- முஹம்மத் தான் இறுதித் தூதுவர்
ஏனெனிவ் அல்லாஹ் என்னை இப்பூமியிலிருந்து உயர்த்திவிடுவான் என்னைப் போன்ற உருவில் ஒருவனை ஒப்பனை செய்துவிடுவான் மக்கள் அவனை நான் தான் என நினைத்துவிடுவர் என்னைப் போன்று மாறியவனின் மரணம் மிகக் கொடூரமாக இருக்கும் நான் பூமியில் சில காலம் இத்தகைய வெட்க நிலையிலேயே இருப்பேன் எப்போது முஹம்மத் வருவாரோ அப்போது என் மீதான இக்களங்கம் நீங்கி விடும்”
- பைபிள் முஹம்மதைப் பற்றிக் குறிப்பிடுகின்றது
இக்களங்கம் முஹம்மத் வரும் வரையிலும் நீடிக்கும் எப்போது முஹம்மத் வருகின்றாரோ அப்போது அல்லாஹ்வின் மார்க்கத்தை விசுவாசம் கொள்பவர்களுக்கு ஏமாற்றம் தந்தது எது என விளங்கிவிடும் ஏசாயாவில், ‘உன் பெயரை முஹம்மத் என நான் ஆக்கிவிட்டேன் முஹம்மதே இறைவனை தூய்மைப்படுத்துபவரே உன் பெயர் நிலையாய் இருக்கும்’ எனக் கூறப்பட்டுள்ளது அவ்வாறே ஆபகூக், ‘பாரான் மலையிலிருந்து பரிசுத்தவான்களுக்கு மத்தியிலிருந்து அல்லாஹ் அவரை பிரசன்னமாக்கினான் முஹம்மதின் மகிமையால் வானத்தை ஒளிமயமாக்கினான் அவரின் புகழால் இப்பூமி நிரைந்துவிடும்’ எனக் கூறுகின்றது ஏசயாவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது, ‘அவருக்கு வழங்கியதை வேறு எவருக்கும் வழங்கமாட்டேன் அஹ்மத் என்பவர் அல்லாஹ்வைப் புகழ்வார் பூமியில் மிகவும் சிறந்தவராக இருப்பார் அவரின் மூலம் பூமியிலுள்ள அனைவரும் சந்தோசப்படுவர் அனைத்து கௌரவங்களையும் அவருக்கே வழங்குவர் கண்ணியவானாக அவரை மாற்றிவிடுவர்”