- ஒரே ஒளிவிளக்கிலிருந்து
முஹம்மதுடைய தூதுத்துவம் முன்னர் இறக்கப்பட்ட வேதங்களில் கூறப்பட்ட போதனைகளை பொய்ப்பிக்கும் வகையில் அமையவில்லை மாறாக முன்னைய வேதங்களில் கூறப்பட்டவைகளை உண்மைப்படுத்தி, அவற்றில் ஏற்பட்டிருந்த கையூடல்கள், திரிபுகள் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து, முன்னைய நபிமார்களின் போதனைகளைத் தூய்மைப்படுத்தி, அவற்றை மக்களின் நலன்களுக்கு ஏற்றவாறு விஸ்திரப்படுத்தி, எல்லாக் காலகட்டத்தில் வாழும் மனிதர்களுக்குப் பொருந்தும் வகையிலான ஓர் ஒளி விளக்காக அவற்றை மாற்றியமைப்பதாகவே இருந்தது”
- சட்டங்களும் நற்பண்புகளும்
இஸ்லாத்தின் சட்டக்கோர்வையையும், விழுமியங்களையும் வேறுபிரித்து நோக்க முடியாது இவை இரண்டும் ஒன்றரக் கலந்தே சக்தி வாய்ந்த ஒழுங்கமைப்பை ஆரம்பத்திலிருந்தே தோற்றுவித்திருக்கின்றன”