ஒரு காலத்தில் தவ்ராத் வேதம் மக்களுக்கு நேர்வழியைக் காட்டிக்கொண்டிருந்தது அதன் பின் இன்ஜீல் வேதம் அருளப்படவே மக்கள் அனைவரும் அதைப் பின்பற்றத் தொடங்கினர் அதன் பின்னர் அல்குர்ஆன் இறக்கப்பட்டது அது முன்னர் இறக்கப்பட்ட வேதங்களை விட தெளிவான, விரிவான பல கோட்பாடுகளை முன்வைத்தது மேலும் முன்னைய வேதங்களில் திரிபுபடுத்தப்பட்ட அம்சங்களையும் மாற்றியமைக்கும் முகமாக இதன் போதனைகள் இருந்தன இது அனைத்து சட்டதிட்டங்களையும், போதனைகளையும் உள்ளடக்கும் வேதமாகும் இதுவே இறுதி வேதமாகவும் திகழ்கின்றது”