இருவழிகளுக்கு மத்தியில் மனிதஉள்ளம்

 இருவழிகளுக்கு மத்தியில் மனிதஉள்ளம்

இருவழிகளுக்கு மத்தியில் மனிதஉள்ளம்

இருவழிகளுக்கு மத்தியில் மனிதஉள்ளம்

றாசித் மைக்கல் ஆகிய இருவரும் தங்கியிருந்த உணவுச்சாவடி அவர்களுக்கு மிக பிடித்தமானமானதாக இருந்ததோடு, மேலும் அவர்களை அங்கேயே தங்கியிருக்கத் தூண்டியது. அவற்றை விட மிக முக்கியமான ஒன்றுதான் அவர்களுடைய சம வயதை ஒத்த வாளிபர் கூட்டம் அங்கே காணப்பட்டது.

இருவரும் கேட்போர் கூடத்திலிருந்த ஒருவட்ட மேசையை சூழஅமர்ந்த வண்ணம் தங்களூக்குத் தேவையான குடிபாணங்களை வேண்டிகொண்டனர். பின்னர் மைக்கல் தனது உரையாடலை துவங்கினார்:

கடந்த எங்களுடைய உரையாடளில் அந்த இஸ்லாமிய அறிஞரின் கூற்று FRUEDஇனுடைய கூர்றுக்கு உடன்படுகிறதா அல்லது முரண்படுகிறதா என்பதில் நிறுத்தினோம்.

றாசித்: இதுவோர் உடண்படுவதோ அல்லது முரண்படுவதோ தொடர்பான பிரச்சினையல்ல. இஸ்லாம் ஓர் தெளிவான பரிபூரண ஒழுங்கமைப்பு. எனினும் அதை இங்கு நான் தெளிபடுத்த விரும்பவில்லை. இப்னுகையிம் என்ற அறிஞர் தனது நூலில் இதயம்,. ஆன்மா, .சிந்தனை பற்றி விளக்கியுள்ளார். எனினும் இஸ்லாமிய நாகரீகத்தின் அடிப்படை அம்சங்களுடண் தொடர்புபட்ட கோட்பாடுகள் பற்றி அவர் கூரியதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில், இவ்வொழுங்கு முறை மேற்கத்திய சமூகத்தில் பெருமளவு தாக்கம் செலுத்தியுள்ளது. எனவே, அதற்கும் ப்ரொட்டினுடைய கண்ணோட்டத்திற்கும் மத்தியிலுள்ள வேறுபாடுகளை தெளிபடுத்துவன் மூலம் எனது உரையை தொடரலாம் என நினைக்கிறேன்.

மைக்கல்: நேரத்தை சேமித்துக் கொள்வதற்காக உங்கள் உரையின் இறுதிப் பகுதியை மிகசுருக்கமாக கூருகிறேன். நீங்கள் கூறியதற்கு மாற்றமாக இருந்தால் தாராளமாக திருத்திக் கொள்ளலாம்.

றாஷித்: தயவு செய்து.

மைக்கல்: பரொட்டுடைய கண்ணோட்டத்திலிருந்து ஆளுமையின் பல வடிவங்களை அறிந்து கொள்ளலாம். அவற்றை பின்வருமாறு நோக்குவோமாயின்;

ஒரு மனிதனின் மிலேச்சத்தனமான ஆசைகளும், உணர்வுகளும் அவனுடைய ஆளுமையை விடமுற்றாக மேளோங்குமாயின் இயல்பை முற்றாக நாசப்படுத்தும். தன்னுடைய மிருகத்தனமான ஆசைகளையும், இச்சைகளையும் தீர்த்துக்கொள்வதை மாத்திரம் முழுமூச்சாகக் கொண்ட நாசிஸவாத ஆளுமை தோற்றம்பெரும்.

இயல்புகள் கோட்பாடுகள், மகிமைகள்(பேராளுமை)) என்பன ஆளுமையைவிட மேலோங்குமாயின் உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் கலங்கம் விளைவிக்கும் நடைமுறைக்கு ஒவ்வாத துரவரஆளுமை தோன்றும்.

ஒரு புறத்தால் உணர்வுகளையும் ஆசைகளையும் இன்னொரு புறத்தால் வரையறைகளையும், கோட்பாடுகளையும் சரிநிகராக கொன்டுசெல்ல முடியிமாயின் ஆளுமை நிலையானதாகவும் சீரானதாகவும் அமையும்; எனவே, நிலைமைக்கு ஏற்ற விதத்தில் உணர்களை அடக்கவும் அவற்றை வெளிப்படுத்தவும் முடியிமாக இருக்கும்.

றாஷித்: பிரமாதம்! சமூகரீதியான அடையாளப்படுத்தப்பட்ட மேற்கத்திய நாகரீகத்தின் கோட்பாடுகளுக்கும் இஸ்லாமிய ஒழுங்கு முறைக்கும் மத்தியிலுள்ள வேறுபாடுகளை இணங்கண்டு கொண்டோம். இவ்வேறுபாடுகள் பேராளுமை, இன்பம் தொடர்பான வாதப்பிரதிவாதங்களை முடிவுக்கு கொண்டுவந்து விடுகின்றன. எனவே, வாழ்க்கையில் மனிதனுடைய அனைத்து கட்டங்களையும் முழுமையாக ஆராய்ந்து மிக நுட்பமாண முறையில் நடுநிலை வகிப்பதனூடாவே இது சாத்தியப்படும். இதில் உரிமை மீறலுக்கான தடையும் உள்ளது.

மைக்கல்: இவ்வாறான உரிமைமீறலையும், அது எவ்வாறு மீறப்படும் என்பதையும் முதன்முதலாக உங்களிடமிருந்தே கேட்கிறேன். சரி, அதை விடுங்கள். உளவியல் சாதனக்கூறுகள் தொடர்பான கருத்தை ஏற்றுகொள்கிறீர்களென நம்புகிறேன்.

றாசித்: இந்த உளவியல் சாதனக் கூறுகள் சம்பந்தமான கருத்தை இஸ்லாமிய அறிஞர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளார்கள். இப்ணுகையிம் என்ற அறிஞர் அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதை பாருங்கள்: (என்று கூறியவராக றாஷித் ஒரு புத்தகத்தை வெளியில் எடுத்து வாசிக்கலானார்) விடயங்கள் நான்கு வகைப்படும்: வெறுப்பான ஒன்றை நோக்காக்கொண்ட வெறுப்பான காரியம், விருப்பமான ஒன்றை நோக்காகக் கொண்ட வெறுப்பான காரியம், விருப்பமான ஒன்றை நோக்காகக்கொண்ட விருப்பமான காரியம், வெறுப்பான ஒன்றை நோக்காகக் கொண்ட விருப்பமான காரியம். விருப்பமான ஒன்றை நோக்காகக் கொண்ட விருப்பமான செயலை செய்ய இரு வழி முறைகளினாலான தூண்டுதல்களும், வெறுப்பான ஒன்றை நோக்காக கொண்ட வொறுப்பான காரியத்தை விடுவதற்காக இரு தூண்டுதல்களும் உள்ளன.

ஏணைய இரு அம்சங்களும் சோதனை நிரம்பியவை; அச்செயலை செய்வதற்கும், விடுவதற்கும் உள்ளத்தை தூண்டும்; ஆகையால் உள்ளம் அவ்விரண்டிலும் மிக நெருக்கமானதை தேர்ந்தெடுக்கும். சிந்தனையும், நம்பிக்கையும் அவ்விரண்டிலும் மிக பயனுள்ளதை தெரிவு செய்யும். ஆனால் உள்ளமோ அவையிரண்டிற்கும் மத்தியில் தடுமாறும். குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் இஸ்லாமிய அறிஞர்கள் கூறியிருப்பதாவது; சிந்தனை(பேராளுமை) மழுங்கடிக்கப்படும் போதெல்லாம் இச்சைகள்(இன்பம்) கட்டுப்பாடின்றி உயர்ந்து கொண்டே செல்லும்.

ஆன்மா, கேலிக்கை தொடர்பான FRUEDஇன் கருத்திற்கும் உள்ளம், ஆளுமை, நம்பிக்கை, சிந்தனை, பேராளுமை முதலியவற்றிட்கும் இடையில் தொடர்பிருப்பதை அவதானிக்கவில்லையா?

மைக்கல்: அப்படியென்றால்.. நீங்கள் கூறியதும் ஒருவகையில் அதேபோன்றுதான் உள்ளது.

றாசித்: அதற்கும் நான் கூறியதற்குமிடையில் சிறு வித்தியாசமுண்டு. அவ்வித்தியாசம் இப்ணுகையும்முடைய, “அவையிரண்டும் சோதனைகள் நிரம்பியவை” எண்ற கூற்றில் மறைந்திருக்கிறது. இச்சைகளை தீர்த்துகொள்வதனூடாக ஆளுமை(இப்னுல்கையிமிடத்தில் உள்ளம்) முழுமையடைகிறது என்று ப்ரொட் கருதுகின்ற அதேவேளை இஸ்லாம் அவற்றை அல்லாஹ்விடமிருந்து வரக்கூடிய சோதனையாகக் கருதுகிறது. மனோஇச்சைகளுக்கு முழுமையாக அடிபணிவது தவறாகும்; அதற்காக அவற்றை நம்பிக்கை சிந்தணை என்பவற்றால் அடக்கி துறவரவாழ்க்கை வாழவேண்டுமென்ற அவசியமுமில்லை.

நம்பிக்கை,கோட்பாடு ,சிந்தனை முதலியவற்றுக்கு முரணாகாத விதத்தில் மனித உணர்வுகளிலுள்ள உரிமைகளை பறிக்காது, மனிதத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும். இதுவே இஸ்லாத்தில் நாம் காணக்கூடிய நடுநிலைப் போக்காகும்.

மைக்கல்: அப்படியென்றால் உரிமைகள் மீறல் என்பதன் அர்த்தமென்ன?

றாசித்: அர்த்தம் என்னவென்றால்: பண்பாடுகள் கலாச்சாரம் முதலியவற்றிட்கென உரிமைகள் இருப்பதை போன்று மனித ஆசைகளுக்கும், உணர்வுகளுக்குமென உரிமைகள் உள்ளன. இவை இரண்டும் ஒன்றையொன்று மிதமிஞ்சுவதை இஸ்லாம் தடுத்துள்ளது. இதை மேலும் தெளிவுபடுத்துவதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்களின் ஹதீஸை கூறுகிறேன்: ஒருமுறை நபி ஸல் அவர்களின் வீட்டிக்கு அவர்களுடைய வணக்கவழிபாடுகள் பற்றிகேட்க மூன்று நபர்கள் வந்தனர். அது பற்றி அவர்களிடம் அறிவிக்கப்பட்டபோது, அவர்களுடைய வணக்கவழிபாடுகளை தாங்களாகவே குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். மேலும் அவர்களை விட நபியவர்களுக்கு தனிச்சிறப்பு இருப்பாகவும், அவர்கள் அதிகமாக பாவங்கள் புரிந்துவிட்டதாகவும் எண்ணி அவர்களுடைய அடிப்படைத் தேவைகளை விட வணக்கவழிபாடுகள் அதிகமாக இருக்கவேண்டும் என எண்ணினர். அதில் ஒருவர் தான் வாழ்க்கை பூராகவும் இரவில் விழித்திருந்து வணக்கவழிபாடுகளிள் ஈடுபடுவதாக கூறினார்; மற்றவர் நோன்பு நோற்க போவதாகக் கூறினார். மற்றவர் “நான் பெண்களை திருமணம் செய்யாமல் ஒதுங்கியிருக்க போகிறேன்” எனக்கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம்: “நீங்கள் இவ்வாறு இவ்வாறு கூறினீர்கள், அல்லாவின் மீது ஆனையாக நிச்சயமாக நான் உங்களை விடவும் அல்லாவிற்கு பயப்படுபவனாகவும், இறையச்சம் கொண்டவனாகவும் இருக்கிறேன். என்றாலும் நோன்பு நோற்கிறேன்; அதை விடுகிறேன். மேலும் தொழுகிறேன்; உறங்குகிறேன்; பெண்களை திருமணம் செய்கிறேன். ஆகவே யார் என்வழிமுறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னை சார்ந்தவரல்ல.” எனக் கூறினார்கள். அவர்கள் விரும்பத்தக்க மார்க்க விடயங்களில் நன்மையை அதிகரிக்க நாடினார்கள். எனினும் அவை வேறொன்றின் உரிமையை பறிப்பதாக இருந்தன. அதேநேரம் இவை ஆன்மாவுக்கு உரித்தான உரிமையாக இருப்பினும் சரியே, ஒன்றையொன்று மிதமிஞ்சாமல் இருக்கவேண்டும். இதை மேலும் தெளிவாக நபி(ஸல்)அவர்களின் இன்னொரு ஹதீஸ் எடுத்துறைக்கிறது. “இறைவனுக்காக உன்மீது சில கடமைகள்(உரிமைகள்) உள்ளன; உனக்காக உன்மீது சில உரிமைகள் உள்ளன; உன்குடும்பத்திற்காக உன் மீது சில உரிமைகள் உள்ளன. அவரவர் உரிமையை உரித்தாருக்குக் கொடு” இதைப்பற்றி மேலும் பல அல்குர்ஆன் வசனங்களும் வந்துள்ளன. {இன்னும் அல்லாஹ் கொடுத்ததில் இருந்து தர்மம் செய்து, மறுமை வீட்டை தேடிக்கொள்! இம்மையில் உன் பங்கை மறந்து வீடாதே! அல்லாஹ் உனக்கு(தர்மம்) செய்தவாறு நீயும்செய்! பூமியில் நீ குழப்பத்தை தேடாதே! ஏனென்றால், குழப்பம் செய்வதை அல்லாஹ் நிச்சயமாக விரும்பமாட்டான்} [ஸூரா அல்கஸஸ்: வசனம் 77] {மேலும் (உலோபித்தனத்தை போன்று) உம்முடைய கையை உம் முகத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிகொள்ளாதீர்கள்! அன்றியும், (உம்மிடம் இருப்பதை செலவழித்து விட்டு) அதை ஒரே விரிப்பாக விரித்தும் விடாதீர்! அதனால், நீர் நிந்திக்கப்பட்டவராக ஆகிவிடாதீர்} [ஸூரா அல்இஸ்ரா: வசனம் 29] நண்பரே! இஸ்லாம் துறவரத்தை தடை செய்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

இஸ்லாத்தில் ஒரு மணிதன் தன்னுடைய உள்ளத்தை திருப்திப்படுத்த வேண்டும். அவன் எவ்வித ஏற்றதாழ்வு மின்றி தன்னுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, மார்க்க கடைமைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு றாஷித், மைக்கல் இருவரும் தங்களது உரையாடலில் ஆழமாக மூழ்கியிருந்த வேளை அவர்கள் அமர்ந்திருந்ந மேசையை நோக்கி வாலிபரொருவர் நெருங்கி வந்து உரையாட ஆரம்பித்தார்:

உங்களோடு நானும் அமரலாமா?

மைக்கல், றாசித்: (மிக சந்தோஷமாக) தயவுசெய்து.

வாலிபர: உண்மையிலே உங்களுடைய உரையாடல் என்னை கவர்ந்த்து. இதில் நாணும் பங்குபற்றி எங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறேன்

மைக்கல்: அதில் எந்தப்பிரச்சினையுமில்லை.

றாசித்: உங்களை வரவேற்கிறோம்.. இவர் என்னுடைய நண்பர் மைக்கல், பிரித்தானியாவை சேர்ந்தவர், ஆசிரியராக பணிப்புரிகிறார். நான் றாஷித், எகிப்தை சேர்ந்தவன், எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் பணிபுரிகிறேன்.

வாலிபர்: உங்களுக்கு எனது வந்தணம். உங்களை சந்தித்தல் நான் மகிழ்ச்சியடைகிறேன். என்னையும் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்: நான் ரஜீவ், இந்தியாவைச் சேர்ந்தவன், ஜேர்மனியில் பொறியியல் கற்கிறேன், இங்கு பெரிஸில் உள்ள எனது நன்பர்களை சந்திப்பதற்காக வந்தேன்

மைக்கல், றாசித்: (இருவருமாக சேர்ந்து) ரஜீவ்! உங்களைப்பற்றி தெறிந்துகொள்ள நல்ல வாய்ப்பு.

றாஷித்: இப்படித்தான் மேற்கத்திய ஆன்மீக அறிஞர்கள் சிலர் ஆன்மீகத்தை ஊனக்கண் கொண்டே நோக்குகின்றனர். ஆனால் இஸ்லாத்தில் ஆன்மீகமென்பது நன்மை, தீமை ஆகிய இரண்டையும் கொண்டது. ஆத்மாவால் மணிதஉள்ளத்தின் அடிப்படை தேவையை எவ்வித குறைபாடும் இன்றி நிறைவேற்றி, அதை மிலேச்சத்தனமான இருலிள் இருந்து பூரண பண்பாடுமிக்க ஓர் நிலைக்கு மாற்றியமைக்க முடியும்.

ரஜீவ்: உங்களுடய வாதப்பிரதிவாதத்திலிந்து நான் சாராம்சமாக எடுத்துகொண்டது யாதெனில்: அடக்கிவைக்கப்பட்ட ஆசைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ எப்பொழுதும் அவற்றை தீர்த்துவைக்கூடியவற்றையே தேடும். ப்ரொட்டினுடைய கண்ணோட்டத்தில் இந்நிலை கோட்பாடு, கலாச்சாரம் முதலிவற்றால் அமையப்பெற்ற நாகரீகத்தை ஏமாற்றமிக்க ஒன்றாக கருதவேண்டிய நிலைக்கு இட்டுச்செல்லும்.

ஐரோப்பிய நாகரீகத்தின் பண்பாட்டு, கலாச்சாரங்கள் அனைத்தும் பிரபஞ்சக் கோட்பாட்டின் ஆதிக்கத்தின் விளைவால் ஏற்பட்டவை. அவை மனிதன் இப்பிரபஞ்சத்தின் நாயகன் என்ற எண்னகருவின் அடிப்படையில் அவனுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. இவையனைத்தும் அந்நாகரீகத்தின் இறைசிந்தனையின் வீழ்ச்சியின் விளைவால் ஏற்பட்டவை. ஆனால், இஸ்லாமிய நாகரீகத்தை பொருத்தமட்டில் தலைவனுக்கெல்லாம் தலையாய தலைவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்ற கொள்கையில் அமையப்பெற்றது. எனினும் இக்கருத்து மனிதப் பிறவியை நசுக்கக்கூடிய பாதகமான ஒன்றல்ல.

றாஷித்: அதேபோன்று இக்கொள்கை மனித சமூகத்தின் பண்பாட்டு மூலாதாரம் சிந்தனையல்ல, வேதவாக்கு என்பதற்கான ஆதாரமாகும். ஏனெனில், சிந்தனை மாத்திரம் இருப்பின் அது நெறிபிறழ்விற்கு இட்டுச்செல்லும். ஆனால் வேதவாக்கினை அடிப்படையாக கொண்ட சிந்தனை மிகச் சிறந்த பண்பாட்டை கட்டியெழுப்பும்; அதுவே இன்றைய தேவையுமாகும்.

மைக்கல்: ரஜீவ் அவர்களே! நீங்கள் இருப்பது எங்களுடைய உரையாடலை மேலும் நிலைக்க வைக்கும் என கருதுகிறேன். எனவே நாளை இதேஇடத்தில் இதேநேரத்தில் எங்களுடைய புதிய விவாதத்தை ஆரம்பிக்கலாம் ன நினைக்கிறேன். உங்களுக்கு அது விருப்பமா?

ரஜீவ்: ஆம் முழுமையாக

றாஷித்: அதேநேரத்தில், பகல் போசனத்திற்காக எனது அழைப்பை ஏற்றுக் கொள்வீர்கள் என்றார் எனக்கும் மிக சந்தோசமாக இருக்கும். எங்களுடைய புதிய நண்பன் ரஜீவிற்கு வாழ்த்துக்கள். .

மைக்கல், றாஜீவ்: மிக்க சந்தோஷம்.




Tags: