- உலக மக்களுக்கான மார்க்கம்
அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே’ (அல்குர்ஆன் 0319), ‘(முஹம்மதே) நற்செய்தி கூறுபவராக வும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம்’ (அல்குர்ஆன் 3428) ஆகிய இரு வசனங்களும் என் உள்ளத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தின இஸ்லாம் குறிப்பிட்டுக் கூறும் அம்மனிதர் உலக மக்களுக்கான தூதர் அவர் பற்றி ஏனைய மதங்களிலும் கூறப்பட்டுள்ளது அவர் இதற்கு முன் தோன்றிய அனைத்து நபிமார்களையும் உண்மைப்படுத்துபவராகவும், கண்ணியப்படுத்துபவராகவும் இருக்கிறார் எமது தலைவர் ஈஸா போதித்த அதே போதனையைத் தான் இவரும் போதிக்கிறார் எனவே இஸ்லாம் மார்க்கம் உண்மையான, உலக மக்கள் அனைவருக்குமான மார்க்கம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை”