குடும்பப்பிளவு
சிறிது நேரத்தின் பின் நண்பர்கள் இருவரும் தங்களது இருக்கையை மாற்றி அமர்ந்து கொண்டனர்.பின்னர் மைக்கல்:
இஸ்லாமிய சமூகத்தில் விவாகரத்து பரவலாகக் காணப்படுகிறது.. இஸ்லாம் அதை அனுமதித்திருப்பதும் அதற்க்கான காரணங்களில் ஒன்றே.
ராஷித்: ஆரம்பமாக: விவாகரத்தை முதலில் ஆகுமாக்கியது இஸ்லாம் மார்க்கமல்ல. இஸ்லாத்திற்கு முன்னரே உலகம்பூராகவும் விவாகரத்து பரவியிருந்தது. ஒரு ஆண் கோபப்பட்டவுடன் அவனுக்கெதிராக எவ்வித மாற்றீடும் அற்றவனாக அநியாயமாகவோ அல்லது உரிமையுடனோ அவளை விரட்டுபவனாக இருந்தான். கிரேக்க நாகரீகம் எழுச்சிபெற்ற காலத்தில் அவர்களிடையே விவாகரத்து எவ்வித வரையரையுமின்றி பரவிக்கானப்பட்டது. யூத மதத்திலும் விவாகரத்து ஆகுமாக்கப்பட்டிருந்தது; அவர்களிடம் கணவன் மாத்திரம் மனைவியை எவ்வித காரணமும் இன்றி விவாகரத்துச்செய்ய உரிமைபெற்றவனாகவும், அவ்விவாகரத்து காரணத்தோடு அமைந்திருப்பது விரும்பத்தக்கவொன்றாகவும் காணப்பட்டது. ஒரு பெண் வேறொருவரை திருமனம்முடித்தால் அவளுடைய முதல் கணவனிடம் `திரும்பிச்செல்ல முடியாத நிலை அவர்களுடைய விவாகரத்தில் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
இரண்டாவதாக: இஸ்லாம் ஆகுமாக்கியிருப்பதுதான் விவாகரத்து பரவுவதற்கான காரணம் என்று சொல்லும் அளவு இஸ்லாமிய சமூகத்தில் பரவிக்காணப்படுகிறது என்றீர். சரி, ஒப்பீட்டுரீதியாக உலகக்கணக்கெடுப்புக்கள் சிலவற்றை பார்ப்போம்:.
அமெரிக்காவில் (1992-1995) ஆண்டுகளுக்கிடையிலான காலப்பகுதியில் ஏற்ப்பட்ட விவாகரத்துக்களின் சராசரியளவு ஒவ்வோர் 1000 திருமணத்துக்கும் 502 என்ற வீதத்தை அடைந்துள்ளது. இவ்வீதம் பாரிய அளவில் அதிகரிக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சில வேலை 1999 ஆண்டிலிருந்து இன்று வரைக்கும் நடைபெற்ற திருமணங்களில் ஏற்பட்ட விவாகரத்துக்களின் எண்ணிக்கை தொடர்பான அறிகையை அமெரிக்க நிர்வாகம் வெளியிடாமல் மறைத்திருக்கலாம். சோவியத்ரஷ்யாவில் (2001-2004) ஆண்டுகளுக்கிடையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட விவாகரத்துக்களின் சராசரியளவு ஒவ்வோர் 1000 விவாகங்களுக்கும் 750 என்ற வீதத்தை அடைந்துள்ளது. சுவீடனில் அதே ஆண்டு காலப்பகுதிகளுக்கிடையில் ஏற்பட்ட விவாகரத்துக்களின் சராசரியளவு ஒவ்வோர் 1000 விவாகங்களுக்கும் 539 என்ற வீதத்தை அடைந்துள்ளது. பிரித்தானியாவில் (2000-2003) ஆண்டுகளுக்கிடையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட விவாகரத்துக்களின் சராசரியளவு ஒவ்வோர் 1000 விவாகங்களுக்கும் 538 என்ற வீதத்தை அடைந்துள்ளது.
ஜப்பானில் (1000-2004) ஆண்டுகளுக்கிடையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட விவாகரத்துக்களின் சராசரியளவு ஒவ்வோர் 1000 திருமணங்களுக்கும் 366 என்ற வீதத்தை அடைந்துள்ளது.
அதேநேரம் இஸ்லாமிய சமூகங்களுக்கிடையே உற்றுநோக்கினால், அதிகமாக விவாகரத்து நிகழும் நாடாக குவைத் காணப்படுகின்றது அங்கே (2000-2004) ஆண்டுகளுக்கிடையிலான காலப்பகுதியில் ஏற்ப்பட்ட விவாகரத்துக்களின் சராசரி எண்ணிக்கை ஒவ்வோர் 1000 திருமணங்களுக்கும் 347 என்ற வீதத்தை அடைந்துள்ளது. ஆனால் அதுதவிர்ந்த ஏனைய நாடுகலைப்பொருத்தமட்டில் அதை விட மிகக்குறைவான என்னிக்கையையே கொண்டுள்ளன. உதாரணமாக; ஜோர்டானில் (2000-2004) ஆண்டுகளுக்கிடையிலான காலப்பகுதியில் நிகழ்ந்த விவாகரத்துக்களின் எண்ணிக்கை ஒவ்வோர் 1000 விவாகத்திற்கும் 184 என்ற வீதத்தை அடைந்துள்ள அதேவேளை பலஸ்தீனில் அதேகாலப்பகுதியில் ஏற்பட்ட விவாகரத்துக்களின் சராசரி எண்ணிக்கை ஒவ்வொரு 1000 விவாகங்களுக்கும் 142 என்ற வீதத்தையே அடைந்துள்ளது.
எகிப்தில் (2000-2003) ஆண்டுகளுக்கிடையிலான காலப்பகுதியில் ஏற்ப்பட்ட விவாகரத்துக்களின் சராசரியளவு ஒவ்வோர் 1000 திருமணங்களுக்கும் 134 என்ற வீதத்தை அடைந்துள்ளது. சிரியா நாட்டில் (2000-2002) ஆண்டுகளுக்கிடையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட விவாகரத்துக்களின் சராசரி எண்ணிக்கை ஒவ்வொரு 1000 திருமணத்திற்கும் 84 என்ற வீதத்தை அடைந்துள்ளது. லிபியாவில் (2000-2004) ஆண்டுகளுக்கிடையிலான காலப்பகுதியில் ஏற்ப்பட்ட விவாகரத்துக்களின் சராசரியளவு ஒவ்வொரு 1000 திருமணங்களுக்கும் 51 என்ற வீதத்தை அடைந்துள்ளது. இறுதியாக ஈரானில் (2000-2003) ஆண்டுகளுக்கிடையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட விவாகரத்துக்களின் சராசரியளவு ஒவ்வொரு 1000 திருமணங்களுக்கும் 97 என்ற வீதத்தை அடைந்துள்ளது.
எனவே இஸ்லாமிய சமூகங்களுக்கிடையில் விவாகரத்து பரவியிருப்பதட்கானதற்கான காரணம் இஸ்லாம் அதை ஆகுமாக்கியிருப்பதுதான், என இதற்குப் பிறகும் கூறுவீர்களா?!
மைக்கல்: என்றாலும்.. ஏனைய மதங்களோடு ஒப்பிடும் பொழுது இஸ்லாம் மிக எழுதில் விவாகரத்து வழங்குவதில் பிரபல்யம் பெற்றிருப்பதை யாவரும் அறிந்ததே.
ராஷித்: இவ்விடயம் பல தலைப்புக்களை உள்ளடக்கியது. நீங்கள் அனுமதித்தால் அவற்றை விளக்கமாக கூறுலாம்.
மைக்கல்:தயவுசெய்து.
ராஷித்: முதல் விடயம்: இஸ்லாத்தில் விவாகரத்து என்பது மிக எளிதாக நிகழக்கூடிய ஒன்று என பொதுவாக நம்புதல்; விவாகரத்தை ஊக்குவித்து எந்தவொரு ஆதாரமோ இஸ்லாத்தில் இல்லையென்பது உறுதி, இஸ்லாமிய போதனைகளை சரிவர கடைப்பிடிக்காத சிலர் நடைமுறையில் இவ்விடயத்தில் அலட்சியமாக உள்ளனர் என்பதில் உங்களோடு நான் உடன்படுகிறேன். அதேநேரம் இஸ்லாமிய போதனைகள் இந்நடவடிக்கைகளை விட்டும் முற்றிலும் தூரமானவை, என்பதையும் நாம் அறிந்திருப்பது அவசியமே. இஸ்லாம் இவ்விடயத்தை (விவாகரத்தை) தெளிவாக வரையறுத்துள்ளது. எனினும் சில சமூக உறுப்பினர்களிடம் நிகழக்கூடியவை, அவர்கள் இஸ்லாமிய ஒழுங்கு முறையை விட்டும் தூரவிலகியதன் விளைவுகளாகும்.
மைக்கல்: சற்று விளக்கமாகக் கூற முடியுமா?
ராஷித்: இஸ்லாத்தில் திருமணமென்பது நிரந்தற உடன்படிக்கையாகும். அதைக்குறிப்பிட்ட நேரத்தால் வரையறுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. (ஹராமாக்கப்பட்டுள்ளது) அதாவது; கணவன்,மனைவி ஆகிய இருவருக்குமிடையில் உள்ள பந்த உறவு அவர்களில் ஒருவர் மரணிக்கும் வரை தொடர்ந்திருக்க வேண்டுமென்றே இஸ்லாம் வலியுறுத்துகிறது. திருமணம் மிகக்கெட்டியான உடன்படிக்கையென (குர்ஆனில்) வர்நிக்கப்பட்டுள்ளதாவது அதை முறிக்க நினைக்கக்கூடாது என்பதையே சுட்டிக்காட்டுகிறது. விவாகரத்து இஸ்லாத்தில் நிர்ப்பந்தமான நிலமைகளைத்தவிர ஏனையவற்றில் வெறுக்கத்தக்க ஒன்றாகும். அவ்வாறான நிலமைகளிலும் சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. அவ்வாறு (விவாகரத்து) நிகழும் பட்சத்தில் அனைத்து தரப்பினர்களினதும் கௌரவத்தை பேணிப்பாதுகாக்கும் விதத்தில் அமையப்பெற்றிருக்க வேண்டுமெனவும் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.
இஸ்லாம் மனைவியை பற்றிப்பிடிக்குமாறும்,.
கணவன் வெறுக்கும் ஓர் பண்பை அவள் பெற்றிருப்பதால் அவளை விவாகரத்துச்செய்யக்கூடாது எனவும் வலியுறுத்துகிறது. அவளிடம் காணப்படும் ஏனைய நற்பண்புகளைக் கவனிக்குமாரும், அவற்றை பற்றிப்பிடிப்பதற்கு அவளைத்தூண்டுமாரும் கணவனை வலியுறுத்துகிறது. மனைவியின் மகத்துவத்தை பாதுகாக்கிறது; அதாவது, தன் மனைவியை சீர்செய்வதில் கணவனை ஏவுகின்ற அதேவேளை “தலாக்”(விவாகரத்து) என்ற வார்த்தையை பராமுகமாக பிரயோகிப்பதை எச்சரித்துள்ளது. கணவன்,மனைவி ஆகியோருக்கிடையில் எழக்கூடிய பிரச்சினைகளை அவர்களால் தீர்மானிக்கமுடியாதவிடத்து அவற்றை தீர்ப்பதற்காக இருவரினதும் நலனைக்கருத்திற்கொண்ட மூன்றாந்தரப்பினரிடத்தில் செல்வதை இஸ்லாம் விரும்புகிறது. பின்னர் இறுதித்தலாக்கை(விவாகரத்தை) அவ்விருவரும் மீள ஒன்றுசேர்வதற்கான சந்தர்ப்பத்தைக் கொண்டதாக ஆகியுள்ளது. அவர்களுக்கு மத்தியில் எழும் முதல்பிரச்சினையிலேயே அவர்களின் திருமணவாழ்வை கலைத்துவிடவேண்டுமென தீர்ப்பளிக்கவில்லை. மாறாக மூன்று கட்டங்களைக்கொண்டதாக ஆக்கியுள்ளது; முதலிரண்டு கட்டங்களின் பின்னர் கணவன் தன் மனைவியை மீட்டெடுக்க முடியும், அதேநேரம் அவ்வாய்ப்பை மூன்றாம் கட்டத்தின் பின்னரும் வழங்கியுள்ளது. எனினும், அதன் பின்னரும் அவ்விருவருக்கும் மத்தியில் மிக மோசமான, வெறுக்கத்தக்க ஒன்று நிகழுமாயின் விவாகரத்து வழங்கப்பட்ட பெண் வேறொருவரை திருமணம் செய்வாள்.
மைக்கல்: அது என்ன.. முதல் விடயம், ஏனையவைகள் எவை?
ராஷித்: அடுத்து மிகமுக்கிய அம்சம் யாதெனில்; முஸ்லிம்கள் அல்லாத ஏனைய சமூகத்தினரிடம் நிகழக்கூடியவற்றை பார்ப்போம்; அவர்களிடத்தில் அற்ப காரனங்களுக்காக விவாகரத்து நிகழ்கிறதென்பதே உண்மை. அதை நீங்களே அறிவீர்கள்; உதாரணமாக அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் கணவன், மனைவி இருவரில் ஒருவர் கணணியை தொடர்ந்து உபயோகிப்பவராக அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவராக இருந்தாலே விவாகரத்தை பெற்றுக்கொள்ளமுடியுமென நீதிமன்ற வழக்குகள் தெரிவிக்கின்றன. கனடாவில் தம்பதியினரில் ஒருவர் தூங்கும் போது குறட்டை விடுவதால் மற்றவர் பாதிக்கப்படுகிறார் எனக்கூறினாலே விவாகரத்தை பெற்றுவிடலாம். இத்தாலியில் இருவரில் ஒருவர் மற்றவரை வீட்டுவேலைகளை செய்ய நிர்ப்பந்தித்தாலே விவாகரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஜப்பானில் தம்பதியினரில் ஒருவர் மற்றவரை கவரும் விதத்தில் தூங்கவில்லையென்று விவாகரத்துக்கோரினாலும், அதைத் தீர்ப்பாக வழங்குவதில் நீதிமன்றம் பின்னிற்பதில்லை.
மைக்கல்: தலைவர் ராஷித! நீங்கள் கூறியது சரிதான், ஆனால் அவைகள் மதச்சார்பற்ற ஒழுங்குமுறையில் நிகழக்கூடியவை. ஆனால் கிறிஸ்துவ மதத்தைபொருத்த மட்டில் யதார்த்தத்தில் உறுதிப்படுத்த முடியாத சில காரணங்களுக்காகவே தவிர விவாகரத்துக் கோருவது கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. இதை யாவரும் அறிந்ததே.
ராஷித்: இக்கடும்போக்குவாதம் மனித இயல்பிற்கு பொருத்தமற்றது எனக்கருதுகின்றேன். இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் சிலர் இரு மார்க்கங்களுக்குமிடையிலான வேறுபாட்டை பார்த்துவிட்டு, அவர்களுடைய மார்க்கத்தில் இயல்பு வாழ்க்கைக்கைக்குப் பொருந்தமான தீர்வைப் பெறாததால் அதைவிட்டு விரண்டோடுகிரார்கள். இது எனது கருத்தை தெளிவுபடுத்துகிறது.
திருமணம் உலகில் மனிதர்களுக்காக கடமையாக்கப்பட்ட ஒன்று; அவர்களுக்கென இயல்புகளும், மாற்றமடையும் நிலவரங்களும் உள்ளன, என்பதை விளங்கிக்கொள்ளும் பொருட்டு திருமண உடன்படிக்கை நிரந்தரமானதாக இருக்கவேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதேநேரம் அனுபவத்தால் மாத்திரம் விளங்கமுடியுமான தவறுகளுக்கென எல்லையையும் வகுத்துள்ளது. மனிதனின் இந்நிலைமாற்றம் பல்வேறுபட்ட பாதகங்களை விளைவிக்கும்; அப்பாதகங்கள் சிறியதாயினும் அதனால் ஏற்படும் நஷ்டங்கள் பாரியதாக அமையலாம். எனவே, வாழ்க்கைத் தடுமாற்றமடைந்து அனைத்து வழிகளாலும் நெருக்குதளுக்குள்ளாகும்போது இவ்வாறான தவறுகளை திருத்திக்கொள்வதற்கான முறையையும் இஸ்லாம் காட்டித்தந்துள்ளது. கணவன், மனைவி குடும்பம் என அனைவருக்குமான மிகச்சிறந்த நீதியை நிலைநாட்டக்கூடிய மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. திருமணத்தின் மிகமுக்கியமான நோக்கங்களான அன்பு, இரக்கம் என்பன தொடர்ச்சியாக இழப்பதை விட அல்லது குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் பிரச்சினைகளால் அவதியுறுவதை விட பிரிவினால் பாதையை சரிசெய்து புதியதோர் அனுபவத்தைத் தொடர்வது மிகச்சிறந்ததாகும். இஸ்லாத்தில் விவாகரத்து பாதையை சரிசெய்யும் ஓர் சிகிச்சையும், வெற்றிகரமான புதியதோர் வாழ்க்கையை தொடர்வதற்கான சந்தர்ப்பமுமாகும்.
மேற்கூறப்பட்ட காரணிகளின் அடிப்படையில், இஸ்லாத்தில் விவாகரத்து அனுமதிக்கப்பட்டிருப்பது அம்மார்க்கத்தின் தாராளத்தன்மையையும், நடைமுறைகேற்ற பண்பையும் எதுத்துக்காட்டுகிறது எனக் கருதுகிறேன்.
மைக்கல்: என்றாலும், இஸ்லாம் விவாகரத்தை ஏன் ஆண்களுக்கு மாத்திரம் உடமையாக்கியுள்ளது. இது பெண்ணிற்கிழைக்கும் அனியாயமல்லவா?!
றாஷித்: மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறேன்; அதாவது, ஒரு விடயத்தை ஆராயும்போது அதன் அனைத்துப் பகுதிகளையும் கவனத்திற்கொள்ள வேண்டும். திருமனம், அதன் நோக்கங்களில் ஆரம்பித்து குடும்பம் அதன் உறுப்பினர்கள், அவர்கள் ஒவ்வொருவரினதும் அலுவல்கள், கடமைகள், உரிமைகள், பொருப்புக்கள் என அனைத்தையும் கடந்து செல்லும் விதமாக ஒரு பூரண அமைப்பில் இவ்விடயத்தை நோக்க வேண்டுமென நினைக்கிறேன்.
ஒரு பெண் இயல்பிலேயே அதிகம் உணர்வுகளுக்கு அடிபணிபவள் என்பது அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. இவ்வாறான பண்புகள் ஒரு ஆணை முடிவுகளை அதிகம் தனக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடியவனாகவும், பிடிவாதத்தில் மிக உறுதியானவனாகவும், கோபத்தின் போது உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தகூடியவனாகவும் மாற்றியமைக்கின்றன.
இஸ்லாத்தில் விவாகரத்து வழங்குவதால் கணவன் மாத்திரம் பொருளாதார நஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது விவாகரத்தின் பின் அவனை பொருளாதார ரீதியான பொறுப்புகள் உடையவனாக மாற்றியமைக்கிறது; இதனால் அவன் மன அழுத்தத்திற்குள்ளாகிறான் என்பதில் ஐயமில்லை.
அத்தோடு இஸ்லாம் “தலாக்கை” கணவனுக்கு உடமையாக்கியிருப்பதை போன்று, அணைத்து தரப்பினருடைய உரிமைகளை பேணும் பொருட்டு கணவனை விட்டும் மணைவி பிரிந்து செல்வதற்காக ஒரு வழியையும் காட்டித்தந்துள்ளது; அதுவ“குல்உ” எனப்படும்.
எனதருமை நண்பரே! உங்களுடைய நாட்டிலுள்ள பெண்களின் நிலைபற்றியும் நாம் உறையாடுவது உங்களுக்கு விருப்பமா?!
மைக்கல்: நாம் பகற்போசனம் பரிமாறலாம் என நினைக்கிறேன்.