாத்தானவொன்று.

ராஷித்: இதில் எந்த வகையில் ஆபாத்து இருக்கிறது.

மைக்கல்: மனித சமூகம் சமய சாம்ராஜ்ஜியத்தினால் மிகக்கசப்பான அனுபாவத்தை கண்டுவிட்டது, மத்திய காலப்பகுதியிலேயே முடிவடைந்து தோல்வியும் கண்டுவிட்டது.

ராஷித்: சமய சாம்ராஜ்ஜியத்தினூடாக நீங்கள் எதை நாடுகிரீகள்?

மைக்கல்: இறைவனிடமிருந்து தமக்கு வேதவாக்கு இறங்குவதாகக்கூரிக்கொண்டு மதகுருமார்கள் ஆளக்கூடிய சாம்ராஜ்ஜியம்தானே அது. அதில் மிக ஆபாத்தான விடயம் அவர்கள் கடவுளின் வார்த்தையால் பேசுபவர்கள் எனக்கூறிக்கொண்டு புனிதத்தன்மையையும், பரிசுத்ததன்மையையும் தங்களோடு சேர்த்துக்கொள்வார்கள்,இதனால் அவர்களுக்கு முரணாக செயற்படுவது இறைவனுக்கு முரணாக செயற்படுவதற்குச்சமனாகும். என விவாதிப்பார்கள். அவர்களை கேள்வி கணக்கு கேற்கயாருமில்லை. இது என்ன அநியாயம்.

ராஷித்: கலாச்சார பிறழ்வு இஸ்லாமிய ஆட்சி முறை பற்றிய பிழையான கண்ணோட்டத்தை உருவாக்கிவிட்டிருப்பதை நினைத்தால் எனக்கு கவலையாகவுள்ளது. நீங்கள் கூறிய theocracy பற்றிய விடயம் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றே சமைய அடிப்படையிலான theocracy ஆட்சி முறையால் மத்தியகால ஐரோப்பா திருச்சபையின் வாயிலாக பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்தது ஆனால் இஸ்லாம் இவ்வாறானதொரு நிலைப்பாட்டை அங்கீகரிக்கவில்லை. இஸ்லாமிய மத குருமார்களுக்கு சுயமாக தீர்ப்ப்பு வழங்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. மனிதன் என்ற அடிப்படையில் யார் தவறிழைத்தாலும் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர். தேவை ஏற்படின் மரணதண்டனையும் வழங்கப்படும். இங்கே மிகத் துலாம்பரமான வேறுபாடு யாதெனில்: இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மூலாதாரம் இஸ்லாம் மார்க்கமே. அதை அமுல்படுத்தும் நபருக்கு எவ்வித புனித தன்மையோ பரிசுத்தமா கிடையாது. ஆட்சி அதிகாரத்தை இறைவன் தனக்கு பொறுப்புச்சாட்டியிருப்பதாக வாதாடும் எந்தவொரு ஆட்சியாளரும் இஸ்லாத்தில் கிடையாது ஆனால் அவ்வதிகாரத்தை அவன் மக்கள் சம்மதத்துடன் பெற்றிருப்பது அவசியமாகும்.

இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் ஐரோப்பாவில் காணப்பட்ட சமய சாம்ராஜ்ஜியத்திற்கு முற்றிலும் மாற்றமான ஒரு வெற்றிகரமான முன்னேற்றப்பாதையை கடந்து சென்ற எழில் மிக்க ஆட்சிமுரையாகவே காணப்பட்டது.

ரஜிவ்: ம்..சரி இஸ்லாமிய ஆட்சிமுறைக்கும் ஏனைய சமய ஆட்சி முறைக்குமிடையிலான வித்தியாசத்தை அறிந்து கொண்டோம். எனவே, இஸ்லாமிய ஆட்சி முறைக்கும் சமய சார்பாற்ற ஆட்சி முறைமைக்குமிடையிலான வேறுபாடுகளைப்பற்றி கூற முடியுமா?

