- சந்தோசமான, தூய சமுதாயம்
இஸ்லாத்தின் சட்டதிட்டங்களைப் பேணி வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் எவ்விதத் தீங்குகளுமற்ற தூய்மையான, மகிழ்வான சமுதாயமாகும்”
- பசித்தவர்கள் ஒரு போதும் இருக்க மாட்டார்கள்
ஸக்காத் என்னும் வரியை மார்க்க அடிப்படையில் சேகரிக்கும் மார்க்கமாக இஸ்லாத்தைத் தவிர வேறு எம் மார்க்கத்தையும் நான் பார்த்ததில்லை ஸக்காத் சரியான முறையில் சேகரிக்கப்பட்டு, விநியோகிக்கப்படும் இஸ்லாமிய சமூகத்தில் பசி, பட்டினி போன்ற எதுவும் ஏற்படுவதில்லை இதையே முழு உலகும் பின்பற்றுமானால் இன்று உலகில் பஞ்சத்தில் வாடுவோர் எவரும் இருக்க மாட்டார்கள்”
- கண்ணியமான மார்க்கம்
இஸ்லாம் சமாதானம், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், கண்ணியம் போன்றன உள்ளடங்கிய மார்க்கமாகும் இவை அனைத்தும் அதன் சட்டதிட்டங்கள், ஒழுங்குவிதிகள் போன்றவற்றின் மூலம் தெரிந்துகொள்ளலாம் இஸ்லாத்தில் விரதமானது ஏனைய மதங்களிலுள்ள நோன்பை விட முற்றிலும் வேறுபட்டது ஆசாமிகள் செய்வது போல் உடலின் வேண்டுதல்களை தலைகீழாக மாறி நடமாடும் கோவிலாக மனித உடல் மாறுவது தான் நோன்பு கிடையாது இஸ்லாம் உடலின் வேண்டுதல்களுக்கு ஒழுக்கம் போதிக்கும் அதே வேளையில் அதை தலை கீழாக மாற்றிவிடவில்லை இஸ்லாத்தில் விரதமானது, மனோ இச்சைகளுக்குப் புரம்பான போராட்டம், பொறுமை என்பவற்றில் தன் ஆண்மாவை பழக்கப்படுத்திக் கொள்வதாகும் இரகசியத்திலும், பரகசியத்திலும் அல்லாஹ்வுடன் தொடர்பை ஏற்படுத்தல், ஏனையோரின் பசியை உணர்தல், உள்ளத்திற்கு திருப்தியை அளித்தல் போன்ற அனைத்தையும் இது உள்ளடக்கியுள்ளது விரதமென்பது ஒருவனது ஆரோக்கியத்திற்கும், சிந்தனைக்கும் பிரயோசனமாய் இருக்கின்றது”