சத்திய மார்க்கத்தின் பண்புகள்

 சத்திய மார்க்கத்தின் பண்புகள்

சத்திய மார்க்கத்தின் பண்புகள்

சத்திய மார்க்கத்தின் பண்புகள்

றாஷித் நண்பர்கள் இருவரையும் நூதனசாலை முன்னின்று எதிர்ப்பார்த்திருந்தார். அவர்கள் வந்தவுடன் அவர்களை வரவேற்று நூதனசாலையை சுற்றிப்பார்க்க அழைத்தார்.

இந்த நூதனசாலைக்கு உங்களை அழைத்தது ஏனென்றால், இன்றைய தலைப்பை ஆரம்பிப்பதற்கு முன்னர் மனித வரலாற்றின் ஒரு பகுதியை மீட்டிப்பார்ப்பதற்காகவே. எப்படி இந்த யோசனை?

மைக்கல்: ராஷித்! இது என்ன புதுமை... இங்கே வந்தபின்னால் ஆலோசனைக்கேட்டீர்கள்... அதற்கு முன்னரல்லவா கேட்டிருக்கவேண்டும்..பொதுவாக, எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ரஜீவ் நீங்கள்?

ராஜிவ்: எனக்கும்தான், எந்தப்பிரச்சினையும் இல்லை, ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் உரையாடலை ஆரம்பிக்கவேண்டுமென்றால், அவசரமாக சுற்றிப்பார்ப்பது நல்லது. ஏனன்றால் நூதனைசாலை மிக பிரம்மாண்டமானது, முழுமையாக சுற்றிப்பார்க்க நேரமில்லை.

றாஷித்: எனது தவறுக்காக வருந்துகிறேன். உங்கள் இருவருக்கும் ஒரு திகிலாக இருக்கும் என்றுதான் செய்தேன். ஆனாலும் அதில் தவறிழைத்துவிட்டேன்.

மைக்கல்: சரி அதை விடுங்கள். நாங்கள் தற்போது விரைவாக செயற்படவேண்டும். மண்டபம் 13KM சதுரப்பரப்பளவைக்கொண்டது. 1மில்லியனுக்கு மேற்பட்ட பகுதிகள் உள்ளன. அனைத்தையும் பார்க்க வேண்டுமல்லவா?

றாஷித்: இதை தரிசிப்பதனுடைய நோக்கம் அதை முழுமையாக ஆராயவேண்டுமென்பதல்ல. மாறாக எங்களுடைய உரையாடளுக்குத்தேவையான உயிரோட்டமுள்ள சில தகவல்களைத்திரட்டிக்கொள்வதே. எனவே எங்களுடைய முழுக்கவனமும் பண்டயநாகரீக சின்னங்கள் பற்றியதாகவே இருக்கவேண்டும். அவற்றில் பெரும்பாலானவை கீழ் தளங்களிலேயே இருக்கின்றன..வாருங்கள் அங்கே செல்லலாம்.....

இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் நண்பர்கள் மூவரும் சுற்றிக்களைத்தவர்களாக நூதனசாலையைவிட்டு வெளியேறினர்.

றாஷித்: அருகிலுள்ள சாப்பாட்டு விடுதிக்குச்சென்று சற்று இளைப்பாறிவிட்டு பகலுணவை உண்ணலாம்.

அவர்கள் சாப்பாடு விடுதியைநோக்கி சென்று கொண்டிருந்தபோது றாஷித் தலைப்பைத்துவங்கி விட்டார்.

நாகரீகங்கள் தொடர்பாக நாங்கள் சேகரித்த தகவல்களுக்கும் , சமயத்திற்கும் இடையில் ஏதோவொரு வகையில் தொடர்பிருப்பதை அவதானித்தீர்களா? இவை(வரலாற்று ரீதியாக) ஒரு மனிதனுக்கு சமயம் எந்தளவுக்கு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டக்கூடிய ஆதாரமல்லவா?

ரஜீவ்: :நீங்கள் கூறுவது மனிதவியலாலர்களால் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான், மனித வரலாறு தொடர்பான அவர்களுடைய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கோட்டைகளோ, கைத்தொழிற்சாலைகளோ,அறிவியலோ, தத்துவங்களோ இன்றி பல நாகரீகங்கள் இருக்கலாம். ஆனால் வணக்கஸ்தலங்கள் இன்றி எந்தவொரு நாகரீகமும் இல்லை.

மைக்கல்: யதார்த்தத்தில் எந்தவொரு புத்திஜீவியும் சமயம் தீங்கு விளைவிக்கக்கூடியது எனக்கூறமாட்டார், அதுமட்டுமன்றி அது மனித நாகரீகத்தின் அடிப்படைக்கூறுகளில் ஒன்றாகும். ஆனால் சிக்கல் எங்கு எனின், ஒவ்வொருவரும் தங்களுடைய மார்க்கம்தான் சரியென வாதிடுவதிலேயே தங்கியுள்ளது. எனவே ஒவ்வொருவரும் தங்களுடைய வாதாட்டத்தின்பால் மக்களை அழைக்கின்றனர். தங்களுடைய கொள்கைவாதிகளை பின்பற்றுமாறும், அவர்களுடைய தலைவர்களை மதிக்குமாறும் மக்களை வலியுறுத்துகின்றனர். .இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுடைய மார்க்கம்தான் சத்தியத்திலுள்ளதென வாதிடுவதால், எது உண்மையான மதம்: யூதமதமா, கிரிஸ்த்தவமதமா, பௌத்தமதமா, அல்லது இஸ்லாமியமதமா...என்ற தடுமாற்றத்தில் மனிதன் தள்ளாடுகிறான்.இவற்றில் எது சரியென எவ்வாறு அறிந்து கொள்வது, அல்லது அவர்கள் அனைவரும் சத்தியத்தில் இருக்கிறார்களா?...ஹ்ம்ம்....!தடுமாற்றமான ஒன்று, அவ்வாறு தானே?

றாஷித்: ஆம், தடுமாற்றம்தான். என்றாலும் இதிலிருந்து வெளியேற ஒருவழியிருக்கிறது. எடுத்துக்காட்டாக: தற்போது நாங்கள் பசியாக இருக்கிறோம் என்பதற்காக எந்த உணவாக இருப்பினும் அதையுண்டு பசியைப்போக்க விரும்புவோமா? நிச்சயமாக இல்லை. அவ்வாறே எங்களுடைய ஆத்மரீதியான உணர்ச்சியின் பசியைப்போக்கவும் பொருத்தமான சிறந்த உணவை தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.

அனைவரும் சத்தியத்தில் இருக்கிறார்கள் என்றால் அது சாத்தியமற்ற ஒன்று. ஏனெனில் சத்தியம் தனித்துவமானது; பலதரப்படாதது. அவ்வாறே அணைத்தது மதங்களும் சமயங்களும் அல்லாஹ்விடத்திலிருந்து வந்திருக்கலாம் என்பதும் சாத்தியப்படாத ஒன்று. ஆகவே அவற்றில் எது உண்மை என்ற கேள்வி தொடர்ந்தும் எழுந்துகொண்டேயிருக்கும். ஆகையால் சத்தியமார்க்கத்தை தெளிவு படுத்தக்கூடிய அடையாளங்கள் நிச்சயமாக இருக்கவேண்டும். அவ்வடையாலங்கள் அனைத்தும் பொருந்தக்கூடிய மதம் உண்மையானது;. அவற்றில் ஒன்றேனும் குறையுமாக இருப்பின் அது போலியான மதமாகும் என்ற முடிவுக்கு வரலாம்.

ரஜீவ்: நீங்கள் கூறுவதைப் பார்த்தால் அல்லாஹ்வினால் அருளப்பட்ட மார்க்கமாக இருக்கவேண்டுமென்பதே அதன் முதல் அடையாளம் என எனக்குத்தோன்றுகின்றது. எனவே அதுவோர் பரலோக மார்க்கமாக இருக்கவேண்டுமா? உலகத்தில் பல மில்லியன் மக்கள் பின்பற்றக்கூடிய பௌத்தம், ஹிந்து, கம்பூஸியம், என இறைவனால் அருளப்படாத மார்க்கங்கள் பல உள்ளன.

றாஷித்: அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், எந்தவொரு மார்க்கத்தினதும் அடிப்படை ஏதோ ஒருவகையில் கடவுளை வணங்கவேண்டுமேன்பதே. அந்த வகையில் பிரபஞ்சத்தையும், மனிதனையும் படைத்து அவனுக்காக பூமியில் உள்ளவற்றை வசப்படுத்திக்கொடுத்த ஒருவனே உணமையான இறைவன் என்பதை நாம் எற்றுக்கொல்வோமானால், வணக்கத்துக்குரியவன் அவன் ஒருவனே என்பதையும் எற்றுக்கொள்வது அவசியமாகும். ஆகவே படைத்து பரிபாளிக்கக்கூடிய ஒருவன் இருக்க வேறொன்றை வணங்குவது எப்படி? அத்தோடு உண்மையான மார்க்கம் அந்த ஏக இறைவனையே வணங்கவேண்டுமென வலியுறுத்த வேண்டும். அவனுடைய பண்புகளை அவனுக்கே உரித்தாக்குவதோடு, அவனுடைய தூதர்களை சங்கைப்படுத்தவேண்டும்.

