பெண்ணாதிக்கம்
புகையிரதம் நகர ஆரம்பித்து ஒரு ணித்தியாலத்தின் பின் மைக்கல்,ராஷித் ஆகிய இருவரும் பிரயானப்பொழுது கழிவதற்க்காக உரையாட ஆரம்பித்தனர்.
மைக்கல்: நாங்கள் பெண்கள் தொடர்பாக பலதாரமனவுரிமை, ஹிஜாப் என இருவிடயங்களை பற்றி கலந்துரையாடினோம். இதற்குட்பட்ட ஏனைய விடயங்களையும் பற்றி கலந்துரையாடுவதில் உங்கள் அபிப்பிராயமென்ன ?
ராஷித்: நல்ல யோசனை.
மைக்கல்: இதில் முதலாவது என்சிந்தனைக்கு வரக்கூடிய விடயம்: பெண்ணுடைய பங்களிப்பு. முஸ்லிம்கள் ஏன் வாழ்க்கையின் அனைத்துக்கட்டங்களிலும் ஓர் ஆணிற்கு சமமாக பெண் பங்குபற்றுவதை வெறுக்கிறார்கள்?
ராஷித்: நண்பரே! மனிதனிடமுள்ள மிலேச்சுத்தனம்(மிருகத்தனம்) மிருகங்களிடம் இருப்பதைப்போன்றதல்ல; மாறாக மிகப்பெரிய வித்தியாசமுண்டு. மனிதனுடைய பாலியல் மிலன்கள் மிருகத்திலிருப்பதைவிட அதிகமானவை. அதேவேளை உடலுறவு சக்தி அதற்கு மாற்றமாக மிருகத்திலிருப்பதை விட மிகப்பலவீனமானது
ஒரு பெண்ணிடம் இயல்பிலேயே அமையப்பெற்ற வெட்கம், நாணம், தவிர்ப்பு போன்றவற்றை நாம் கருத்திற்கொண்டால், மனிதனிடமுள்ள பாலியல் ரீதியான கவர்ச்சியாற்றலின் நோக்கம் கணவன் மணைவிக்கிடையிலான தொடர்ச்சியான உறவை தக்கவைத்துக் கொள்வதே. இவை உளவியல் ரீதியான பயன்கள். இதையே அல்குர்ஆன் அமைதி, அன்பு, இறக்கம் என்ற பெயர்களால் அழைக்கிறது. என்ன... தெளிவாகவுள்ளதா?...
மைக்கல்: ஓரளவு தெள்வாகவுள்ளது.
றாஷித்: உயிரியல் பகுதியைப் பார்த்தால், உடலின் உள்ளுருப்பு, வெளியுருப்பு ஆகியவற்றிலுள்ள செல்கள், அனுக்கல் என அனைத்திலும் ஒரு பெண் ஆணிடமிருந்து வேறுபடுகிறாள் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அவளுடைய செல்கள் தனித்துவமானவை; பெண்ணியல்பினால் உருவாக்கப்பட்டவை. அவளின் உடல் பருமன், நரம்பியல் தொகுதி ஆகியன ஆணிலிருந்து முற்றாக வேறுபட்டவை. அவளுடைய முழு உடலமைப்பும் பிள்ளை பெற்றடுத்தல், அதை வளர்த்தல் போன்ற ஒரு தாயின் தொழிற்பாடுகளுக்கு ஏற்றாட்போல் அமையப்பெற்றது. அவள் பருவ வயதை அடைந்தவுடன், அவளுடைய புல உருப்புகளின் செயற்பாடுகள் மாத்திரமன்றி உளரீதியான செயற்பாடுகளும் மாற்றமடைகின்றன; மாதவிடாயும் ஏற்படுகிறது இவையனைத்தும் அவளுடைய கருவுறல், பிள்ளைப்பேற்றுத்தீட்டு, பாலூட்டல் தவிர்ந்தவைகளாகும்.
அதுமட்டுமல்ல பெண்ணுடைய ஓமோன்கள், குணங்கள் என்பன ஆண்களுடையவற்றைவிட வேறுபட்டன; ஒரு ஆணுடைய துணிவு, கடினம் என்பன பெண்ணுடைய வெட்கம் பிரியத்துக்கு நிகரானவை.
இதுவோர் புறமிருக்க, மனிதப்பிறவி ஏனைய விலங்குகளுக்கு மாற்றமாக பிறப்பிலிருந்து வாழ்க்கையில் சுயமாக செயற்படும் ஆற்றலைப் பெரும் வரை பெற்றோரின் அரவனைப்பு தேவையுடையவன். இதன் நோக்கங்களில் ஒன்றுதான் கணவன் மணைவி ஆகிய இருவரும் தங்களுடைய பாலியல் தொடர்புகளை தொடர்ந்தும் பேனுவதாகும். அதுமட்டுமன்றி இத்தொடர்புகளுக்கான பிரதி பலன் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரபவரையொருவர் புரிந்து உதவிநல்குவற்கு வழிகோலும். இதனாலேயே மனிதன் ஏனைய அனைத்து விலங்குகளைவிடவும் தன் குழந்தை மீது அதிக இரக்கம் கொண்டவனாக படைக்கப்பட்டுள்ளான்.
மைக்கல்: பிறகு என்ன?
ராஷித்: சுருங்கக்கூறின்; குடும்பம் மனிதனுக்கு இயற்கையாகவே அமையப்பெற்ற சமூகக்கட்டமைப்பகும். இதில் ஒவ்வொருவருடைய சக்திக்கும், ஆற்றல்களுக்கும் ஏற்ப பொறுப்புக்களும், பங்களிப்பும் உள்ளன.
மைக்கல்: ம்ம்.. விளங்கிக்கொண்டேன்; .ஆகவே ஒரு பெண்ணுடைய பங்களிப்பு குழந்தையை பெற்றெடுப்பதும், குடும்பத்தில் தனெக்கென ஓர் இருப்பை தக்கவைத்துக்கொள்வதும், கணவன் மற்றும் குழந்தைகளை பராமரிப்பதுமே. அப்படித்தானே...
ராஷித்: ஆம், அவ்வாறே ஓர் ஆணின் பங்களிப்பு குடும்பத்திற்கான வாழ்க்கை கட்டமைப்புகளுக்கு வழிசமைத்தலும், இதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை எற்றுக்கொள்ளலுமாகும் .
மைக்கல்: என்றாலும்.. இக்கண்ணோட்டத்தால் சமூக உற்பத்தித் திறனில் அரைவாசியை இலக்க நேரிடலாமல்லவா?...
ராஷித்: இல்லை, அதற்கு மாற்றமாக முழு சமூகத்தையும் உற்பத்தித்திறன் மிக்கவர்களாக மாற்றியமைக்கிறது. ஏனெனில், ஒவ்வொருவரும் அவரவருக்குப் பொருத்தமான துறையிலும் தங்கியிருக்கின்றனர். எனவே ஒரு பெண் அவளுடைய இயல்பிற்குப் புறம்பாக வேலைக்குச்சென்று ஆண்களுடன் ஒட்டி உறவாடுவாளேயானால், அவள் தன்னை புதியதொரு வேலைப்பளுவினால் சீரழித்துக்கொள்கிறாள்; அவளுடைய குடும்பம், கணவன் என முழு சமூகமும் சீரழிகிறது. அவள் தனது வேலைக்கும், குடும்பப்பளுக்களுக்கும், பிள்ளை பராமரிப்புக்கும் மத்தியில் வெற்றிகாண தொடராக முயற்சிக்கிறாள்; ஈற்றில் தோற்றுப்போகிறாள். ஓர் சிறந்த தாயாகவும், திருப்தியான மனைவியாகவும், சுறுசுறுப்பான பணிப்பெண்ணாகவும் இருக்கவேண்டும் என்ற கடமைகள் சுமத்தப்பட்டால் அவற்றை அவள் எவ்வாறு சமாளிப்பாள்?!.. அவள் ஒய்விற்கென ஒதுக்கியுள்ள நேரங்களை வேறுசில பகுதிகள் அபகரித்து அவளை நிம்மதியற்றவளாக மாற்றிவிடுகின்றன. அத்தோடு ஒரு பெண் வீட்டுக்கு வெளியே சென்று உத்தியோகத்தில் ஆண்களுடன் ஒட்டியுறவாடுவதால் பாலியல் பலாத்காரங்களுக்குள்ளாகிறாள். இதுவே அவளுக்கு உண்மையான இழுக்கு.
மைக்கல்: வாழ்கையில் பெண்னுடைய பங்களிப்பு என்றால் அது குடும்பப் பங்களிப்பே. என்று நாம் கூறுவோமானால், பெண்களுக்கெதிரான ஆணாதிக்கம் என்ற இன்னொரு பாதிப்பிற்கு இட்டுச்செல்கிறதே?..
ராஷித்: ஆதிக்கமென்பது ஆண்களுக்கு மாத்திரம் உரித்தான ஒன்றல்ல. மாறாக குடும்பம் எனப்படும் சமூக நிறுவனத்திற்கான ஒழுங்கு. எந்தவொரு நிறுவனமாக இருப்பினும் அதிலுள்ள உறுப்பினர்களுடைய தகமைகள், ஆற்றல்களுக்கேற்ப அவர்களுடைய பொறுப்புக்களும் வரையறுக்கப்படும். ஒரு நிறுவனத்தின் தலைவர், கணக்காளர் என்போர் அதன் சிற்றூழியரை விட உயர்ந்த இடம் வகிப்பது அந்நிறுவனத்தின் நலனுக்கே.
நடைமுறையில் பார்ப்போமானால், ஒரு நிருவனத்தின் நம்பிக்கையாளர்கள் யூகிக்கின்ற நலவுகளை கருத்திற் கொண்டு அந்நிருவன அங்கத்தவர்கள் செயற்படும் விதமாக சில வரையறைகள் விதிக்கப்படுவதைக் காண்கிறோம்; குறிப்பிட்ட சீறுடையை அணியப் பணித்தல், குறிப்பிட்ட பாதுகாப்பு செயற்திட்டமொன்றை அல்லது பயிற்சி முறையை அமுல்படுத்தல், உத்தியோக நேரங்களில் அனுமதியின்றி வெளியில் செல்வதைத்தடுத்தல், உத்தியோகமல்லாத வேறு வேலைகளில் ஈடுபடுவதை தடுத்தல் என பல விதிமுறைகளை உதாரணமாகக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி அந்நிருவனத்தின் ஊழியர் அதை விட்டு விலகிய பின்னரும் அவன் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகளும் உள்ளன. இவற்றை நாம் அனைவரும் அறிந்ததே. இவ்வரையறைகளை அந்நிருவனம் அதன் ஊழியர்கள் மீது பிரயோகிக்கும் அதிகாரமாக எவரும் நினைக்கமாட்டார்கள். இவையனைத்தும் தகைமைகளைக் கொண்ட ஒரு தலைவர் இல்லாமல் வெற்றிகரமானதாக இருக்க முடியாது.
இவ்வாறுதான் குடும்பமென்ற நிறுவனம் வெற்றிகரமானதாக அமைய அங்கத்தவர்கள் அனைவரும் பின்பற்றத்தக்க ஓர் ஒழுங்குமுறை அவசியமாகும். அதில் குடும்ப அங்கத்தவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய சில வரையறைகளும், தகுதிகளைக்கொண்ட ஒரு தலைவரும் இருக்க வேண்டும். கருத்து முரண்பாடுகளின் போது உறுதியான முடிவுகளை எடுக்கக்கூடிய ஆற்றல் அவரிடத்தில் இருக்கவேண்டும். அவ்வாறே அவரும் அவ்வொழுங்கு முறைகளை கடைப்பிடிப்பதோடு நான் ஏலவே கூறிய அன்பு,இறக்கம்,நிம்மதி முதலியவற்றை நிலைநாட்ட தன் ஆற்றல்களை பயன்படுத்த வேண்டும்.
மைக்கல்: அவ்வாறாயின், ஆதிக்கம் ஏன் ஆண்களிடம் மாத்திரம் இருக்கவேண்டும் ? பெண்களிடமில்லையா? இதுவோர் சமத்துவமின்மையாகத்தெரியவில்லையா?
ராஷித்: நீங்கள் கூறிய சமத்துவம் என்ற சொல்லைவிட நீதம் என்ற சொல் சாலப்பொருத்தமானது என நினைக்கிறேன். என்றாலும் பரவாயில்லை, நான் கூறுவது என்னவென்றால்; சமத்துவம் அல்லது நீதம் என்பன உரிமைகளில் இருக்கவேண்டியவை. ஆனால் நாங்கள் உரையாடுகிற விடயம் ஒவ்வொரு தனிமனிதனும் தனது சக்திக்கேற்றாட்போல் சமூக சேவையில் ஈடுபடுவதைப் பற்றியதாகும்.
நாம் ஏலவே கூறியதைப்போன்று; ஆண், பெண் இருவரும் வித்தியாசமான விதத்தில் படைக்கப்பட்டுள்ளனர். இவ்வித்தியாசங்கள் பல்வேறுபட்ட சமூக அலுவல்களுக்கு பொருந்தக்கூடியன. ஓர் ஆண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள இவ்வதிகாரத்தை பெண்ணிற்கு வழங்கப்படாத சில பொறுப்புக்களும், கடமைகளும் எதிர்நோக்குகின்றன என்பதை நீங்கள் மறவ வேண்டாம். இங்கே அதிகாரம் என்பது சிறப்பான ஒன்று என்பதைவிட சிரமமான ஒன்று எனலாம். ஏனெனில், ஆண் மீது குறிப்பிட்டசில பொறுப்புகள் சுமத்தபடுவதனால் அவன் உறுதியான சிந்தனையுடனும், தீர்மானங்ளின்போது நிதானமாகவும் இருப்பது அவசியமாகும். இதனால் ஒரு பெண்ணுடைய கருத்தை உதாசீனம் செய்வதென்றோ அல்லது அவளுடைய ஆளுமையை அலட்சியப் படுத்துவதென்றோ அரத்தமல்ல.
அதேநேரம் ஒரு பெண் இவ்வாறான சமூக அலுவல்களுக்கு தகுதியானவளும் அல்ல. ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் கூறியதைப்போன்று அவள் மார்க்கத்திலும், சிந்தனையிலும் குறைபாடுடையவள்.
மைக்கல்: சிந்தனை குறைபாடுடையவர்களா? இதென்ன அநியாயம்!.. பெண் அவளுடைய அறிவியல் ஆற்றல், வெற்றி, விவேகம் என எவ்விதத்திலும் ஆணிற்கு குறைந்தவளல்ல என்பதை நிரூபித்திருக்கிறாள்.
றாஷித் (சிரித்தவராக): நண்பரே புதுமை என்னவென்றால் நான் இந்த ஹதீஸை கூறிய எத்தனையோ பேர் இவ்வாறுதான் விளங்கியிருந்தனர். இங்கே சிந்தனையென்பது விவேகமல்ல மாறாக சரியானமுறையில் விடயங்களை நிர்ணயிக்கும் ஆற்றல், மனோபலம், இக்கட்டான சூல்நிலைகளில் முடிவை எடுக்கும் திறன் என்பதே. அதன் இன்னொரு அர்த்தம்; கேளிக்கைகளை வெறுப்பது எனலாம். பெண்கள் ஆண்களைவிட உணர்வுகளை அதிகமாக மதிப்பவர்கள்.இதை நாம் அனைவரும் அறிந்ததே. அவர்களுடைய இந்த மனஇயல்பு குடும்ப அமைப்பு விவாகரத்து மூலம் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதை தடுக்கிறது.
மைக்கல்: பெண்ணுரிமையைப் பற்றி உரையாடும்போது அனந்தரச்சொத்தில் அவளுடைய பங்கையும் குரிப்பிடுவது அவசியமே; எனவே ஏன் பெண்ணுடைய அனந்தரச்சொத்து ஆணுடையதைவிட அரைவாசியாக இருக்க வேண்டும்?!
ராஷித்: ஆரம்பமாக... பெண்ணுடைய அனந்தரப்பங்கு ஆணுடைய பங்கில் அரைவாசி என்பது அனைத்து நிலமைகளிலும் அல்ல.
இரண்டாவதாக: ஒரு மனிதரின் மேன்மை அவருக்கு வழங்கப்படும் எல்லா உரிமைகளையும் வழங்குவதால் எற்படுகிறது என்ற அர்த்தமோ, அல்லது நீதம் என்றால் அனைத்து நிலைமைகளிலும் சமத்துவத்தை பேணுதல் என்ற அர்த்தமோ அல்ல. என்றாலும் நிலைமைகளுக்கேற்ற சமத்துவம் அவசியமாகும். எனவே பெண்ணுடைய குடும்ப பங்களிப்பை கவனத்திற்கொண்டு, அவளுடைய கடமைகளுடன் உரிமைகளை ஒப்புநோக்குவது அவசியமாகும்.
உதாரணமாக: ஒரு பெண் பெறக்கூடிய அனந்தரச்சொத்து அவளுக்கு மட்டுமே உரித்தானது. அதேநேரம் ஒரு ஆண் பெறக்கூடியவை அவனுடைய மனைவி, குழந்தைகள், திருமனமுடிக்காத அவனுடைய சகோதரிகள், உயிருடன் இருக்கும் பெற்றோர்கள் என அனைவருக்குமிடையில் பகிரப்படும். இவை தவிர்ந்த நன்கொடையாக மணப்பெண்ணுக்கு வழங்கப்படும் மகர்க்கொடுப்பனவு, திருமணவீட்டிற்கு தேவையான செலவுகள் என அனைத்தையும் அவனே சுமக்கிறான். மனைவியை வேலைக்கு செல்லுமாறு வற்புருத்தவோ, அவளுடைய சொத்து செல்வங்களில் காலத்தைக்கடத்தவோ முடியாது. ஒரு பெண் தனக்குச்சொந்தமான செல்வத்தை முழுமையாக அனுபவித்தல் மேற்கத்தயப்பெண்கள் வாதிடக்கூடிய நீதமான அளவைவிட மிகச்சிறந்ததே.
ம்...சரி..இத்தலைப்பில் நாம் பார்க்கவேண்டிய விடயம் ஏதும் உள்ளதா?
மைக்கல்: ஆம், விவாகரத்து தொடர்பான சிக்கல் உள்ளது. என்றாலும் நாங்கள் சற்று ஓய்வெடுப்பது நல்லதென நினைக்கிறேன்.