நூற்றாண்டுகளாக அல்குர்ஆன் முஸ்லிம்களில் உள்ளத்தில் பாதுகாப்புடன் இருக்கின்றது அது அவர்களின் சிந்தனைகளைப் பதப்படுத்தி, நற்குணங்களை உருவாக்குகின்றது பல்லாயிரக்கணக்கான மக்களின் திறமைகளை கூர்மையாக்குகின்றது மக்களின் உள்ளத்தின் இலகுவான கொள்கைகளை நட்டிவிடுகின்றது ஓரிறைக் கோட்பாட்டை நிருவி, பல தெய்வ வழிபாட்டை அவர்களை விட்டும் தூரமாக்கி விடுகின்றது அவர்களுக்கு மத்தியில் சமூக ஒழுங்கு விதிமுறைகளை உருவாக்கி, ஒரே சமூகமாக என்றும் நிலைபெற உதவி செய்கின்றது மூட நம்பிக்கைகள், வீண் சந்தேகங்ள், கல்நெஞ்சத் தனங்கள், அநீதிகள் போன்ற அனைத்தையு அவர்களின் உள்ளத்திலிருந்து கிள்ளியெறிந்து விடுகின்றது முஸ்லிம்களின் உள்ளத்தில் பணிவையும், கண்ணியத்தையும் விதைக்கின்றது”