சென்ற எங்களுடைய சந்திப்பில் உண்மையான கடவுளின் பண்புகள், மனிதன் நேர்வழி அடைவதற்கான வழிகாட்டியின் அவசியம் என்பவற்றில் உடன் பட்டோம். அவ்வழிகாட்டியே மார்க்கமாகும்.

அதேபோன்று மனிதனுடைய செயல்களுக்காக கேள்விகணக்கு கேற்கப்பட்டு கூலி வழங்கப்படும் நாளொன்று அவசியம் என்பதில் உடன்பட்டோம். அந்நாளில் கேள்வி கணக்கு கேற்கும் அதிகாரத்தைக்கொண்டவன் அல்லாஹ் ஒருவனே எனின் அவ்விசாரணை அவன் இறக்கியருளிய மார்க்க அடிப்படையில் இருக்க வேண்டுமென்பதும் இன்றியமையாத ஒன்று. அந்தடிப்படையில் இதைத்தவிர மனிதன் கொண்டுவரக்கூடிய எந்த மார்க்கமாக இருப்பினும் அதுபோலியானதே என்பதில் ஐயமில்லை.

எனினும் ஒருவிடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: சமயங்களை பின்பற்றுபவர்களிடம் அவர்கள் பின்பற்றுவதற்கான மூலாதாரத்தைக்கேட்டால், அவர்களில் பெரும்பாலானோர் அவை தங்களுடைய மூதாதையர்களிடமிருந்து பெற்றுக்கொண்டவை என சில கட்டுக்கதைகளைக்கூறுவார்கள். எந்த இடத்தில் எழுதப்பட்டது, எந்தமொழியில் எழுதப்பட்டது, யாரால் எழுதப்பட்டது என ஒரு தகவலுமின்றி சில மரபு நூல்களை வழிப்படுவார்கள். அவையனைத்தும் அறிவியல்ரீதியாக உண்மைப்படுத்தப்படாத மரபுரீதியான தொடரந்துவரும் புரட்டுக்களே. இவற்றிலிருந்து நாம் தவிர்ந்துகொள்ளவேண்டும். இதிலிருந்து சத்தியமார்க்கத்தின் பண்புகளில் ஒன்றான அதன் மூலாதாரத்துடன் உறுதியாக தொடர்புபட்டிருத்தல் என்ற அம்சம் தெளிவாகிறது. அத்தோடு இறைவனிடமிருந்து வந்த மார்க்கத்தை எத்திவைக்கக்கூடிய தூதரின் ஆதாரங்களும் நம்பகத்தன்மையுடையனவாக இருக்க வேண்டும்.

ரஜீவ்: ம்ம்....பரவாயில்லை, அப்படியென்றால் சிந்தனை, அறிவு, இயற்கை, ஏக இறைவன், அவனுடைய பண்புகள், தூதுத்துவத்தின் அவசியம் என நாங்கள் உடன்பட்ட அனைத்தையும் அடிப்படையாகக்கொண்டு செயற்பட வேண்டும்.

மைக்கல்: இவற்றை நாம் ஏற்றுக்கொள்வோமாயின் மார்க்கம் அல்லாஹ்விடத்திலிருந்து இறக்கியருளப்பட்டதாக இருக்க வேண்டும். அவன் ஒருவனையே வணங்க வேண்டும். அத்தோடு மார்க்கம் அறிவைப்போற்றவேண்டும்; அதைப்புறக்கணிக்கக்கூடாது என்ற இன்னோர் பண்பையும் அத்தோடு இணைத்துக்கொள்வது அவசியமாகும். மார்க்கம் சீரிய சிந்தைக்கு உடன்பட்டதாக இருக்கவேண்டும். எனவே நேரான மார்க்கம் அல்லாஹ்வுடைய மார்க்கமென்றும் சீரான சிந்தனை அல்லாஹ்வுடைய படைப்பு என்றும் கூறுவோமாயின் அவ்விரண்டும்(மார்க்கம்,சிந்தனை) ஒன்றையொன்று முரணாக வாய்ப்பில்லை.

றாஷித்: ஆம், அவ்வாறுதான். அத்தோடு மேலும் இருவிடயங்களையும் நம்பவேண்டும்.

முதலாவது: முன் சென்றவற்றிலிருந்து நடைபெற சாத்தியமற்ற ஒரு விடயத்திற்கும் சிந்தனையால் கற்பனை செய்ய முடியாத ஒரு விடயத்திற்கும் மத்தியில் பாரிய வேறுபாடுகள் உள்ளன என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். எனவே மார்க்கத்திலும் சிந்தனைக்குப்படாத சில விசித்திரங்கள் உள்ளன. அவற்றை மறைமுகமான அம்சங்கள் எனலாம். உதாரணமாக தேவர்கள், ஷைத்தான்கள், நபி(ஸல்) அவர்களுக்கு வஹி அறிவிக்கப்பட்ட முறை, மறுமை நாள் பற்றிய விளக்கங்கள் முதலியவற்றை நம்புவதாகும். எனினும் இவை சிந்தனைக்கு அப்பாற்ப்பட்டவை.

எடுத்துக்காட்டாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரனை நோக்கி விண்கலம் அனுப்புவதையோ அல்லது பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒருவருடன் உரையாடுவதையோ மனிதன் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டன். என்றாலும் அவை சாத்தியப்படக்கூடியவை. ஆனால் ஒருவர் 1+1+1=1 எனக்கூறினால், அது எக்காலத்திலும் சாத்தியப்படாது என்பது உறுதி. எனவே இவ்விரு நிலைகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைக் கண்டறிய வேண்டும்,

இரண்டாவது: மேற்குறிப்பிட்ட கூற்றுக்கிணங்க சில மார்க்க விளக்கங்கள் நம் சிந்தனைக்கு எட்டாமல் போகலாம். அவை சிந்தனைக்கு முரணாகாதவிடத்து அவற்றை முழுமையாக நம்புவது அவசியமாகும். எடுத்துக்காட்டாக நீங்கள் ஒருமனிதரை நூறுவீதம் உறுதியானவர் என நம்புகிறீர்கள்; அதை நிரூபிப்பதற்காக உங்களிடம் சில வெள்ளைக்கடதாசிகளில் கையொப்பமிடச்சொல்கிறார். உடனே எந்தக்கேள்வியுமின்றி நீங்கள் அவற்றில் கையொப்பமிடுவீர்கள். அதேநேரம் நீங்கள் அவர்மீது பூரண நம்பிக்கையற்றவராக இருப்பின் அக்கடதாசிகளில் கையொப்பமிடுவதற்கு முன்னர் கேள்விகளை எழுப்புவீர்கள். அதேபோன்றே அல்லாஹ்வின் மீதுள்ள சிந்தனைரீதியான உறுதி நம்பிக்கையாகும். மார்க்கவிளக்கங்கள் அந்நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகும்.

மைக்கல்: அவ்வாறாயின் சத்தியமார்க்கத்தின் இயல்புகளில் ஒன்று தான் முன்னுக்குப்பின் முரனாகாமல் இருத்தல். அதாவது ஒன்றை ஒருபுறத்தால் ஏவியும் இன்னொரு புறத்தால் தடுத்தும் அல்லது ஒன்றை ஒருபிரிவினருக்கு மாத்திரம் ஆகுமாக்கியும் மற்றைய பிரிவினருக்கு அதை ஹராமாக்கியும்(தடைசெய்தும்) இருக்கக்கூடாது.

ரஜீவ்: மார்க்கம் மனித வழிகாட்டி எனின், அல்லாஹ்வை வணங்குவதற்கான நேர்வழி, அவனால் வேண்டப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டி, மனிதன் பின்பற்றவேண்டிய ஒழுங்குமுறை, மனிதன் என்கிருந்துவந்தான் இறுதியாக எங்கு செல்வான் என வாழ்க்கையில் எழக்கூடிய மிகப்பெரும்கேள்விகலுக்கான விடைகள், அமைதி, மனநிம்மதி முதலிய அனைத்தையும் அது உள்ளடக்கியிருக்க வேண்டும். அத்தோடு மனித இயல்போடு ஒத்துப்போகக்கூடியதாகவும் அமையவேண்டும்.

மைக்கல்: மேற்றுமொரு மிக முக்கியமான ஒன்று: மார்க்கம் நல்லவற்றை எவக்கூடியதாகவும் தீயவற்றை தவிர்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். உரிமை மீறல், நல்லவற்றை நாசமாக்கல், பலம் வாய்ந்தவர்கள் பலவீனமானவர்களை அநியாயம் செய்தல் போன்ற படைப்பினம் தனக்குத்தானே அல்லது பிறவற்றிட்கு இழைக்கக்கூடிய அநியாயத்திலிருந்து விடுபட்ட ஒரு அருளாகவும் இருக்கவேண்டும்.

றாஷித்: ஓ...மார்க்கத்தின் இவ்வனைத்து பண்புகளும் முன்னுக்குப்பின் முரனாகாமல் இருக்கவேண்டும் என்ற நிபாந்தனையைக்கூற மறந்து விட்டோம்.

மைக்கல்: ராஷித்! உங்களுடைய மார்க்கத்தைப்பற்றி நான் மிக அரிதாகவே அறிந்து வைத்துள்ளேன். எனவே அதைப்பற்றி நீங்கள் மிகத்தெளிவாக கூற வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

றாஷித்: சரி அதை எங்களுடைய அடுத்த சந்திப்பில் பார்ப்போம்.




Tags: