இஸ்லாத்தின் எதிர்காலம்
வழமைக்கு மாற்றமாக ரஜீவ் சற்றுதாமதமாகவே, அவர் இணையத்திற்கு வந்தவுடன் மைக்கல் அவரைநோக்கி
வருக ரஜீவ் வருக! நீங்கள் நேரத்திற்கு சமூகமளிக்கவேண்டும்...தாமதிக்கும் பழக்கம் உங்களிடம் வரக்கூடாதென எதிர்ப்பார்க்கிறேன் .
ரஜீவ்: நன்பர்களே மன்னிக்கவும் , அப்படியொன்றுமில்லை , நான் உங்களிடம் முன்வைப்பதற்காக ஓர் ஆய்வின் இறுதிக்கட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.
மைக்கல்: பிரம்மாதம், அப்போ உறையாடல் சுவாரஸ்யமாக இருக்கும்....ஆய்வாஃ ..எதைப்பற்றி.ஃ
றஜிவ்: உண்மையில்..... சொல்லப்போனால்...இஸ்லாம் தொடர்பான எங்களுடைய உறையாடலே இந்த ஆய்விக்கான காரணமெனலாம். எனவே இந்த மார்க்கம் உலகம் முழுவதும் எவ்வாறு பரவுகிறது ..எனது ஆய்வு அதைப்பற்றிதான்
மைக்கல்: அந்த ...அதே விடயம்தான் என்னையும் ஓர் ஆய்வு செய்யத்தூண்டியது. அது இருக்கட்டும், ஆய்வில் பெற்ற தகவல்களென்ன ?தலைவர் றாஷித்! நீங்கள் எங்களுடனா ?
றாஷித்: ஆமாம், உங்களோடுதான்...
றஜிவ்: நான்பெற்றுக்கொண்ட தகவல்கள் அனைத்தும் இஸ்லாம் உலகம் பூராக மிக வேகமாகப்பரவி வரும் மார்க்கம் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. உலகத்தில் 4200 க்கும் மேறபட்ட கொள்கைகளும், மதங்களும் உள்ளன ஆனால் அவற்றில் இஸ்லாமே மிக வேகமாக பரவி வருமவதாக புள்ளிவிபரவியல்கள் அறிவிக்கின்றன. உலக முஸ்லிம்களின் வளர்ச்சியை கிறிஸ்தவர்களோடு ஒப்பிடுகையில், முஸ்லிம்கள் வருடாந்தம் 6.4 % விகித்த்திலும் கிறிஸ்தவர்கள் ஒரேயொரு விகித்த்திலும் வளர்ச்சியடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எனது ஆய்வில் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெய்ன், பிரித்தாணியா, ப்ரான்ஸ் முதலியவற்றில் இஸ்லாம் இரண்டாவது பிரதான சமயமாகத்திகழ்கின்றது.
ஜேர்மனிய நாளாந்தப்பத்திரிகையான DIE WELT செய்தி வெளியிடுகையில், ஜேர்மனியில் இஸ்லாம் மிக வேகமாகப்பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராண்ஸிய உள்விவகார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிரான்ஸல் ஏழு மில்லியன் முஸ்லிம்கள், 2300 பள்ளிவாசல்கள் இருப்பதாகவும் வருடாந்தம் 3600 க்கும் அதிகமானோர் இஸ்லாத்தில் நுழைவதாகவும், 2025 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் பிரான்ஸ் சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினராக வகிப்பார்கள் என எதிர்பாக்கப்படுவதாகவும், உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 2050 ஆம் ஆண்டில் ஐரோப்பிய சனத்தொகையில் 20 சத வீதமானவர்களாக முஸ்லிம்கள் திகழ்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வேறு சில புள்ளி விபரவியல்களின் படி 2040 ஆம் ஆண்டில் முஸ்விம்களே ஐரோப்பிய பெரும்பான்மைச் சமூகமாகத்திகழ்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
கணக்கெடுப்புக்களின் பிரகாரம் பத்து வருடங்களின்பின் ஒல்லாந்து நாட்டுமக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லீம்களாக திகழ்வார்கலென தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவீடன் குடிமக்களுக்கு மத்தியில் இஸ்லாம் அதிர்ச்சியூட்டும் விதத்தில் பரவிவருவதாக மற்றுமொரு ஆய்வு குறிப்பிடுகிறது. இஸ்லாமியர்களின் இத்தொடர் அதிகரிப்பினால் சுவீடனில் தற்போது 120,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குடியிருப்பதாக உத்தியோகப்பூர்வ கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது.
முஸ்லிம்களின் இப்பரவலாக்கத்தால் அதிகமான பள்ளிகள் கட்டப்படுவதாக நம்பப்படுகிறது.. ஐரோப்பாவில் இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பள்ளிவாயல்கள் இருப்பதாகவும், அவற்றிட்கு பெரும்பாலான முஸ்லிம்கள் வருகை தருவதாகவும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அதேநேரம் கிறிஸ்தவ தேவாலயங்களை பார்ப்போமானால், அதற்கு மாற்றமாக , வருகை தருபவர்களின் எண்ணிக்கை சரளமாகக்குறைந்து வருகின்றமை ஆய்வுகள்மூலம் தெரியவந்துள்ளன. Bank Dresden மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் கடந்த வருடங்களாக ஜெர்மனியில் (கிறிஸ்தவ)தேவாலயங்களுக்கு வருகைதருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், Diocese of Essen இல் மாத்திரம் 350 தேவாலயங்களில் 96இல் மதஅனுஷ்டாணங்கள் நடைபெருவதில்லை எனவும், அதனால் அவைகள் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
எந்தளவுக்கெனின் ஐரோப்பிய தேவாலயமொன்றில் வருகைதருபவர்கள் குழுக்கள் முறையில் தெரிவுசெய்யப்பட்டு வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. மதஅனுஷ்டாணங்களில் ஈடுபடுவதற்காக மக்கள் தேவாலயங்களுக்கு வரவேண்டுமென்பதற்காக இதை செய்கிறார்கள்!!.
மைக்கல்: முஸ்லிம்களை ஐரோப்பாவைவிட்டே வெளியேற்றவேண்டுமென பிடிவாதமாக இருக்கும் சில வலதுசாரிக்கட்சிகளின் இஸ்லாத்தைக்கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் அவதாணிக்கும்போதே... அதை அறிந்துகொள்ளலாம். அதுசரி... இந்த மார்க்கம் இவ்வளவு வேகமாகப்பரவுவதற்கான காரணம் என்ன?.. என்ன ராஷித் வழமைக்கு மாற்றமாக மௌனமாக இருக்கிறீர்?
றாஷித்: உண்மையிலே .. இதைக்கேட்கும்போது மிக அருமையாகவுள்ளது. அதனால், மௌனமாக இருந்து விட்டேன். இஸ்லாம் மிக வேகமாகப்பரவுவதற்கு அதன் தனித்துவக்காரணி, நடைமுறைக்காரணி, மேற்கத்திய சமூகக்காரணி என பல காரணிகள் உள்ளன. என்றாலும், மனித இனம் படைக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை நிலைத்திருக்கக்கூடிய வேர்கள் ஆழப்பதிந்த ஒரு மார்க்கத்தில் இவ்வாறு காணப்படுவது... ஆச்சரியமான ஒன்றல்ல.
மைக்கல்: ஆனால், தலைவர் றாஷித்! இஸ்லாம் தோன்றி 1400 வருடங்களேயாகின்றன. அதே நேரம் யூத, கிறிஸ்தவ மதங்கள் அதற்கு முன்னரே தோன்றிய பரலோக மதங்கள். என்ன... அப்படித்தானே?!
றாஷித்: என்றாலும்... இது தொடர்பாக சரியான விளக்கத்தைப்பெற கடமைப்பட்டுள்ளோம். அதாவது; இறைவனிடமிருந்து அருளப்பட்ட மார்க்கம் ஒன்றே; பலவன்று. ஏனெனில் அது ஏக இறைவன் அல்லாஹ்விடமிருந்து மாத்திரம் அருளப்பட்டது. என்றாலும் காலத்திற்கும் , சமூகத்திற்கும் ஏற்ப சில அனுஷ்டாணங்களில் வித்தியாசப்படலாம். இறைதூதர்களுக்கிடையிலான காலப்பிரிவு மிக நீண்டதாக இருந்ததால், மக்கள் மார்க்கத்தைவிட்டு விலகி நெறிபிறல்வில் சென்றிருக்க வாய்ப்புள்ளது. எனவே அதை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக காலத்துக்குக்காலம் இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய தேவையேற்பட்டது. இதைத்தான் இஸ்லாத்தின் இறுதித்தூதர் இவ்வாறு சுட்டிக்காட்டினார் : ((நபிமார்கள் சகோதரர்களாவர்; அவர்களுடைய மார்க்கமும் ஒன்றாகும். ஆயினும், சமூகங்கள் வேறுபட்டவை.)) அதாவது; காலமும், அனுஷ்டானங்களும் வேறுபட்டவை. இறுதியாக இம்மார்க்கம் எவ்வித திரிபுகளுக்கும், கையாடல்களுக்கும் உட்படாது அதன் தூய வடிவில் அல்லாஹ்வின் இறுதித்தூதர் வாயிலாக மனித சமுதாயத்தை வந்தடைந்தது. எனவே மனித இயல்பிற்கு முழுமையாக உடன்படும், இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட இம்மார்க்கம் மறுமைநாள்வரை நிலைத்திருக்கும். இதனால் சர்வ வியாபகமடைவதைக்காண்கிறோம்.
ரஜீவ்: என்னைப்பொறுத்தவரை... இதுவொரு புதுவிடயம். சரி , தலைவர் றாஷித்! இஸ்லாம் பரவுவதற்கான காரணிகளைக்கூருவதாக சொன்னீர்கள்...
றாஷித்: ஆம், இஸ்லாத்தின் தனித்துவமான சில காரணிகள் உள்ளன. அதாவது; இஸ்லாம் அமைப்பில் விசாலமான, கருத்தில் ஆழமான, கலக்கங்களோ புதிர்களோ அற்ற மிகத்தெளிவான ஓர் மார்க்கம்
மனித இயல்போடு துணைபோகக்கூடிய., அவனது அனைத்து தேவைகளையும் கவனத்திற்கொண்டு, செயற்படும் நடைமுறைக்கேற்ற மார்க்கம்; நிற , மொழி, இன வேறுபாடுகளைக்களைத்து மனித சமுதாயத்தை அடிப்படையில் சமத்துவப்படுத்துகிறது; அனைத்து விதமமான சமூக சீர்கேடுகளையும் முற்றாக தடைசெய்கிறது.
இம்மை, மறுமை ஆகிய இரண்டையும் ஒருங்கே இணைக்கவல்ல, நடைமுறைக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் ஒன்றே.
மனிதசமூகம் ஏற்கும் வகையில் தர்க்க ரீதியாகவும், சிந்தை ரீதியாகவும் ஆதாரங்களை முன்வைத்து சிந்தனைக்கு மதிப்பளிக்கிறது.
அறிவியல் எழுச்சியை புறக்கணிக்காது, அதை வலியுறுத்தக்கூடிய மார்க்கம் இஸ்லாம்; இற்றய நவீன அறிவியல் நிரூபிக்கக்கூடிய விஞ்ஞான உண்மைகளை சுமார் 1400 வருடங்களுக்கு முன்னரே தனது மூல நூலான அல்குர்ஆணில் அகப்பதித்துக்கொண்டது.
இடம் மற்றும் கால மாற்றத்தினால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும், முன்னேற்றத்திற்குமேடற்ப இசைவாக்கமடையும் வல்லமை இஸ்லாத்திற்கு உண்டு என்பதை அது திடப்படுத்தியுள்ளது.
உண்மையான சுதந்திரத்தைப்பெற்றுக்கொடுத்த மார்க்கம் இஸ்லாம்; மனிதன் அவனுடைய இறைவனுக்கு மாத்திரம் அடிபணிய வேண்டுமே ஒழிய இன்னொரு படைப்பினத்தினத்திற்கல்ல என வலியுறுத்துகிறது.
வேறு கலாச்சாரங்களும் அதன் போதனைகளை எடுத்துநடக்க அனுமதி வழங்கியிருக்கும் தாராள தன்மைக்கொண்ட மார்க்கம்.
மைக்கல்: மேற்கத்தய சமூகத்தின் இந்நிலைக்கான காரணத்தை கூறுகிறேன்.
கமூக பிரிவினை வாதம் ,வேறுபட்ட தத்துவார்த்த சித்தாங்கள் அறிவியல் மற்றும் திருச்சபைகளுக்கிடையிலான முரண்பாடு என கடந்த பல நூற்றாண்டுகளாக மேற்கத்தய சமூகம் முகம் கொடுத்து வந்த பிரச்சினைகளால் அச்சமூகம் சிந்தனை ரீதியான குழப்பத்தில் வாழ்ந்து கொன்டிருக்கிறது இந்நிலை அச்சமூத்தை தடுமாற்றத்தில் தள்ளிவிட்டிருக்கிறது.
மேற்கத்தய மனிதன் ஆன்மீக வெறுமையாக்கம் அவனுடைய அனைத்து கோட்பாடுகளையிம் ஆற்கொன்டு வாழ்க்கையில் தனக்கென மிகப்பெரும் பகுதியை பதித்துகொன்டுள்ளது.
திருச்சபையினால் தூய வழிகாட்டல் என போதிக்கும் அம்சங்கள் மனித இயல்பிற்கு முரணாகாத இருத்தல் மேற்கத்தய சமூகம் சமயத்தைவிட்டும் தூரசெல்வதற்கான மிக முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
அதேநேரம் சமூக முரன்பாடு சீறர்ர குடும்ப கட்டமைப்பு ,தார்மீக வீழ்ச்சி முதலியன அச்சமூகத்தில் இரண்டர கலந்து விட்டது என்பதை மறுக்க முடியாது.
ராஷித்: சரி நாம் நடைமுறை காரனிகளை நோக்கினால் இஸ்லாத்தையிம் ,முஸ்லிம்களையும் கொச்சைபடுத்துவதற்காக மேற்கொள்ளபட்டுவரும் நடவடிக்கைகள் இன்னொரு வழியில் அம்மார்க்கத்தை பற்றி அறிய வேண்டு மென்ற பிறர் அவாவை தூன்டுகின்றன.
அதே நேரம் இஸ்லாமிய அறிஞர்களுக்குமிடையில் வேறு மார்க்க அறிஞர்களுக்குமிடையில் விவாதங்கள் விவாதங்கள் நிகழ்கின்றன.
அது மட்டுமன்றி மேற்குலகில் சிறுபான்மை சமூகங்களில் ஒன்றாக முஸ்லிம்களும் திகழ்கின்றனர் இவ்வாறான காரணிகள் இஸ்லாத்தையிம் முஸ்லீம்களையிம் பற்றி (மேற்கத்தய) அச்சமூகம் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை வழிகோலுகின்றன என்பதையிம் மறந்து விடக்கூடாது.
எனவே இவையனைத்தையிம் பார்க்கும் போது எதிர்காலம் இஸ்லாத்தின் வசமே என என்னால் கூறமுடியிம்.