அழகிய நன்றிக்கடன்
றாஷித், மைக்கல் இருவரும் லண்டனை நோக்கி புறப்படவிருந்த புகையிரதத்தில் ஏறி அமர்ந்து கொன்டனர். புகையிரதம் காற்றை கிழித்து கொன்டு சிட்டென பறந்துசென்றது. மைக்கல் றாஷிதை நோக்கி:
நீங்கள் உரையாற்றும் போது அதிகமாக ஒரு விட.த்தை பற்றி குறிப்பிடுவீரகள். அதுதான்: “மனிதன் படைக்கப்பட்ட நோக்கம்” மனிதன் அல்லாஹ்வை வணங்குவதற்காக படைக்கப்பட்டுள்ளான் எனக் கூறினீர்கள். என்னை போன்ற பல பேருக்கு சில நேரங்களில் எழக்கூடிய கேள்விதான்; இவ்வுலகி/ல் மனிதன் எதற்காக உள்ளான்? ஏன் இந்த சோகம்? இப்பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்குமிடையில் ஏன் இந்த மோதல்? ஹ்ம்... இவை முக்கியமான கேள்விதானே?
றாஷித்: ஆம் மிக முக்கியமான கேள்விதான். இவை மேற்கத்திய கலாச்சாரத்தோடு தொடர்புபட்டவை என நினைக்கிறேன். அதாவது மேற்கத்திய சட வாத கலாச்சாரத்தின் அடிப்படை கட்டமைப்புகளுடான மோதல்களைக் குறிப்பிடலாம். ஏனெனில் அவை கடவுள்களுக்கிடையிளான மோதல், மனிதர்களுக்கிடையிலான மோதல், மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான மோதல், ஆத்ம சக்திக்கும் தீய சக்திக்குமிடையிளான மோதல் என கிரேக்க, உரோம நாகரீக சிந்தணையாள் உருவானவை. மேற்கத்திய நாகரீகத்தில் பரவலாக காணப்படும் சட வாத விளைவாலான ஆன்மீக வெறுமையாக்கத்தையும் குறிப்பிடலாம்.
மைக்கல்: மனிதன் வாழத்தகுந்த, இதற்கு மாற்றீடான வழிமுறையொன்றை நீங்கள் வைதிருப்பது போன்று பேசுகிறீர்கள்.
றாஷித்: விடயம் என்னவெனில்; இஸ்லாத்தை பொறுத்தமட்டில் ஒரு முஸ்லிம் சரியான முறையில் ஈமான் கொள்வானேயானால் இவ்வாறான தடு மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டிய அவசியமில்லை. இஸ்லாத்திடனூடாக அவன் எங்கிருந்து வந்தான், எங்கு மீளுவான், இவ்வுலக யதார்த்த நிலை, இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம், அவன் எதற்காக இவ்வுலகத்திற்கு அனுப்பப்பட்டான் என அனைத்து கேள்விகளுக்கான விடைகளையும் அறிந்து கொள்கிறான்.
மைக்கல்: என்னிடம் இருந்த கேள்விகள் போதாததற்கு மேலும் பல சந்தேகங்களை எழுப்பிவிட்டீர்கள். இந்த கேள்வி தொடர்பான இஸ்லாமிய கண்ணோட்டம் என்ன?.
றாஷித்: ஒரு முஸ்லிம் எப்பொழுதும் இப்பிரபஞ்சம் மற்றும் அத்தோடு தொடர்புபட்டவைகளோடும் ஒத்துபோகக் கூடியவன். இவையனைத்தும் அல்லாஹ்வை முழுமையாக வழிபடுவதிலும் அவனை துதி செய்வதிலும் தங்கியுள்ளன. “இப்பிரபடஞ்சத்தில் அல்லாஹ்வை துதிப்பவன் யார்” என்ற வசனம் அல் குர்ஆனில் பல இடங்களிள் வந்துள்ளது. அதேபோன்று “தஸ்பீஹ்” தூய்மைபடுத்தல் என்ற சொல் முப்பதுக்கும் மேற்பட்ட தடவைகளும், இக்கருத்தை அறிவிக்கக் கூடிய இது அல்லாத வேறு சொற்கள் பல தடவைகளும் இடம் பெற்றுள்ளன. எனவே ஒரு சிறந்த முஸ்லிம் அல்லாஹ்வை தூய்மைப்படுத்தக்கூடிய இப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாவான். எனவே அவன் இப்பிரபஞ்சத்தோடு ஒத்துப்போகக் கூடியவன்.
அதன் இயல்பிட்கேற்ப இசைபவன்; அதை உற்ற தோழனாக நோக்குபவன். இப்பிரபஞ்சத்தில் உள்ளவை மனிதனுக்காக வசப்படுத்திகொடுக்கப்பட்டுள்ளன என அல்குர்ஆனில் இருபதுக்கும் மேற்பட்ட தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மைக்கல்: இதன் பின்னனியில் என்னவிருக்கிறது? இதனால் என்ன ஏற்படப்போகிறது?
றாஷித்: ஒரு மனிதனுடைய வாழ்க்கை சுபீட்சமானதாக அமையவேண்டுமெனின் சரணடைதல், அடிபனிதல், வழிப்படுதல், பரிசுத்தமடைதல், மன நிம்மதி ஆகிய ஐந்து அம்சங்களும் தேவை. இவற்றினூடாக அவன் முழு பிரபஞ்சத்தையும் உள்வாங்கும் வணக்கவழிபாடு என்ற குடையின் கீழ் வருகிறான். இவை ஐந்தும் இஸ்லாத்தை குறிக்கும் பதங்களாகும்.
மைக்கல்: இதை மேலும் தெளிவாகக் கூற முடியுமா?
றாஷித்: மனிதன் மற்றும் பிரபஞ்சத்திற்கிடையிலான இத்தொடர்பை அவன் தனதாக்கியுள்ளான்; மன அமைதி அடைகிறான். இதனால் அவனுடைய வாழ்க்கை ஒருமுகப்படுத்தபட்டதாக அமைகிறது. உணர்வு ரீதியிலான ஒருமைபாட்டிலிருந்து நடத்தைசார் ஒருமைப்பாட்டை நோக்கி நகர அவனால் முடியுமாகும். ஆன்மா, சிந்தனை, உடல் என மனிதத்தின் அனைத்து பகுதிகளையும் கவனத்திற்கொன்டு வாழ்க்கையை நடுநிலையாக கொன்டுசெல்லக்கூடிய ஆற்றல் உருவாகும்.
அல்லாஹ் இவ்வுலகிலுள்ள அனைத்தையும் எங்களுக்காகவே படைத்துள்ளான் என்பதை ஒரு முஸ்லிம் நன்கு அறிவான். {அவன் எத்தகையவன் என்றால், பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காகவே படைத்துள்ளான். பின்னர், அவன் வானத்தை படைக்க கருதிய போது அவைகளை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். மேலும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கு அறிந்தவன்} [அல் பகரா :வசனம் 29] {இன்னும் வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தும் தன்னிடமிருந்து உங்களுக்காக அவன் வசப்பட்டுத்திக் கொடுத்துள்ளான். நிச்சயமாக, இதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன} [அல் ஜாசியா :வசனம்13] அவற்றை எவ்வித தொடர்புமின்றி அவன் வீனாக ப்படைக்கவில்லை என்பதையும் அவன் நன்கு அறிவான். எனவே மனிதனுக்கும் அவனுக்குமிடையில் உள்ள தொடர்பை ஏற்படுத்தக்கூடிய பகுத்தறிவை அல்லாஹ் அருளியிருக்கிறான். ஏனெனில் அல்லாஹ் திருமறையில் {நிச்சயமாக உங்கள் இரட்சகன் அல்லாஹ்தான். அவன் எத்தகையவன் என்றால் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களிள் படைத்தான். பின்னர் அவன் அர்ஷின் மீது அமர்ந்து கொண்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான். அது தீவிரமாக அதன்பின் தொடர்கிறது. இன்னும் சூரியனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு வயப்பட்டதாக படைத்தாலும், கட்டளையும் அவனுக்கு உரியதெனக் தெரிந்துகொள்ளுங்கள்! அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் மகத்துவம் உடையவனாக ஆகிவிட்டான்.} [அல்அஃராப்: வசனம் 54] எனக்குறிப்பிட்டுள்ளான். {எத்தகைய கேள்வி கணக்குமின்றி மனிதன் வீனாக விடப்படுவான் என்று (மனிதன்) எண்ணிக்கொன்டு இருக்கிறானா?}. [அல்கியாமா: வசனம் 36] எனவே ஒரு முஸ்லிம் சிந்தனையுடன் செயற்படவேண்டும். பிரபஞ்ச நியதியை ப்பேண மார்க்கத்தில் அவசியமானவற்றை அவன் ஆராய வேண்டும்.
இஸ்லாம் மனித வாழ்க்கைக்கான பூரண வழிகாட்டியை காட்டித்தருகிறது. ஒரு முஸ்லிமுக்கு அவசியமான ஆண்மீகம், வணக்கவழிபாடு முதலியவற்றை ஒழுங்கமைப்பதைப் போன்றே விவாகம், விவாகரத்து, விற்பனை, கொள்வனவு போன்ற அன்றாட வாழ்க்கையோடு தொடர்புபட்ட அம்சங்களையும் அவனுக்காக ஒழுங்கமைத்துள்ளது. அவ்வாறே அவனுடைய வழக்கத்தோடு தொடர்புபட்ட உண்னல், பருகல், ஆடையணிதல், உறையுள், சுத்தம் முதலியவற்றில் பேணப்படவேண்டிய ஒழுங்கு விதிமுறைகளையும், சமூக, தேசிய, பிறசமூகங்கிடையிலான அவனது தொடர்புகள் என வாழ்க்கையின் அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் அவனுக்காக ஒழுங்கமைத்துள்ளது. எனவே இஸ்லாம் மனித வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய. பரிபூரண ஒழுங்கமைப்பு.
ஒரு முஸ்லிமின் உணர்வுகளை கவனத்திற்கொள்கிறது; அவனுக்கென்று சில சட்டங்களை கடமையாக்கி சமநிலையால் நின்று நோக்கக்கூடிய தன்மையை உருவாக்குகிறது. பிரபஞ்சம் மற்றும் ஆன்மா பற்றிய கண்னோட்டங்களை அறிய அவனைத் தூண்டுகிறது; பூமியை பரிபாலிக்குமாறு ஏவுகிறது. இவையனைத்தும் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு அவனை வழிப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. இவ்வாறு நமது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு செயற்பாடும் அல்லாஹ் தஆலா காட்டித்தந்த வழிமுறையில் அமையுமாயின் அதுவே அவனை வணங்குவதாகும்.
மைக்கல்: ம்ம்.. ஆனால் நீங்கள் கூறுவது ஒரு கடும் போக்குவாதமாகத் தென்படுகிறதே. சமயம் வாழ்க்கையை ஆக்கிரமிக்கிறது என வெளிப்படையாகவே சொல்லலாம்.
றாஷித்: ஒவ்வொரு பொருளுக்கும் அதனுடைய தொடர்புகளை மேற்கொள்வதற்கென ஒழுங்குமுறை காணப்படுகிறது. அத்தொடர்புகள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு நிலைப்பாடுகளும், பயன்களும் உள்ளன. எனவே அத்தொடர்புகளை சீரான முறையில் பேனிக்கொள்வதனூடாக அதன் பிரயோசனத்தை அடையலாம். இதைத்தான் அல்லாஹ் அல்குர்ஆனில் “மீஸான்” என வர்ணிக்கிறான். {இன்னும் வானத்தை அவன் உயர்த்தி தராசை(நீதியை)யும் வைத்தான். நீங்கள் தராசில்(நிறுப்பதில்) வரம்பு மீறாதிருப்பதற்காக; அன்றியும், நீங்கள் எடையை நீதியுடன் நிறுங்கள்; தராசில்(அளவையில்) குறைத்தும் விடாதீர்கள்.} [அர்ரஹ்மான்:வசனங்கள் 7-9] நீதி மற்றும் நடுநிளை வகித்தல் என்ற அர்த்தங்களை குறிக்கும் மீஸான் ஒவ்வொரு வஸ்துக்களிலும் உண்டு. இப்பிரபஞ்சமும் அதற்காக நிர்ணயிக்கப்பட்ட அனவையிலேயே நிலைகொன்டுள்ளது.. இறைவனால் அருளப்பட்ட மார்க்கமும் அவ்வாறுதான்.
ஒருவருடைய தனிமனித மற்றும் சமூக நடத்தைகள், பண்பாடுகள் முதலியன வரம்பு மீறாமல் சமநிலையில் கையாள உதவும் அளவை இஸ்லாத்தில் மிக முக்கிய அம்சமாகும்.
ஒரு மனிதன் தன்னை பற்றி சுய கண்ணோட்டத்தில் நடு நிலை வகிப்பதிலேயே பிறர் பற்றிய கண்ணோட்டமும் தங்கியுள்ளது. இவ்வாறான நடுநிலையே நல்லடியார்களின் பிராத்தனையில் காணப்படுமென அல்லாஹ் அல் குர்ஆனில் வர்ணிக்கிறான். {எங்கள் இரட்சகனே இம்மையிலும் மறுமையிலும் நல்லதை தந்தருள்வாயாக! இன்னும் நரக வேதனையில் இருந்தும் எங்களை பாதுகாப்பாயாக என்று கூறுவோறும் அவர்களிள் இருக்கின்றனர்} [அல்பகரா :வசனம் 20] அதேகருத்தில் வேறு பல வசனங்களும் உள்ளன. {இன்னும் அல்லாஹ் உனக்கு கொடுத்ததிலிருந்து மறுமை வீட்டை தேடிக்கொள்! மேலும், இம்மையில் உன் பங்கை மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்ததிலுருந்து நீயும் உபகாரம் செய்! பூமியில் குழப்பத்தை தேடாதே! குழப்பம் செய்வோரை நிச்சயமாக அல்லாஹ் விரும்பமாட்டான்} [அல்கஸஸ் :வசனம் 77] {இன்னும் அவர்கள் எத்தகையோர் எனில், செலவு செய்தால் வீண்விரயம் செய்யமாட்டார்கள். சுருக்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் செய்வது அவ்விரண்டு நிலைகளுக்கும் மத்தியில் இருக்கும்} [அல்புர்கான்: வசனம் 67] {மேலும் உலோபியைப் போன்று செலவு செய்யாது, உம்முடைய கையை உம்முடைய கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! அன்றியும் உம்மிடம் இருப்பதை செலவழித்துவிட்டு அக்கையை ஒரே விரிப்பாக விரித்தும் விடாதீர்கள்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராக ஆகியும் விடாதீர்கள்} [அல் இஸ்ரா: வசனம் 29]
மைக்கல்: அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள இறையச்சமானது அவனுக்கு சந்தோசம், அமைதி, சாந்தி முதலியவற்றை ஈட்டித் தருவதற்கு பதிலாக அழிவு, நாசம், கொடுமை போன்றவற்றை பிரதிபலிப்பாக ஏற்படுத்தும் வகையில் (மனிதன் தன் இரத்தத்தை உறிஞ்சிக்குடிக்கக் கூடிய) பண்பாட்டு நெறி பிறழ்வைக் காண்கிறேன். அது எனக்கு வியப்பை ஊட்டுகிறது. இந்நிலையை இஸ்லாம் எவ்வாறு நோக்குகிறது?
றாஷித்: இவை மனிதன் தன்னைப் பற்றிய பூரண அறிவின்றி தன்னைத்தானே வழிநடத்த முனைந்ததன் விளைவால் ஏற்பட்டவை. மனித வாழ்வின் அனைத்து இரகசியங்களையும் அவனை உருவாக்கியவனே நன்கு அறிந்தவன்; அவனே மனிதனை வெற்றிகரமான முறையில் வழிநடாத்த முடியுமானவன். எனவே மனிதனின் இம்மடத்தனமான செயற்பாடுகளை தடுப்பதற்கான ஒரேவழி அவனை உருவாக்கிய இறைவனின் சட்டங்களுக்கு கட்டுப்படுவதே. அவனால் இன்று வரைக்கும் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள், துன்பங்கள், அட்டூழியங்கள் என அனைத்திலிருந்தும் மீள்வதற்கு அதைத்தவிர வேறு வழியில்லை.
மைக்கல்: அதாவது; இஸ்லாத்தை வழிப்படுவதில் வெற்றி இருக்கிறது. அவ்வாறில்லையெனில் முழு சமுதாயமும் துன்பத்தில் வாழ வேண்டியேற்படும். அப்படித்தானே?!
றாஷித்: ஆம் அதில் எந்த சந்தேகமும் இல்லை. தனி மனித, சமூகமட்டத்தில் ஒரு மனிதனால் ஏற்படக்கூடிய தீங்குகளை அவனாகவே உணர்கின்றவரை தடுக்கமுடியாது. இவ்வுலகில் அவன் நாடியதை செய்யலாம், அதற்காக அவனை தண்டிக்கும் அதிகாரம் படைத்தவர் எவருமில்லை என அவன் எண்ணினால் அவனால் ஏற்படும் அநியாயங்களைத் தடுக்க முடியாது. அது தனி மனிதனாக அல்லது குடும்பமாக அல்லது சமூகமாக இருந்தாலும் சரியே. எங்கள் அனைவருடைய சோதனையும் எங்களை படைத்து பரிபாலிக்கக் கூடிய இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கிறோமா என்பதை பற்றித்தான்.
இவ்வுலகிலுள்ள அனைவரும் இச்சோதனையை எதிர்கொள்கிறோம். சிந்தனையால் ,உணர்வுகளால், நடத்தையால் நாம் அனைவரும் சோதிக்கப்படுகிறோம். ஓர் அடியானாக ஏக இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றுகிறோமா அல்லது மாறுசெய்கிறோமா?
நானென்றால் எனது இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு, அவன் காட்டிய வழியை முழுமையாக பின்பற்றுவேன் என ஏற்றுக்கொள்கிறேன். எனவே அல்லாஹ்வுக்கு அடிபனியாதவர்களை விட்டும் நான் தூரமானவன். இதுவே மிகச் சிறந்த வழிமுறை.
மைக்கல்: ஆம், புகையிரதம் நாம் இறங்க வேண்டிய நிலையத்தை வந்தடைந்து விட்டது; வாருங்கள் விரைந்து செல்வோம .