- மார்க்கம் தான் வாழ்க்கை
மார்க்கம் என்பது ஒரு மனிதன் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய சொத்துக்களுக்குச் சமன் மார்க்கம் இன்றி வாழும் மனிதன் நிராசையடைந்த வாழ்வையே வாழ்கிறான்”
- மனித குலத்திற்கான ஆசிரியர்
நான் முஹம்மதின் வரலாற்றைப் படித்தேன் அதில் அவரின் ஆழுமை பற்றி தெளிவாக அறிந்துகொண்டேன் மக்கள் அவரின் நபித்துவத்தை விசுவாசம் கொண்டு, அவர் போதிக்கும் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் அவ்வாறே அவரின் செயற்பாடுகள் அவர் போதித்த மார்க்கத்தின் அடிப்படையாக இருக்கின்றன அவர் முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் தனது போதனைகளை குறிப்பாக ஆக்கவில்லை இதை உலகலாவிய போதனையாகவே குறிப்பிட்டுள்ளார்”
- முஹம்மதின் தூதுத்துவம்
ஏகத்துவக் கோட்பாடு, ஆட்சிக்கான சட்டர்கோர்வைகள் என இவை இரண்டையும் அரேபிய சமூதாயத்தில் நிரை நிறுத்துவதற்காய் முஹம்மத் தன் வாழ்நாளையே அர்பணித்தார் இதன் மூலம் ஓர் தூய இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரேபிய தீபகற்பத்தில் வளர ஆரம்பித்தது இதன் மூலம் அறியாமையில் சிக்கித் தவித்த சமூகத்தை நாகரீகம் கொண்ட புது சமூகமாக மாற்றிவிட்டார்”
- அடக்கியாளப்படுவோர் அடக்குவோரை சிறைப்பிடித்தல்
அடக்கியாளப்பட்ட இஸ்லாம் சிலுவை யுத்தத்தில் அடக்குவோரை அடங்க வைத்தது தனது நாகரீகக் கலைகளை கிறிஸ்தவ உலகில் நுழைவித்தது அந்நேரம் லத்தீனப் பிரதேசம் துருப்பிடித்து, அழிந்து போகும் நிலையில் இருந்தது இஸ்லாமிய நாகரீகத்தின் தாக்கம் அவர்கள் மத்தியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியது சிசிலியன், அன்டலூசியா போன்ற பகுதிகளில் இன்னும் இதன் தாக்கங்களைக் காணலாம்”