ராஷித்: ம்ம்...பாரிய வித்தியாசங்கள் உள்ளன...ஏனெனில் மனிதன், வாழ்க்கை, பிரபஞ்சம் பற்றிய இஸ்லாமிய என்னக்கருவிற்கும் இடையில் அடிப்படையிலேயே வேறுபாடுகள் உள்ளன. இஸ்லாமிய ஆட்சிமுறை வாழ்க்கையுடன் ஒருங்கிணையும் மார்க்கம் என்ற இஸ்லாமிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும்; ஒரு முஸ்லிம் வாழக்கூடிய பூரண நெறிமுறையை பிரதிபலிக்கும் ,தனிமனிதன் சமூகம், அரசாங்கம் என அனைவரின் பங்களிப்பையும் கவனத்திற்க்கொள்ளும்.

அதை அறிந்து கொள்வதற்கு முன்னர் அல்லாஹ்வின் ஆட்சியதிகாரத்தில் எங்களுடைய அந்தஸ்த்து என்னவென்பதைப்பற்றி அறிய கடமைப்பட்டுள்ளோம். எங்களைப்படைத்த இறைவன் அல்லாஹ் ஒருவனே என நாம் நம்புவோமானால் அவள் பொருந்தக்கூடிய செயல்களைச்செய்வதைத்தவிர வேறெந்த ஒன்றும் எங்களுக்கில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வானங்கள் பூமி அனைத்தும் அவன் ஒருவனின் ஆட்சிக்குற்பட்டவையே என நம்புவோமாயின் அவ்வாட்சியில் அவனுடைய நாட்டமின்றி எதுவும் நடைபெற முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் ஒருவனே எங்களைப்பரிபாளித்து உணவளிப்பவன் என நம்புவோமாயின் நாம் அவனுடைய அடிமைகளே தவிர வேறில்லை....உலகத்திலுள்ள அனைத்திற்கும் தீர்ப்பளிக்கும் தீர்ப்பாளன் அல்லாஹ் ஒருவனேயானால் அவனுக்கு முற்றுமுழுதாக வழிப்படுவதைத்தவிர வேறு எவ்வித அந்தஸ்த்தும் எங்களுக்கு இவ்வுலகத்தில் கிடையாது.

மைக்கல்: என்றாலும் எச்சரிக்கைகளும், வெறுமனே வாய்மொழிகளும் நிறைந்த ஒரு பயிற்சியை எவ்வாறு நாம் துணிந்து மேற்கொள்ள முடியும். ஒரு மனிதன் அவன் எவ்வாறு வாழவேண்டும், அவனுக்கு ஈடேற்றம் அளிக்கக்கூடியவை எவை மற்றும் அவனுடைய வாழ்கையை நெறிப்படுத்த உகந்த வழிமுறை முதலியவற்றை அவனால் சுயமாகவே தீர்மானிக்க முடியுமே தன்னைப்பற்றி தானாகவே அறிந்து கொண்டு பயிற்சி பெறுவதில் தடையேதுமில்லையே.

ராஷித்: சிக்கலின் யதார்த்தம் மனிதன் ஆட்சயாளனாக இருக்கத்தகுதியானவனா? என்பதில் உள்ளது. எந்தவொரு பொருளாக இருப்பினும் அதைப்பற்றி முன் அறிமுகமில்லாதவர் அதை இயக்க முன் பயிற்சிபெறவேண்டுமென்பது நாம் அனைவரும் அறிந்ததே. வாகனத்தை வழிநடத்த தெரியாதவன் அதை ஓட்ட முயல்வது மடத்தனமான காரியம் என்பதை அறிவோம். முறையான வழிகாட்டலின்றி சிறிய ஒரு கருவியை கூட அவனால் இயக்க முடியாது எனின், சிக்கல்களும் இன்னல்களும் பல கோணங்களில் நிறைந்த அவனுடைய வாழ்க்கையை எவ்வாறு அவன் வழிநடத்திச்செல்வான்....தன்னைப்பற்றிக்கூட முழுமையாக அறியாதவிடத்து எவ்வித வழிகாட்டலுமின்றி பிறரை எவ்வாறு அவன் அறிந்து கொள்வான்.

அடுத்த சிக்கல்: மனிதர்கள் அனைவரையும் ஒரே சமநிலையில் நின்று நோக்கக்கூடிய ஒருவனால் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும். தனிமனித அல்லது குடும்ப அல்லது குறிப்பிட்ட வர்க்க அல்லது பிரதேச அல்லது குறிப்பிட்ட சமூக நலனைப்பேனக்கூடிய ஒருவனால் மக்கள் அனைவருக்குமான நீதியைப்பெற்றுக்கொடுக்க முடியாது. எனவே பூமியில் இவ்வழிமுறையின்றி நீதியை நிலைநாட்ட முடியாது.

ஒரு மனிதனால் சுய நலத்திலிருந்து ஒருபோதும் நீங்கியிருக்க முடியாது. இது ஒவ்வொரு மனிதனிலும் குடிகொண்டுள்ள பலவீனமாகும். அரசியற்தலைவர்கள், பிராமணர்கள், பாப்பரசர்கள் இயக்கவாதிகள், அந்தஸ்த்து மற்றும் பணம் படைத்தவர்கள் என எடுத்துக்கொண்டால் இவர்கள் அனைவரும் அவர்களுக்கென தனிப்பட்ட உரிமைகளை கட்டாயமாக்கிக்கொண்டவர். இவர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் ஏனையவர்களைவிட பிரத்தியோகமாக சில உரிமைகளை இவர்களுக்கு வழங்கின.பொதுமக்களை இச்சட்டங்களை இயல்பாகவே அமையப்பெற்றன என நம்பவைப்பதற்காக அவர்கள் பல வழிகளிலும் அவற்றைத்தினித்தனர். இப்படிப்பட்டவர்களுடைய அதிகாரத்தில் சமவுடமைகொண்ட சமூகத்தையோ அல்லது நீதியான ஆட்சியையோ எதிர்பார்க்கமுடியுமா?

எத்தனையோ வல்லரசு நாடுகள் அவற்றை விட பலம்குன்றிய நாடுகளை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன. அவற்றின் எந்தவொரு சட்டமாவது இவர்களால் மனித இனத்திற்கான சட்டத்தை இயற்றி நீதியை நிலைநாட்ட முடியுமென எதிர்பார்க்கமுடியுமா?

ராஜீவ்: என்றாலும் தலைவர் ராஷித் வேறுமார்க்கங்களை பின்பற்றக்கூடிய சிறு பான்மை இனத்தவர்கள் உங்களுடைய இஸ்லாமிய நாட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள்? உதாரனமாக எங்களுடைய இந்தியாவில் நூற்றுக்கும்மேற்பட்ட மதங்களை வழிப்படும் சிறுபான்மை இனத்தவர்கள் உள்ளனர். அதேநேரம் அதுவோர் இஸ்லாமிய நாடாக இருப்பின் இஸ்லாத்தை பின்பற்றுமாறு அவர்களை வற்புறுத்துவீர்கள்.

ராஷித்: நல்லவேளை இடை நீங்கள் ஞாபாகப்படுத்தினீர்கள். இதுதொடர்பான மூன்று குறிப்புக்கள் உள்ளன அவற்றை தெளிவு படுத்துகிறேன்.

முதலாவது: முஸ்லிம் அல்லாதவர் இஸ்லாமிய நாட்டில் வாழ்வதை நீங்கள் ஆட்சேபிப்பதை நினைத்தால் எனக்கு மிக ஆச்சரியமாகவுள்ளது....அதே நேரம் மதச்சார்பற்ற கொள்கையுடைய நாட்டில் வாழ்கின்ற ஒரு முஸ்லிமை அவனுடைய சமயத்திற்கும், கொள்கைக்கும் முரணான விதிமுறைகளை பின்பற்றுமாறு வட்புறுத்துகிறீர்கள்.

இரண்டாவது: ஒரு நாடு இஸ்லாமிய மயப்படுவதென்பது முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென்ற அர்த்தமல்ல. சமயம் தனிமனித கொள்கையோடு அமையப்பெற்றிருக்க வேண்டுமென்ற மதச்சார்பற்ற சிந்தனையால் தோற்றம் பெற்ற முரண்பாடாகும்.ஆனால் இஸ்லாத்தைப்பொருத்தமட்டில் அத்தோடு சுருக்கிக்கொள்ளப்பட்ட ஒன்றல்ல....இஸ்லாம் முஸ்லிமின் அடையாலச்சின்னமாகும்.சட்ட, நாகரிக மூலக்கூறாகும். நீங்கள் கூறுவதைப்போன்று பல சமயங்கள், மதங்களைப்பின்பற்றக்கூடிய சமூகத்தில் லிபரல் வாதம் அல்லது சோசளிசவாதத்தை எவ்வாறு அமுல்படுத்தமுடியுமோ அவ்வாறே அவர்கள் அல்லாதவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாமலேயே அதன் சட்டங்களையும், நாகரீகக்கூறுகளையும் கடைப்பிடிக்கலாம்.

மூன்றாவது: ஒரு நாடு இஸ்லாமிய மயப்படுத்தப்படுவதென்பது ஏனைய சிறுபான்மையினத்தவர்களுடைய உரிமைகளை நசுக்குதல் அல்லது அவர்களுடைய மதசட்டங்களில் தலையிடுதல் என்ற அர்த்தமல்ல. இஸ்லாம் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கிறது. அவர்களுடைய தனிப்பட்டவிடயங்கள் அவர்களுடைய மார்க்க சட்டங்களை வழிப்படுவதில் எவ்வித தடையும் இல்லை.

மைக்கல்: ஆனால் நாங்கள் இஸ்லாம் தோன்றி எத்தனையோ நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலத்தில் இருக்கிறோம். இவ்வாறான நிலையில் இஸ்லாம் ஆட்சிமுறையை அமுல்படுத்துவதென்பது பிற்போக்கு நடவைடிக்கையாகவே கருதப்படும். நீங்கள் எங்களுடைய கருத்துக்கள் சிந்தனைகளை மழுங்கடித்து தற்கால வாழ்க்கைக்கும், நடைமுறைக்கும் ஒவ்வாத நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டுமென விரும்புகறீர்கள்.

உதாரணமாக நீங்கள் வட்டி தடுக்கப்படவேண்டுமென வலியுருத்துகிரீகள் ஆனால் இன்றைய உலக நாடுகளின் அத்தியாவசியமான பொருளாதார கட்டமைப்பாக அது திகழ்கிறது.

ராஷித்: நண்பரே நீங்கள் கூறிய உதாரணம் யதார்த்தமற்றது சர்வதேச ஒழுங்குமுறையால் வரையறுக்கப்பட்ட கண்ணோட்டத்தினடிப்படையிலானது. இன்று நாங்கள் பின்பற்றக்கூடிய சர்வதேச ஒழுங்கமைப்பு வட்டியுடனான பொருளாதார முறையை சமூகத்தில் திணித்ததன் விளைவால் எழுந்துள்ள எத்தனையோ பாதகமான தாக்கங்களை விட்டும் பராமுகமாகவுள்ளது

இஸ்லாம் வட்டியை தடை செய்துள்ளது...உண்மைதான் ஆனால் வட்டி இன்றியமையாத பொருளாதார கட்டமைப்பு என நீங்கள் கூறியது தவறு.

உலகிலுள்ள முதலீட்டாளர்களும், ஏகாதிபத்தியர்கலுமே வட்டியை வலியுறுத்துகின்றனர் ; உலகத்திற்கு அவசியமென மக்களை நம்பவைக்கின்றனர். உண்மையில்... வட்டி முதலாளித்துவ கொள்கைக்கு மாத்திரமே அவசியமானது. மேற்கத்திய முதலாளித்துவவாதிகள், ஒரு சிறுகுழுவினரிடம் சொத்துக்குவிப்பு காணப்படுவதால் பிற்கால சந்ததியினர் பெரும்பொருளாதார சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடலாமென விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த நூற்றாண்டு முப்பதுகளில் எழுந்த உலகப்பொருளாதார பிரச்சினைகளை பார்த்தால்... இதை அறிந்துகொள்ளலாம்.

முதலாளித்துவம் தோன்றுவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே இஸ்லாம் வட்டியையும், பதுக்களையும் தடை செய்துவிட்டது. இதுவோர் அற்புதம். நண்பரே... இஸ்லாமிய ஆட்சிமுறை இஸ்லாத்திற்கு மட்டுமல்ல முழு மனிதசமுதாயத்திற்கும் இன்றியமையாதது..




Tags: