இறை வேதம்

 இறை வேதம்

இறை வேதம்

இறை வேதம்

நண்பர்கள் மூவரும் குறிப்பிட்ட தினத்தன்று சந்தித்துகொன்டனர். மைக்கல் அன்றைய தலைப்பை வினவிய பின்னர் உரையாட ஆரம்பித்தார்.

இன்று கிழேத்திய வாத ஆய்வுநிபுனர் ஒருவருடைய புத்தகத்தைப்படித்தோம். அதில் இஸ்லாம் மார்க்கத்தை பற்றி சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை உங்களோடு பரிமாறிக கொள்ளலாம் என நினைக்கிறேன் .

ரஜீவ்: ஆம், மிக முக்கியமான விடயமாகத்தான் இருக்க வேண்டும்.

றாஷித்: அவற்றை ஒவ்வொன்றாகக் கூறினால் கலந்துரையாட எழிதாக இருக்குமென நினைக்கிறேன் .

மைக்கல்: நல்லது, இது தொடர்பாக புத்தகத்தில் இல்லாத வேறு கேள்விகள் ராஜீவுக்கு தோன்றினால், தாராளமாகக் கேட்கலாம்.

றாஷித்: தயவு செய்து.

மைக்கல்: இஸ்லாமிய மார்க்கம் ரோம சட்டத்திலிருந்து பெறப்பட்டது. அவையிரண்டிக்கும் இடையில் சில அம்சங்கள் ஒத்து போகின்றன என அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

றாஷித்: நானும் ஒன்றைக் கூறுகிறேன்: உங்களுடைய இந்தக் கூற்றுப் பழமையானது. இன்றைய கீழைத்தேய வாதிகளில் அதிகமானோர் இக்கருத்தில் இல்லை. இஸ்லாமிய மார்க்க மற்றும் சட்டத்துறையில் நிபுனத்துவம் பெற்ற ரஷ்யாவை சேர்ந்த மிகப்பெரும் கிழைத்தேயவாதியான லியோனிட் சுகேஸின் அவ்களை சந்தித்தேன் அவரிடம் இது பற்றி வினவிய போது “இஸ்லாமிய மார்க்கம் உரோம சட்டவொழுங்கு முறையில் இருந்து எடுக்கபட்டது என கூறகூடிய மேற்கத்திய ஆய்வாளர்கள் எவருமில்லை. இக்கருத்து பத்தொன்பதாம் நூற்றான்டில் வாழ்ந்த மேற்கத்திய ஆய்வாளர்கள் சிலரிடம் காணப்பட்ட ஒன்றாகும். ஆனால் இன்றைய மேற்கத்திய சட்ட ஒழுங்கு முறை, கோட்பாடு, ,இஸ்லாமிய மார்க்கம், உரோமசட்டவொழுங்கு முறையின் தாக்கத்துக்குள்ளாகாத ஒரு தனித்துவமான சட்ட வாக்க முறையாகும் என்பதை ஏக மனதோடு ஏற்று கொள்கிறேன்.

இரண்டாவது: இஸ்லாமிய மார்க்க மூலாதாரம் ஏனைய மார்க்கங்களை விட்டும் வேறு பட்ட ஒன்று. நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு கூறக்கூடிய ஒன்றுதான் இஸ்லாம் ஓர் பரிபூரண ஒழுங்கமைப்பாகும். அதுமட்டு மன்றி படைப்பினங்கள் இறைவனின் அடிமைகள் என்ற அடிப்படையில் அவனுக்கு முற்று முழுதாக வழிப்பட்டு அவை படைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதோடு தொடர்புபட்டதாகும். எனவேதான் இஸ்லாமிய வேத மூலாதாரமாக இறைவனால் வஹி அறிவிக்கப்பட்ட அல்குர்ஆன் மற்றும் சுன்னா திகழ்கின்றன. இஸ்லாத்தின் தூதர் நபி ஸல் அவர்கள் எழுத வாசிக்க தெரியாத (உம்மி) படிப்பறிவற்ற பாமரராக இருந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில் இருக்க கூடிய ஒருவர் முன்னறிவற்ற ஒரு அன்னிய உரோம மூலாதாரத்தை ஆய்வுசெய்வதற்கான வாய்ப்பு கடுகளவேனும் இல்லை.

இதைத்தான் கீழைத்தேய வாதியான டேவிட்டி சான்டிலானா கூறுகையில்: "கீழைத்தேய, மேற்கத்திய (இஸ்லாமிய, உரோம) மதங்களுக்கிடையிலான ஒத்துபோகக் கூடிய சில அடிப்படைகளை கண்டறிய முற்பட்டோம். ஆனால் இஸ்லாம் எங்களுடைய சட்டங்களுக்கும், ஒழுங்குகளுக்கும் எவ்விதத்திலும் பொருந்தாத மிக உறுதியான அடிப்படைகளைக் கொன்ட ஒரு மார்க்கமாகும். ஏனெனில் அது எங்களுடைய சிந்தனைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட வழிமுறை...” என தெரிவித்தார்.

ஆனால் சில மார்க்க ஒழுங்குமுறைகளிலுள்ள ஒருமைப்பாடுகள் ஒரே மாதிரியான சூழலில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஒரேமாதிரியாக இருப்பதன் விளைவால் ஏற்பட்டவை. எடுத்துக் காட்டாக: ((ஒன்றை விவாதிப்பதன் ஆதாரம் கொன்டு வர வேண்டும். அதை மறுப்பவன் சத்தியம் செய்யவேண்டும்)) என நபி(ஸல்) அவர்களின் கூற்றை எடுத்துக் கொள்ளலாம் .

மைக்கல்: எனினும் யூத, கிறிஸ்தவ மதங்கள் இஸ்லாத்திற்கு முன்னரே இறக்கியருளப்பட்டவை என்பதால் இஸ்லாம் அவற்றிலிருந்து சட்டவாக்கங்களை பெற்றிருப்பதற்கான வாய்புகள் அதிகமாக உள்ளன. என்ன... அப்படித்தானே?

றாஷித்: இவ்விடயத்தில் நிபுனத்துவம் பெற்ற ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல்யமான மேற்கத்திய . சிந்தனையாளர் ஜோசப் ஸ்செக்த் இனுடைய கூற்றை இச்சந்தர்ப்பத்தில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்: ((இஸ்லாம் ஒரு மத சட்ட வாக்கம் என்று கூறப்படும் அளவு தனித்துவமான தன்மையுடையது. புவியியல், வரலாற்று ரீதியாக இஸ்லாமிய மார்க்கத்திற்கு மிக நெருக்கமானவை என கூறப்படும் ஏனைய இரு மார்க்கங்களும் (யூதமதம் ,கிறிஸ்தவமதம்) இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. ஏனெனில் இஸ்லாம் அமைப்பில் அவ்விரண்டையும் விட பல்வகைமைத் தன்மைக் கொண்டது. ஒரே கண்ணோட்டத்தில் நோக்கப்படுவதை விட்டும் மிகத் தூரமானது.)) எனக் குறிப்பிட்டார்.

அதுமட்டு மன்றி நீங்கள் கூறியதற்கு முற்றிலும் புறம்பாக; ((மத்திய தரைக் கடலை அன்டியுள்ள பிரதேசத்தில் இஸ்லாமிய சட்ட முறைமை ஏனைய சட்ட வாக்கத்திலும் தாக்கம் செலுத்தியது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ஏனைய சமயத்தவர்களான யூத, கிறிஸ்தவர்களுடைய கோட்பாடுகளில் இஸ்லாமிய சமயத் தாக்கம் இன்றியமையாத ஒன்றாகக் கானப்பட்டது. கீழைத்தய கிறிஸ்தவ திருச்சபை பிரிவினரான நெஸ்டர்கள், ஜெகோபியன்ஸ் ஆகியோர் இஸ்லாமிய கோட்பாட்டின் சட்ட வாக்கத்திலிருந்து பல மேற்கோள்களை பெற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. இம்மேற்கோள்கள் ஒரு இஸ்லாமிய நீதிபதியின் கண்ணோட்டத்திற்குட்பட்டவை என நினைக்கும் அளவு இஸ்லாத்துடன் தொடர்புபட்ட அம்சங்களாக காணப்பட்டன.)) என தெரிவித்தார்.

ரஜீவ்: அவ்வாறாயின் இஸ்லாத்திற்கும் ஏனைய மதங்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களைப் பற்றி பேசலாமே.

றாஷித்: ஒப்புநோக்க குறிப்பிட்ட ஓர் மதத்தை தெரிவு செய்யாததால் வித்தியாசங்களை கூறுவது கடினம். என்றாலும் இஸ்லாத்தின் சில பண்புகளை குறிப்பிட்டு அவற்றை ஏனைய மதங்களோடு ஒப்பிட்டு நோக்க முடியும்.

ராஜிவ்: ஆம், பரவாயில்லை.

றாஷித்: இஸ்லாமிய மதக்கோட்பாடுகளிள் மிக முக்கியமானவை:

முதலாவது: தெய்வீகக் கோட்பாடு; இதில் பிரதானமாக இரு விடயங்கள் நோக்கப்படும். அவை; அல்குர்ஆன் மற்றும் சுன்னா (நபியவர்களின் சொல், செயல், அங்கிகாரம்). இதில் மனிதனுடைய பங்களிப்பு யாதெனில், அவற்றிலிருந்து பெறப்பட்ட சட்டங்களை அன்றாட வாழ்க்கையில் அமுல்படுத்துவதாகும். மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவதே இதன்பிரதான நோக்கமாகும்.

இரண்டாவது: உறுதியானது மற்றும் நெகிழக்கூடிய தன்மைகளுக்கு மத்தியில் ஒன்று சேர்த்தல்; மார்க்கத்தில் உள்ள உறுதியான தன்மைகளை பொறுத்த மட்டில் அவற்றின் அடிப்படைகள் எந்நிலையிலும் மாறாதவை. நெகிழக்கூடிய பண்புகள் காலத்திற்கும், நிலைமைக்கும் ஏற்ற விதத்தில் மாற்றமடைபவை.

மூன்றாவது: காலத்தால், இடத்தால், மனிதனால், தீர்ப்பால் நிலையானது; எக்காலத்திலும் பொருந்தக் கூடிய மார்க்கம் என்பதை குறிக்கும். இடத்தால் என்பதன் அர்த்தம்; இஸ்லாம் சர்வ வியாபகமானது என்பதைக் குறிக்கும். மனிதனால் என்றால் முழுமனித சமூதாயத்திற்கும் பொதுவானது தீர்ப்பால் நிலையானது என்றால்; மனிதனுடைய பிறப்பு தொடக்கம் அவன் இறக்கும் வரையிலான அனைத்து கட்டங்களையும் உள்ளடக்கியது.

நான்காவது: நடை முறை சார்ந்த மார்க்க சட்டங்களை கணித்து அவற்றை நடைமுறைப் படுத்துவதில் மக்களின் நிலைபாட்டை கவனித்தல். அதாவது; இஸ்லாம் ஒருவருடைய உடல், ஆன்மா, ,சிந்தனை, தனிமனித, ,சமூகம் என அனைத்து பக்கங்களையும் உள்வாங்கக்கூடியது. அவற்றை (சட்டங்களை) அமுல்படுத்துவதிலுள்ள தனிமனித மற்றும் சமூக ஆற்றலை கவனத்திட் கொள்ளக் கூடியது.

ஐந்தாவது: நடுநிலைத் தன்மை; இஸ்லாமிய சட்டங்களை கடைபிடிப்பதில் அல்லது பின்பற்றுவதில் எவ்வித வரம்பு மீறலோ அல்லது குறைபாடோ அற்ற நடு நிலைப் போக்கை இது குறிக்கும். இந்நிலை ஒரு விடயம் வலுப்பெறுவதற்கும் நிலைத்திருப்பதற்கும் காரணமாகும். எடுத்துக் காட்டாக; இஸ்லாத்தில் தனி உடமையை பொருத்தமட்டில் கம்யூனிசத்தை போன்று முற்றுமுழுதாக மட்டுப்படுத்தப் பட்டதாகவோ அல்லது முதலாளித்துவத்தை போன்று எவ்வித வறையறையுமின்றி கட்டவிழ்த்துவிடப் பட்டதாகவோ அல்லாமல் நடுநிலைத் தன்மையை கொண்டதாக காணப்படுகிறது. இஸ்லாம் கோழைத்தனத்திற்கும் அடக்குமுறைக்கும் இடையிளான வீரத்தை ஆதறிக்கிறது. அவ்வாறே செலவீனமானது கஞ்சதனத்திற்கும் ஊதாரித்தனத்திற்கும் இடைப்பட்டதாக அமைய வேண்டுமென வழியுறுத்துகிறது.

இம்மை மறுமை கூலிகளுக்கிடையிலான ஒருங்கினைப்பு: இவ்வுலக நியதிகளுக்கு மாற்றம் செய்தால் வழங்கப்படும் தண்டனைகளில் மனித சட்டங்களுடன் இஸ்லாமிய சட்ட விதிமுறை உடண்படுகின்றன. அதேநேரம் (மனிதனால் இயற்றப்பட்ட) நேர்மறைச் சட்டங்களில் இருந்து தப்பிச்செல்லும் குற்றவாளிகள் மறுமையில் தண்டிக்கபடுவதாக இஸ்லாம் வாக்குறுதியளிக்கிறது. எனவே இம்மை மறுமையுடைய கூலிகளை தன்னகத்தே வகிக்கிறது.

இஸ்லாம் நலன்களிள் கவனம் செலுத்துவது மட்டுமின்றி அறிவியலையும் ஆதரிக்கிறது.

மைக்கல்: றாஷித்! நீங்கள் எப்பொழுதும் உங்கள் மார்க்கமே சிறந்தது என கூறுகிறீர்.

றாஷித்: நண்பரே! இது ஒரு மதவெறியோ சமயப் பிடிவாதமோ அல்ல. அப்படியென்றால் ஜேர்மனிய மிகப்பெரும் கவிஞர் கொத்: (( இஸ்லாமிய போதனைகளுடன் ஒப்பிடும் போது மேற்கத்திய சமய வழிமுறைகளோ மிக சொற்பமானவை. ஐரோப்பிய சமூகமான நாம் முஹம்மத் அடைந்த இலக்கை அடைய வில்லை. அதை எவராலும் அடைய முடியாது.)) எனக் குறிப்பிட்டுள்ளாரே. .இதற்கென்ன சொல்கிறீர்? இதை கூறுவதற்கு அவர் என்ன முஸ்லிமா?!.

ரஜீவ்: இறுதியாகக்கூரிய சிறப்பம்சத்தைப்பற்றி சரியான விளக்கம் தேவை!

றாஷித்: இஸ்லாம் அறிவியலுடன் உடண்பட்டது; இதற்கு சிறந்த உதாரனமாக இஸ்லாத்திள் மிருக அறுப்புமுறையை எடுத்துக் கொள்ளலாம்; அது குறிப்பிட்ட சில விலங்குகளாலும், நிபந்தனைகளாலும் வரையறுக்கப்பட்டது. அதைப்பற்றி ஆராய்வேம்.

இஸ்லாமிய அறுப்பு முறைப்படி ஒரு பிராணியின் கழுத்தை ஒரேயடியாக துண்டித்துவிடாமல் முதலில் அதன் நாளம் அறுக்கபடவேண்டும். இவ்வழிமுறையில் அறுக்கப்படும் பிராணி தசைகளை ஏதுவான முறையில் அசைப்பதால் போதுமான இரத்தம் உடலை விட்டும் வெளியேறும். ஆனால் இஸ்லாமிய முறை அல்லாத (அல்லாஹ்வின் பெயர் சொல்லாமல் அறுத்தல், வாயு போன்றவற்றை செலுத்திகொல்லுதல், தோட்டாக்களால் சுட்டுக்கொல்லுதல் போன்ற) வழிமுறைகளால் அறுக்கப்படும் பிராணியால் அதன் உடற்தசைகளை அசைக்க முடியாது போகிறது. இதனால் உடலை விட்டும் இரத்தம் வெளியேறாமல் அவ்வாறே தங்கி விடுகிறது. அவ்வாறு தேங்கி நிற்கக்கூடிய இரத்தத்தில் பல கிருமிகள் வளர்ச்சியடைந்து, அம்மாமிசத்தை மனிதன் சாப்பிடும்போது மனித உடலில் பல்வேறுபட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமன்றி இவ்வழிமுறை அப்பிரானியை மிக துன்புறுத்தகூடியது..

அது ஒருபுறம் இருக்க; ஒரு பிராணியை அறுப்பதற்கு ஏன் அல்லாஹ்வின் பெயரை கூற வேண்டும் என்ற ஒரு கேள்வி எழலாம். ஆம், அது என்னவென்றால் இஸ்லாத்தில் ஒவ்வொரு அம்சமும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதோடு தொடர்புபட்டுடிருக்கிறது வாழ்க்கையிலுள்ள மிகப்பெரும் கேள்விகளான அல்லாஹ், பிரபஞ்சம், மனிதன் மீண்டும் செல்லுமிடம், என்பன போன்ற அனைத்து விடயங்களும் பூரண அமைப்பில் மார்க்கத்துடண் தொடர்புபட்டவை. மனிதன் ஒரு படைப்பினமாக இறைவனின் அனுமதியின்றி இன்னொறு படைப்பினத்தின் உயிரை பறிக்கவோ அல்லது அவ்விடயத்தில் எல்லை மீறி செல்லவோ தகுதியற்றவன். எனவே அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரை குறிப்பிடுவது அவனுடைய அனுமதியில் அறுப்பதை போன்றாகும். ஒரு முஸ்லிமைபொருத்த மட்டில் அவன் முற்றுமுழுதாக அல்லாஹ்வை வழிப்படுவதை நோக்காக கொண்டிருப்பதால், அல்லாஹ்வின் அனுமதியின்றி எக்காரியத்தையும் புரிய அவனுக்கு ஆகுமாகாது.

மைக்கல்:ஆம், நீங்கள் கூறுவதை நான் ஏற்கிறேன். இஸ்லாத்தைப் பற்றி முழுமையாக அறிய பல ஆய்வுகளை மேறகொள்ள வேண்டியிருக்கிறது.




Tags: